Monday, March 02, 2009

கலைஞர் , அரசு, மருத்துவமனையில் ?


அன்புள்ள
முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

  1. நீங்கள் உண்மையாக அரசு மருத்துவமனையை நம்புகிறீர்கள் என்று அர்த்தம்.
  2. நீங்கள் வருவதனால் அரசு மருத்துவமனை புதிப்பிக்கப்படும்.
  3. நீங்கள் செல்லும் சாலை புதிதாக போடப்படும்.
  4. ஏழை மக்கள் நம்பிக்கையுடன் இனி அரசு மருத்துவமனைக்கு செல்வார்கள்.
  5. அங்கே நல்ல ஏற்பாடுகள் செய்யப்படும், தேவையான அனைத்தும் வாங்கபடும் ( facilities), சூழ்நிலை சரியாகப்படும்.
  6. மருத்துவர்கள் சரியான மணிக்கு வருவார்கள்.
  7. லஞ்சம் இருக்காது.
  8. இப்படி ஒரு பெரிய மாறுதல் உங்களால் ஏற்பட்டு இருக்கும்.
அன்பு கலைஞர் அவர்களே, என்றைக்கு உங்கள் பேரன் மற்றும் பேத்திகள் தமிழ் வகுப்பில் அதுவும் ஒரு அரசு பள்ளிகளில் படிகிறர்களோ, அன்று தான் ஒரு உண்மை தமிழன், ஒரு திமுக தொண்டனின் கஷ்டம் உங்களுக்கு புரியும்.

தமிழ்! தமிழ்! என்று சொல்லிவிட்டு உங்கள் வீட்டு பிள்ளைகள் மட்டும் ஹிந்தி கற்று மத்திய அமைச்சராக சுற்றுகிறார்கள்.

தமிழனே, விழித்துகொள் இன்னும் எத்துனை நாள் தான் இப்படி 100 மற்றும் 200 ரூபாய்க்கு உன் சுயமரியாதையை விற்று பிழைப்பாய்.
உன் தலைவன் பாராட்டி விட்டாரு என்று அடி மாடு போல் உழைப்பதை நிறுத்து நண்பா. உன் குடும்பம் காசு இல்லாமல் அடிப்படை வசதி இல்லாமல் கஷ்டப்படும் இந்நேரம் உன் தலைவர்கள் எல்லாம் உன்னோட உழைப்பில் உல்லாச வாழ்கையில் உலா வருகிரர்கள்.

நீங்கள் எல்லாம் சிந்திக்க கூடாது என்றே உங்கள் பிள்ளைக்கும், நல்ல கல்வி கொடுப்பது இல்லை.

எந்த அரசியல் வாதியும் உண்மையாக உங்களுக்கு சேவை செய்யபோவது இல்லை.

திமுக, அதிமுக, தேமுக, மற்றும் பலரும் மக்களுக்கு சேவை செய்ய தானே வருவதாக சொல்றாங்க ?

அப்படி அது உண்மை என்றல் ஒரு IAS கலெக்டர் கட்சி ஆரமபிச்சா, அதுக்கு இவர்கள் ஆதிரவு கொடுபர்ர்களா ?

ஒரு சென்ட்ரல் மற்றும் ஸ்டேட் உழியர் ஓய்வு பெற வயது வரம்பு 58 அல்லது 60 ஆனால் நம்மை ஆளும் ஒரு அரசியல்வாதி வயது 80 + ... 60 +.
கட்சி ஆரம்பிக்கும் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள். சினிமாகாரர்கள் வயது ஆகி சினிமாவில் நடிக்க முடியாத என்ற நிலை வரும்பொது கட்சி ஆரம்பித்து காசு பார்கிறார்கள்.

நிருபர் - எதுக்கு சார் கட்சி ஆரம்பிச்சிங்க
புது கட்சி தலைவர் - எனக்கு MP சிட்டு தரல கட்சி ஆரம்பிச்சாச்சு .

ஒரு கிராமத்துல இருந்து ஒருத்தர் வந்தாரு அவரோட சொத்து மதிப்பு வெறும் ஆயிரங்கள் , இன்னைக்கு அவரோட சொத்து மதிப்பு கோடன கோடி.

ஒரு அணில் அம்பானிக்கூட இத்துணை கோடி இருக்காது. இது எல்லாம் மக்கள் வரி பணம் ... கவிதை நடையான கவர்ச்சியான பேச்சு மற்றும் எழுத்து வைத்து எப்படி மக்களை ஏமாற்றி ஒரு ஆடு போல மாற்றி சம்பாரிச்சு எதை எடுத்து கொண்டு போக போறீங்க ?

இன்னைய தேதிக்கு பெரிய பிசினஸ் என்னன்னா அரசியல்.

மக்களே, பத்திரிக்கை நண்பர்களே, இளமை இந்தியர்களே ! புதியதோர் தமிழ்நாடை உருவாக்குவோம் !

வணக்கம்
அன்பு தமிழன் - இந்தியன்
சுரேஷ்
கலைஞர் , அரசு, மருத்துவமனையில் ?SocialTwist Tell-a-Friend

121 comments:

Anonymous said...

Good... நிறைய எழுதுங்கள்!
-என்வழி

அபுஅஃப்ஸர் said...

நல்ல எழுச்சி உங்கள் எழுத்தில்

இதெல்லம் நிறைய மக்களுக்கு சென்று அடையனும் என்று வாழ்த்துகிறேன்

Suresh said...

//நன்றி நன்றி அபு! உங்கள மாதிரி மக்களின் ஆசிர்வாதம் மற்றும் பின்னோட்டம் தான் என்னை மாதிரி ஆரம்பகட்ட மக்களுக்கு உத்வேகம்//

ரவிசங்கர் said...

கலைஞர் தமிழக அரசு மருத்துவமனைக்கு வந்தால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்

ஒன்றும் புரியவில்லை! said...

அருமையான பதிவு! இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்!

Suresh said...

@ ஒன்றும் புரியவில்லை!

இது முதல் பதிவு, எனவே கொஞ்சம் சுருக்க்காகமா முடித்துவிட்டேன் , கண்டிபாக உங்களை போன்ற நல்ல ரசிகர்களுக்கு மேலும் மேலும் நல்ல பதிவும் நல்ல கருத்துகளும் தர விரும்புகிறேன்
உங்களுடைய வருகைக்கும் பின்நோட்டதுக்கும் நன்றி

முடிஞ்ச தமிழிச்ல ஒரு வோட்டு போடுங்க , யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

ஆனந்த். said...

சும்மா நச்சுனு இருக்கு நண்பரே, வாழ்த்துக்கள்.

ஆனந்த். said...

பதிவு நன்றாக உள்ளது . கொஞ்சம் எழுத்துப்பிழை களை மட்டும் பார்த்து சரி செய்யுங்கள் , உதா; - கருணாநிதி என்பதை கருணாநதி என்பது, நன்றி தொடருங்கள் ...

Suresh said...

@ ஆனந்த்

ஹா ஹா நன்றி
நண்பரே உங்களோட பிரொபைல் போட்டோ பார்த்து அசந்துட்டேன்
சும்மா அதிருதுலே , அழகா இருகாங்க .

நாங்க எல்லாம் எப்பவுமே நினைப்போம் :-)

உங்களுடைய வருகைக்கும் பின்நோட்டதுக்கும் நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

//Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.
//

அண்ணே என்னோட பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டீங்க. மிக்க நன்றி. ஆனா ஆசிர்வாதம் அது இதுன்னு என்னைய பெரிய மனுஷன் ஆக்கிடீங்களே!!!!

நான் ரொம்ப ச்சின்னப்பையன் அண்ணே :)

Suresh said...

@ ஆனந்த்

மிக்க நன்றி பிழையை சுட்டி கட்டியதற்கு , உதாரணம் சொல்லியது ரொம்ப உதவிய இருந்தது, கண்டிப்பாக வரும் பதிவுகளில் திருத்தி கொள்கிறேன்

திலீபன்- said...

மீண்டும் உங்கள் பணியை தொடங்கியதற்கு வாழ்த்துகள்.நிறைய எழுதுங்கள்.

மோகன் கந்தசாமி said...

ஆகா சுரேஷு,

பதிவு செமகிழி கிழிக்குதே!!! அலப்பறை கோஷ்டிகளை தொடர்ந்து கிழிக்கவும். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

Suresh said...

@ மோகன் கந்தசாமி

கண்டிப்பாக உங்களை போன்ற எழுத்துக்கள் என்னை தூண்டியது
தலைவா, நல்ல எழுத முயற்சி செய்கிறேன்.

Suresh said...

@ திலீபன்

நன்றி நன்றி :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

நேர்மையான பதிவு சுரேஷ்.. நல்லா எழுதுறீங்க.. படிச்சு மக்கள் திருந்தினா சரி.. வாழ்த்துக்கள்..

Suresh said...

@ கார்த்திகைப் பாண்டியன்

நன்றி பாண்டியன்!

நம்ம மாதிரி எல்லாரும் முயற்சி செய்வோம் கண்டிப்பாக தமிழ்நாடு மோசமான அரசியல்வாதிகள் இல்லாம புணர்ச்சி பெரும்

வேத்தியன் said...

வந்தேன்...
இருங்க படிச்சுட்டு வரேன்...

வேத்தியன் said...

நீங்கள் வருவதனால் அரசு மருத்துவமனை புதிபிக்கப்படும்.//

ஆரம்பமே சூப்பர்...

வேத்தியன் said...

லஞ்சம் இருக்காது. //

பொய் மாதிரி தெரியல???
:-)
சும்மா உல்லூலாயிக்குங்க...

வேத்தியன் said...

ஒரு கிராமத்துல இருந்து ஒருத்தர் வந்தாரு அவரோட சொத்து மதிப்பு வெறும் ஆயிரங்கள் , இன்னைக்கு அவரோட சொத்து மதிப்பு கோடன கோடி.//

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

வேத்தியன் said...

இன்னைய தேதிக்கு பெரிய பிசினஸ் என்னன்னா அரசியல்.//

அப்பட்டமான உண்மை...

வேத்தியன் said...

கலக்கல் பதிவு நண்பரே...
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்...

Suresh said...

@ வேத்தியன்

// லஞ்சம் இருக்காது. //

//பொய் மாதிரி தெரியல??? :-) சும்மா உல்லூலாயிக்குங்க...//

அன்றைக்கு ஒரு நாளாவது லஞ்சம் இருக்காது :-) கரணம் அவர்களே நிறைய கொடுப்பாங்க பாஸ் :-)

எட்வின் said...

உண்மையை உரக்க சொல்லியிருக்கிறீர்கள்
சரியான நெத்தியடி...
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Suresh said...

@ வேத்தியன்

//கலக்கல் பதிவு நண்பரே...
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்//

நன்றி உங்கள் பின்னோட்டம் ஒரு புது உத்வேகத்தை அளிக்கிறது :-)

வேத்தியன் said...

ஓட்டுப் போட்டாச்சுங்கோ...

ஆதவா said...

ஹாஹாஹ்..... கலக்கல்....

சிரிக்கவும் , சிந்திக்கவும் செய்தீர்கள்!!!

நிறைய எழுதுங்கள்... ஆனால் தனிநபர் தாக்குதலை குறைத்துக் கொள்ளலாம்.. இது சும்மா ஜஸ்ட் அட்வைஸ்..

தொடர்ந்து எழுதுங்கள்.....n

ஆதவா said...

இந்த பதிவுக்கு என் ஓட்டும் உண்டு!!!

Suresh said...

@ ஆதவா

நன்றி ஆதவா :-) உங்களோட அட்வைஸ் ரொம்ப மதிப்பு மிக்கது, கண்டிப்பா
தனிநபர் தாக்குதலை குறைத்துக் கொள்கிறேன்

Suresh said...

@ எட்வின்

நன்றி நண்பா :-) உங்களோட பின்னோட்டம் தான் இப்போ என்னோட எழுத்தோட உயிரோட்டம்

Vaanathin Keezhe... said...

வாழ்த்துக்கள் சுரேஷ்...
முதல் பின்னூட்டம் இட்டதே 'என்வழி'தான்...கவனிக்கவில்லையோ!

நிறைய எழுதுங்க... மற்ற பிளாக்ஸ் பாக்கமா எழுதுங்க... எழுதின பிறகு அவற்றைப் பாருங்க.

அன்புடன்
வினோஜாஸன்
www.envazhi.com

மாதவராஜ் said...

நண்பரே!

”இங்கு வியாபாரம் செய்ய வந்தவர்கள் அரசியல் செய்தார்கள்.
அரசியல் செய்ய வந்தவர்கள் வியாபாரம் செய்தார்கள்”
வைரமுத்துவின் இந்தக் கவிதைவரிகளே
எங்கும் எதிரொலிக்கிறது. என்ன செய்ய..? அந்த வைரமுத்துவுக்கும் இவரே தானைத்தலைவர்!

ஆனந்த். said...

ஐயோ, அண்ணாத்தே, இந்த குழந்தையை மதிச்சி, நம்ம கூட வரயே? தேங்க்ஸ் பா...

Suresh said...

@ மாதவராஜ்
நன்றி நண்பரே

@ ஆனந்த்

ஏதோ கூடிக்கிட்டு ஓடி போகபோற மாதிரியே பேசுறிங்களே ஹி ஹி

Suresh said...

@ மாதவராஜ்
அருமையான கவிதை சரியான நேரத்தில் மேற்க்கொளிட்டு காட்டினதுக்கு நன்றி!

NTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

benzaloy said...

தொடருங்கள் --- புதிய வகை சிந்தனை சமுக மேம்பாடின்
முதல் படி --- அரசியலில் மக்களுக்கு ஒரு நியதி தனது
பிள்ளைகளுக்கு இன்னோர் நியதி ---

இந்த இரட்டை
நாடகத்தை முற்றாக அழிக்க ஒரு வழி --- அரசியலில்
பிரவேசிக்க அடிப்படை தகுதிகளை வரையறுப்பது ---
மற்றும் வருசா வருஷம் உடைமைகள் சமர்பிப்பது.

இளயசமுதாயமே செய்வாயா ? அல்லது நீயும் தருணம்
வரும்போது புறங்கையை நாக்கால் வருடுவாயா ? !

இது தான் எனது கேள்வி !

RAMYA said...

சுரேஷ், என்னா இது??
இவ்வளவு அழகா எழதி இருக்கீங்க

பிடிச்சாவா?? நீங்கள் எழுதி இருப்பது எல்லாம் என் மனதில் எப்பொழுதும் ஓடிக்கொண்டு இருக்கும் எண்ண அலைகள் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க தொடரவும் உங்க எழுத்துப் பணி.

RAMYA said...

ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ளே
குமுறிக் கொண்டு இருக்கும் உணர்ச்சிகள்
நான் அவ்வளவா அரசியல் பேச மாட்டேன், ஆனாலும் மக்கள் நலன் பற்றி யோசித்துக் கொண்டு இருப்பேன்.

என்று விடியும் நம் மக்களின் அன்றாட தேவைகள்??? இப்படி எவ்வளவோ இருக்கின்றது சுரேஷ்.

நீங்கள் கூறி இருக்கும் அரசியல் என்று
வருகின்றதோ அன்று நம் மக்கள் சிரிப்பார்கள், நிறைய சிந்திப்பார்கள் அவர்களிடமும் நிறைய எழுச்சிகளைக் காணலாம்.

RAMYA said...

நல்லா எழுதறீங்க, இன்னும் நிறைய எழுதுங்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சுரேஷ் !!!

Suresh said...

@ benzaloy

//அரசியலில்
பிரவேசிக்க அடிப்படை தகுதிகளை வரையறுப்பது ---
மற்றும் வருசா வருஷம் உடைமைகள் சமர்பிப்பது.//

கண்டிப்பாக ஒரு நல்ல வரைமுறை வேணும் 5 வருட முடிவில் அவர்களது சொத்து மதிப்பு அவர்களுடைய 5 வருட ஊதியம் மட்டுமே இருக்கனும்

இளயசமுதாயம் இந்த கனவை உண்மையாக்கும்

Suresh said...

@ RAMYA said...

//பிடிச்சாவா?? நீங்கள் எழுதி இருப்பது எல்லாம் என் மனதில் எப்பொழுதும் ஓடிக்கொண்டு இருக்கும் எண்ண அலைகள் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க தொடரவும் உங்க எழுத்துப் பணி.//

கண்டிப்பாக நாங்களும் நண்பர்களும் பேசும் பொது பெரிய ஆதங்கம் இருக்கும் எப்ப தான் இந்தியா அழகா மாறுமென்று

நம்மளை மாதிரி இளமை இந்தியர்கள் கண்டிப்பா எழுச்சி பெறணும் :-)

உங்களோட வருகைக்கும் அன்புக்கும் ஊக்கத்துகும் நன்றி தோழி

Suresh said...

@ RAMYA said...

//சுரேஷ், என்னா இது??
இவ்வளவு அழகா எழதி இருக்கீங்க//

என்னை வச்சி காமெடி கிமெடி பண்லையே ஹி ஹி :-)

Suresh said...

@ Ramya
//நான் அவ்வளவா அரசியல் பேச மாட்டேன், ஆனாலும் மக்கள் நலன் பற்றி யோசித்துக் கொண்டு இருப்பேன்

என்று விடியும் நம் மக்களின் அன்றாட தேவைகள்??? இப்படி எவ்வளவோ இருக்கின்றது சுரேஷ்.//

நானும் அரசியல் பேச மாட்டேன், ஆனாலும் பேசவ்ச்சிடாங்க
கண்டிப்பா இந்தியா மாறும் அது நம்மள மாதிரி இளம் இந்தியர்கள் கைகளில் தான் உள்ளது.

Suresh said...

@ Ramya //நல்லா எழுதறீங்க, இன்னும் நிறைய எழுதுங்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சுரேஷ் !!!//

நன்றி நன்றி

உங்கள மாதிரி மக்களின் அன்பு மற்றும் பின்னோட்டம் தான் என்னை மாதிரி ஆரம்பகட்ட மக்களுக்கு உத்வேகம்

Maximum India said...

அன்புள்ள சுரேஷ்

நல்ல சிந்தனைகள் அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

என்னுடைய கருத்து இதோ.

கலைஞர் போன்ற பல அரசியல்வாதிகள், நாட்டுக்கு உழைக்க வேண்டுமென்ற நல்ல புரட்சிகரமான சிந்தனைகளோடே தமது அரசியல் வாழ்கையை ஆரம்பிக்கின்றனர். ஆனால், காலம் மற்றும் அரசியல் களம் அவர்களை மாற்றி விடுகிறது. குடும்ப பாசம், ஈகோ, பதவி ஆசை, பணத்தின் மீது ஏற்படும் அளவற்ற அபிமானம் போன்றவை அவர்களது ஆரம்ப கால லட்சியங்களை மங்கச் செய்து விடுகிறது. இந்த விஷயங்கள் கலைஞருக்கு மட்டுமல்ல நேற்றைக்கு கட்சி ஆரம்பித்த விஜய் காந்த் வரை ஏன் நாளைக்கு அரசியலில் சேர ஆசைப் படும் இளைஞர்கள் வரை உள்ள அரசியல்வாதிகள் அனைவருக்கும் பொருந்தும்.

இதற்கு விடிவு நம்மைப் போன்ற இளைஞர்களிடம்தான் உள்ளது. அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லாமல் நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தையே மாற்ற வேண்டும். நல்ல சமுதாயத்திலிருந்துதான் நல்ல அரசியல்வாதிகள் தோன்றுவார்கள். மாற்றங்களை ஏற்படுத்துவது வெறும் போதனைகள் செய்து மட்டும் அல்ல. மற்றவர்களுக்கு நல்ல ரோல் மாடல்களாக வாழ்ந்து காட்டி. செய்ய முன் வருவார்களா நம் இளைஞர்கள்?

மாற்றங்களை நம்மிடமிருந்தே தொடங்குவோமே!

நன்றி.

Maximum India said...

டெல்லியில் உள்ள AIIMS அரசு மருத்துவமனையில் பிரதமர் முதல் பெரிய தலைவர்கள் அனைவரும் சிகிச்சை எடுத்துக் கொள்வது குறிப்பிடத் தக்கது. அந்த அளவு நம்பகத்தன்மை உள்ள அரசு மருத்துவமனை தமிழகத்திற்கும் ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும்.

நன்றி.

தமிழர் நேசன் said...

எழிய நடையில் உண்மை...

வாழ்த்துக்கள்

Suresh said...

@ தமிழர் நேசன்

உங்கள் வருகைக்கும் பின்னோடதுக்கும் மிக்க நன்றி !

Suresh said...

@ Maximum India

//இதற்கு விடிவு நம்மைப் போன்ற இளைஞர்களிடம்தான் உள்ளது. அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லாமல் நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தையே மாற்ற வேண்டும். நல்ல சமுதாயத்திலிருந்துதான் நல்ல அரசியல்வாதிகள் தோன்றுவார்கள். மாற்றங்களை ஏற்படுத்துவது வெறும் போதனைகள் செய்து மட்டும் அல்ல. மற்றவர்களுக்கு நல்ல ரோல் மாடல்களாக வாழ்ந்து காட்டி. செய்ய முன் வருவார்களா நம் இளைஞர்கள்?

மாற்றங்களை நம்மிடமிருந்தே தொடங்குவோமே!//

நல்ல பின்னோட்டம் ,நல்ல சிந்தனை தூண்டல்.

தென்னூர் அருகே ஒரு இளைஞர் நல்ல அருமையான தொண்டு செய்கிறார், தன்னோட அமெரிக்க சாப்ட்வேர் வேலையே ராஜினாமா செய்து இப்போது அந்த பணத்தை கொண்டு நல்ல கல்வி, நல்ல ஆஸ்பத்திரி போன்ற அத்தியாவசிய தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்கிறார்.

நம்ம எல்லரும் நம்மால கண்டிப்பாக முடிந்த எழுச்சியை செயலில் செய்வோம்.

Suresh said...

@ Maixmum India
//டெல்லியில் உள்ள AIIMS அரசு மருத்துவமனையில் பிரதமர் முதல் பெரிய தலைவர்கள் அனைவரும் சிகிச்சை எடுத்துக் கொள்வது குறிப்பிடத் தக்கது. அந்த அளவு நம்பகத்தன்மை உள்ள அரசு மருத்துவமனை தமிழகத்திற்கும் ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும்.//

நல்ல எடுத்துக்காட்டு கண்டிப்பாக இதை உரக்க சொன்னால் விழும் :-)

தேனியார் said...

சுரேஸ் இன்றுதான் தங்கள் பதிவைப் பார்த்தேன். பிரமாதம். நடுநிலையானக் கண்ணோட்டம். யாரையும் தனிப்பட்டமுறையில் தாக்காதவரையில் தங்கள் கருத்து அனைவரையும் சேரும் என்பதில் ஐயமில்லை.

ஏனென்றால் எல்லாமே ஒரேக் குட்டையில் ஊரிய மட்டைகள்தானே.அதில் ஒரு மட்டையைதானே எமக்கும் தொடர வழி இருக்கிறது என்பதே உண்மையாக உள்ளது.

IAS ஆட்களெல்லாம் சேர்ந்து ஆரம்பித்து ஒரு தேர்தலிலி நின்றவர்களும், பின் சாதியவேறுபாடுகள் காட்டி முக்கத்தில் கரி பூசியவர்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.

அருமையானப் பதிவு.

Suresh said...

@ தேனியார்

//சுரேஸ் இன்றுதான் தங்கள் பதிவைப் பார்த்தேன். பிரமாதம். //
நன்றி நண்பரே

//நடுநிலையானக் கண்ணோட்டம். யாரையும் தனிப்பட்டமுறையில் தாக்காதவரையில் தங்கள் கருத்து அனைவரையும் சேரும் என்பதில் ஐயமில்லை.//

ரொம்ப சந்தோசம் நீங்க சொன்னது ரொம்ப ஊக்கம் தருது .


ஏனென்றால் எல்லாமே ஒரேக் குட்டையில் ஊரிய மட்டைகள்தானே.அதில் ஒரு மட்டையைதானே எமக்கும் தொடர வழி இருக்கிறது என்பதே உண்மையாக உள்ளது.

//IAS ஆட்களெல்லாம் சேர்ந்து ஆரம்பித்து ஒரு தேர்தலிலி நின்றவர்களும், பின் சாதியவேறுபாடுகள் காட்டி முக்கத்தில் கரி பூசியவர்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.//

IAS வேணாம் நல்ல படித்த இளைஞர்கள் வேணும்.

உங்களுடைய வருகைக்கும் பின்நோட்டதுக்கும் நன்றி

கோவி.கண்ணன் said...

நல்ல பதிவு. அந்த அம்மா எது செய்தாலும் வெளியே தெரிவதில்லை. கலைஞர் எது செய்தாலும் வெளியே தெரிந்துவிடுகிறது. சாமார்த்தியம் பத்தலை என்று நினைக்கிறேன்.

:)

Suresh said...

@ கோவி.கண்ணன் )

ஹி ஹி சரியாக சொன்னிங்க போங்க :-)
உங்களுடைய வருகைக்கும் பின்நோட்டதுக்கும் நன்றி

விமல் said...

நல்ல சிந்தனை மற்றும் எழுத்து நடை..
எழுத்துப் பிழைகளைச் சரி செய்து கொள்ளுங்கள்..
தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துக்கள் !!

மகா said...

அருமையான பதிவு. இன்னும் நிறையா எழுதுங்கள்

Anonymous said...

http://www.tamilwin.com/view.php?2a36QVF4b33Z9EEe4d46Wn5cb0bf7GU24d2YYpD3e0dpZLu2ce03g2hF0cc2tj0Cde

எம்.ஜி,ஆர். தமிழக முதல்வராக இருந்த 1985 களில் ''டெசோ'' கூட்டங்களில் கலைஞர் பேசியதை, தற்போது மற்றவர்கள் பேசினால் சிறையில் தள்ளுவது ஏன்?

Anonymous said...

உலக தமிழ் தலைவனின் நிலை :

1. எதிர் கட்சி யா இருக்கும் போது : போராட்டம், பொது கூட்டம், உண்ணா விரதம் எல்லாம்
2. ஆளுங் கட்சி யா இருக்கும் போது : வெறும் அறிக்கை, தீர்மானம் ... எல்லாம் காகிதத்தில் மட்டுமே. இவர் எண்ணம் எல்லாம்

ஆட்சி, பதவி, பணம், குடும்பம், சொத்து மட்டுமே....
3. இவர் மிக பெரிய நடிகர் .... ராஜா தந்திரி ...
4. இவருக்கு இப்போதைய பட்டம் : தமிழின துரோகி .....

இவர் சொத்து 85000 மதிப்பு கோடி

Suresh said...

@ மகா

நன்றி நன்றி தோழி

Suresh said...

@ விமல

கண்டிப்பாக வரும் பதிவுகளில் எழுத்துப்பிழையை திருத்தி கொள்கிறேன்.
நம்ப படிப்புல கொஞ்சம் வீக் :-) அதுனால தான் கலெக்டர் ஆகாம எப்படி சாப்ட்வேர் தொழில்ல குப்பை கொட்டுறேன் :-)

Anonymous said...

nalla sindhanai

Bleachingpowder said...

வாங்க...வாங்க... வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க

Suresh said...

@ அனானி
உங்கள் அனைவர்க்கும் நன்றி :-)
அப்படியே உங்கள் பெயரும் மின்அஞ்சல் போடலாமே!

Suresh said...

@ Bleachingpowder

ஹி ஹி எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான் :-)

நிலாவன் said...

வந்துட்டேங்க சுரேஷ்

அப்துல்கலாம் அவர்கள்
ஒரு பள்ளி கூடத்தில் மாணவர்களிடம்
நீங்கள் பெரியவர்களாக ஆனவுடன் என்னவாகப்போகிறிர்கள்
என்று கேட்டாராம் அதற்கு மாணவர்கள் நாங்கள் docter,engineer,bank manager
என்று கூறினார்களாம். யாருமே அரசியல்வாதியாக யாரும் விருப்பம்
தெரிவிக்க வில்லையாம் அதற்கு படித்தவர்கள் அரசியலுக்கு
வரவேண்டும் என்று கூறினாராம் .

நாமெல்லாம் குதிச்சிருவோமா

கார்த்திக் said...

இத்தனைபேருக்கு பிடிச்சது எனக்கு மட்டும் பிடிக்காமல் போகுமா என்ன...? சூப்பாரா எழுதியிருகிறீங்க. இன்னும் நிறைய எழுதுங்க.......

Suresh said...

@ நிலாவன்

நன்றி நிலாவன்

நானும் அப்துல் கலாம் ரசிகர்

நீங்க சொல்லிடிங்க குதிச்சிருவோம்
ஆனா என்ன பதிவுல கிடைக்குற வோட்டு கூட கிடைக்காது
இருந்தாலும் விட முயற்சி செஞ்சு வெற்றி பெறுவோம் :-)

அக்னி பார்வை said...

அதெல்லாம் சரி அரசு மருத்துவமனைக்கு போன உயிருக்கு கேரண்டி...

நிறைய எழுதுங்கள் சுரேஷ்

Suresh said...

@ கார்த்திக் ,நிலாவன்

உங்களின் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி !

Suresh said...

அக்னி பார்வை
//அரசு மருத்துவமனைக்கு போன உயிருக்கு கேரண்டி//

அதுனால தானே சொல்றோம் :-) எத்துனை ஏழை நண்பர்கள் தாய்மார்கள் தம்பிகள் சரியான வைத்தியம் கிடைக்காம இருக்காங்க

enpaarvaiyil said...

படிக்க படிக்க புல்லரிக்கிறது.
சுயநலம் என்று ஒழிகிறதோ அன்றுதான் நாட்டிற்கு நல்ல காலம் பிறக்கும்
அனைத்தையும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் தலைவன் ஒருவனால் மட்டும்தான் மக்களுக்கு நல்லாட்சி தர முடியும்.
ஆனால் இதை படிக்க வேண்டியவர்கள் படிக்கவேண்டுமே
தொண்டர்களுக்கு இதெல்லாம் புரியாது
அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் கொடுத்துவிட்டு
அவர்கள் அவர்களுக்கு வேண்டியதை மொத்தமாக சுருட்டிக்கொள்வார்கள்
உங்கள்போன்றவர்கள் எங்களைபோன்றவர்கள் வோட்டு போட கூட
வாக்கு சாவடி பக்கம் ஒதுங்கமாட்டோம்.
போனால் திரும்பி உயிரோடு வருமா என்று நிச்சயம் இல்லை
நம்முடைய ஓட்டை வேறு யாராவது கள்ள வோட்டு போட்டுவிட்டால் கூட வாயை திறவாமல் திரும்பித்தான் வர வேண்டும்
ஒரு மகாத்மா காந்தி மீண்டும் பிறந்து வந்தால்
அப்போது அவருடன் சேர்ர்ந்து கொண்டு
நாட்டை திருத்த முயற்சி பண்ணலாம்.
வாயை திறந்தால் எவன் எந்த இடத்தில் உதைப்பான் என்று தெரியாது
பாதுகாப்பு தருபவனே போட்டு போட்டு தாக்குகிறான்
உரிமையை காப்பாற்றி தரும் நீதிமன்றத்திலேயே பாதுகாப்பு இல்லை.
உதைபட நமக்கு தெம்பில்லை.தம்பி
அதுவரை இணைய தளத்தில்வயித்தெரிச்சலை
கொட்டி தீர்த்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை.
..

தண்டோரா said...

நிறைய எழுதுங்கள்..நாம் சொல்லி இவர்கள் திருந்த போவதில்லை...ஆனால் ஒரு சிலருடைய கண்ணையாவது திறக்க முயற்ச்சிப்போம்.

தண்டோரா said...

நிறைய எழுதுங்கள்..நாம் சொல்லி இவர்கள் திருந்த போவதில்லை...ஆனால் ஒரு சிலருடைய கண்ணையாவது திறக்க முயற்ச்சிப்போம்.

நவநீதன் said...

நைனா...!
அவரும் அப்பாலிக்கா ஜி.ஹெச்ல வந்து குந்திகினார்னு வைய்யி, அவருக்கும் நமக்கும் வித்யாசமில்லாம போயிரும்ப்பா...! அப்பரம் அவரு அரசியல் யாவாரம் எப்டி பண்றது...?

நல்லா எழுதீருக்கீங்க தலைவா...!
இன்னும் நிறைய எழுதுங்க....!
உங்கள் சேவை, வலையுலகத்திற்கு தேவை...!

Mahesh said...

நல்ல பதிவு சுரேஷ்... ஆரம்பமே காட்டமா இருக்கு :) அப்பிடியே டாப் கியர்ல போங்க...

ஒண்ணு சொல்லணும்... "எங்கும் இருப்பேன் தமிழ் காற்றாய்"னு சொல்லிட்டு Love Lifeனு இங்லீஷ்ல பேரு வெச்சுருக்கீங்களே :(

thevanmayam said...

தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு உங்கள் வீட்டு பிள்ளைகள் மட்டும் ஹிந்தி கற்று மத்திய அமைச்சர் என்று சுற்றுகிறார்கள்.///

உண்மைதான்!

Suresh said...

@ enpaarvaiyil
//ஒரு மகாத்மா காந்தி மீண்டும் பிறந்து வந்தால்
அப்போது அவருடன் சேர்ர்ந்து கொண்டு
நாட்டை திருத்த முயற்சி பண்ணலாம்.//

நீங்கள் சொல்வது சரி கண்டிப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் எவருக்கும் ஆபத்து இருக்கிறது.

இன்னொரு மகாத்மா என்று நான் ஒரு புத்தகம் எழுதுகிறான் எப்போது அதில் இருக்கும் சாராம்சம் மட்டும் உங்களுக்கு சொல்கிறேன்.

இன்னொரு மகாத்மா யார் என்று நீங்கள் உங்கள் வீட்டு கண்ணாடியில் பார்க்கவும்
ஆமாம் நீங்கள் மகாத்மா. இனிமேல் பிறந்த வரணும் ?
நம் எல்லாரும் கண்டிப்பாக ஒரு முயற்சி செய்யலாம். என்ன சொல்றிங்க ?

thevanmayam said...

# நீங்கள் உண்மையாக அரசு மருத்துவமனையை நம்புகிறீர்கள் என்று அர்த்தம்.
# நீங்கள் வருவதனால் அரசு மருத்துவமனை புதிபிக்கப்படும்.
# நீங்கள் செல்லும் சாலை புதிதாக போடப்படும்.
# ஏழை மக்கள் நம்பிக்கையுடன் இனி அரசு மருத்துவமனைக்கு செல்வார்கள்.
# அங்கே நல்ல ஏற்பாடுகள் செய்யப்படும், தேவையான அனைத்தும் வாங்கபடும் ( facilities), சூழ்நிலை சரியாகப்படும்.
# மருத்துவர்கள் சரியான மணிக்கு வருவார்கள்.
# லஞ்சம் இருக்காது.
# இப்படி ஒரு பெரிய மாறுதல் உங்களால் ஏற்பட்டு இருக்கும்///

நல்லா சொல்லி இருக்கிறீர்கள்!!

Suresh said...

@ thevanmayam

உங்களுடைய வருகைக்கும் பின்நோட்டதுக்கும் நன்றி

thevanmayam said...

ஓட்டும் போட்டாச்சு!!!
நடுவில் எழுத விட்டுவிட்டீர்களா/

Suresh said...

@ Mahesh

உங்கள் ஆசிர்வாதத்துடன் கண்டிப்பாக நல்ல பதிவுகளை கொடுக்க உழைப்பேன்.

தமிழ் கற்றை இருக்கும் நான் தமிழ் மட்டும் பேசுங்கள் என்று அரசியல்வாதி மாதிரி சொல்லி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. மற்ற மொழிகளும் தெரியனும், தமிழ் என் தாய் மொழி அதலால் பற்று அதிகம் :-) அதுமட்டுமே பேசவோ எழுதவோ வேண்டும் என்று சொல்லி ஒரு அரசியல்வாதியாக மாற விரும்பவில்லை.

தமிழா உலகம் எங்கும் எடுத்து செல் உன் தமிழை.

அனைத்தையும் கற்று தமிழை பரப்பு :-)

Suresh said...

@ thevanmayam

இது தான் என்னோட இரண்டாம் தமிழ் பதிவு, முதல் பதிவு ஆரம்பித்து பிப் 28 2009.

வோட்டுக்கு நன்றி நண்பா :-)

Suresh said...

@ தண்டோரா

//ஆனால் ஒரு சிலருடைய கண்ணையாவது திறக்க முயற்ச்சிப்போம்//

சரியான புரிதல் :-) இது தான் முதல் கட்டம்.

Suresh said...

@ நவநீதன்

//அப்பரம் அவரு அரசியல் யாவாரம் எப்டி பண்றது...?//

கரீட்ட சொன்னிபா

// நல்லா எழுதீருக்கீங்க தலைவா...!
இன்னும் நிறைய எழுதுங்க....!
உங்கள் சேவை, வலையுலகத்திற்கு தேவை...! //


நன்றி நண்பா :-) எதுவும் கவுகிரே மாதிரியே இருக்கே :-)

ஹரி said...

இதுதான் தியாகி முத்துக்குமாரின் கனவு, நன்றி சுரேஸ்

pappu said...

பளிச்னு சொல்லிருக்கீங்க சுரேஷ்..
முதல் பதிவா? அதுவே ரொம்ப நல்லாருக்கே!
நானும் புதுசுதான்.
உங்களோடது எவ்ளோ நல்லாருக்கு என்பது உங்களுக்கு விழுந்த ஓட்டிலயே தெரிஞ்சிருக்கு.

மண்குதிரை said...

வாழ்த்துக்கள் நண்பா!

Suresh said...

@ ஹரி
உங்களுடைய வருகைக்கும் பின்நோட்டதுக்கும் நன்றி ! நண்பரே

Suresh said...

@pappu

உங்களுடைய வருகைக்கும் பின்நோட்டதுக்கும் நன்றி ! நண்பரே

Suresh said...

@ மண்குதிரை

உங்களுடைய வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி நண்பரே

RVC said...

good post. my best wishes

R.Gopi said...

Good one from you Suresh

"THALA" can be admitted in GH. But the problem is, when he is admitted, others will not be allowed inside.........

So, ROYAL TREATMENT is guaranteed only for THALA and not for others.

THALA KETTAVAR ILLA
AANA, NALLAVARAA IRUNDHU IRUNDHAA, NALLAA IRUKKUMNU SOLLA VANDHEN

pappu said...

விழுந்த ஓட்டிலயே அரசு மேல மக்களோட வெறுப்பு தெரியுது. அப்புறம் எப்படி ஜெயிக்கிறாங்க? இந்த தெளிவு இருக்ற தமிழர்கள் தேர்தலில ஆர்வம் இல்லாம இருக்கறாங்கன்னு நினைக்கிறேன்.

பிரியமுடன் பிரபு said...

///
எந்த அரசியல் வாதியும் உண்மையாக உங்களுக்கு சேவை செய்யபோவது இல்லை.
///

ஆமாங்க ஆமா..........

Suresh said...

@ RVC
நன்றி உங்கள் பின்னோட்டம் ஒரு புது உத்வேகத்தை அளிக்கிறது :-)

@ R.Gopi

"//THALA" can be admitted in GH. But the problem is, when he is admitted, others will not be allowed inside.........

So, ROYAL TREATMENT is guaranteed only for THALA and not for others.//
அது என்னமோ சரி தான்

//THALA KETTAVAR ILLA
AANA, NALLAVARAA IRUNDHU IRUNDHAA, NALLAA IRUKKUMNU SOLLA VANDHEN//

நீங்க நல்லா எழுதுறிங்க ஹி ஹி
புரியாமா புரிஞ்சாலும் இல்லேன்னா புரிஞ்சு புரின்யாத மாதிரி இருந்தாலும் நீங்க போட்ட பின்னோட்டம் சூப்பர் தான்


@ pappu said...

விழுந்த ஓட்டிலயே அரசு மேல மக்களோட வெறுப்பு தெரியுது. அப்புறம் எப்படி ஜெயிக்கிறாங்க? இந்த தெளிவு இருக்ற தமிழர்கள் தேர்தலில ஆர்வம் இல்லாம இருக்கறாங்கன்னு நினைக்கிறேன்.

கண்டிப்பாக ஒரு மறுத்தால் வரும் நண்பா, நம்ம போவோம் ஒட்டு போட


@ பிரியமுடன் பிரபு
நன்றி உங்கள் பின்னோட்டம் ஒரு புது உத்வேகத்தை அளிக்கிறது :-)

ஷீ-நிசி said...

நிஜமான, நியாயமான ஆதங்கங்கள் சுரேஷ்!

kishore said...

அரசு மருத்துவமனை ...
தமிழ் கல்வி...
லஞ்சம் இருக்காது ..
போங்க சுரேஷ் தமாஷ் பண்றதுக்கு ஒரு அளவு இல்லையா?

(வெளியில் சிரித்தாலும் மனதில் நினைத்தது.... இதெலாம் நடந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்....... ? நடக்குமா?)

Suresh said...

@ kishore

உங்கள் பின்னோட்டம் பார்த்து நிஜமா சிரித்தேன் :-)

//(வெளியில் சிரித்தாலும் மனதில் நினைத்தது.... இதெலாம் நடந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்....... ? நடக்குமா?)//

கண்டிப்பாக அதே ஆசை மற்றும் ஏக்கம் இருக்கு.

தமிழ். சரவணன் said...

சரியான செருப்படி. இது போல் அவர்கள் குழந்தைகளை அரசு கல்வி நிலையங்களில் சேர்கவும் அரசாணை வேண்டும்....
ஒரு அரசியல் வாதி: ஆயிரம் அரசாணை இருக்கு அத்தோட இதுஒண்ணு... நீ என்ன மயிரவேண்ணாலூம் போட்டுக்க எனக்கு ஒன்னும் கவலஇல்லை

Anonymous said...

hello
very nice and continue to write
it is now now turn and our time

let people know the truth

let us give the awareness for we had the oppotunity to know the truthand it is out duty to reveal the truth
by Velankanni fro Pune

கிரி said...

//சம்பாரிச்சு எதை எடுத்து கொண்டு போக போறீங்க ?//

ஒரு நாளைக்கு ஒரு கோடி செலவு செய்தால் கூட நான்கு தலைமுறைக்கு செலவு செய்யலாம் போல உள்ளது.

சுரேஷ் நல்ல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.

Bala said...

மறுதளிப்புக்கு மன்னிக்க வேண்டும் தோழரே! அரசு மருத்துவமனைக்கு எதிரே பணிபுரிவதால் இந்த அவலங்களை நேரில் பார்க்கும் விதி இருக்கிறதெனக்கு. என்ன நடக்கும் தெரியுமா? ஐந்தோ பத்தோ அழுது உடம்பெல்லாம் கட்டோடிருக்கும் நோயாளியின் உறவினர் விரட்டப் படுவர். உணவு கொண்டு பார்வையாளர் நேரத்தில் வருபவர் கூட அனுமதிக்கப் பட மாட்டார். பெரும்பாலான மருத்துவர்களும், தாதிகளும் அய்யாவுக்காக காத்துக் கிடக்கும் நேரம் அவசர சிகிச்சை நோயாளியை பார்க்க ஆளிருக்காது. இது தவிர‌ உங்கள் உணர்வுகளில் நியாயம். பத்திரிகையாளர்களையா துணைக்கழைக்கிறீர்கள். அவர்கள் பிழைப்பில் மண் போடவா? போங்க சார். தொடரட்டும் உம் பணி

Suresh said...

@ Bala

உண்மையை சொல்லி இருக்கிங்க உங்க கருத்துக்கும் எண்ணத்துக்கும் மதிப்பு கொடுபவன் நான் கண்டிபா மன்னிப்பு எல்லாம் வேணாம் :-)

நீங்க அணைக்கு ஒரு நாள் கஷ்டத்த சொல்றிங்க அனால் அவரு வந்துட்டு போன கண்டிப்பா நல்ல முன்னேறறம் இருக்கும். எப்போ வேனாலும் முதல் அமைச்சர் வரலாம் என்று எல்லாம் சரியாக இருக்கும் என்று ஒரு அல்ப்ப நம்பிகை அவ்வளவு தான் :-)

Suresh said...

@ கிரி

//ஒரு நாளைக்கு ஒரு கோடி செலவு செய்தால் கூட நான்கு தலைமுறைக்கு செலவு செய்யலாம் போல உள்ளது.//
அது என்னமோ சரி தான் :-)

//சுரேஷ் நல்ல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.//

ஒன்லி ரஜினி கமெண்ட் அடிக்கும் கிரிக்கு நான் ரொம்ப பேன் பாஸ் :-)

நன்றி ! உங்கள் வருகைக்கு மற்றும் உங்கள் ஊக்கத்துக்கும்

Suresh said...

@ தமிழ். சரவணன்
நன்றி

@அனானி
நன்றி

வண்ணத்துபூச்சியார் said...

Xlent.

எழுத்தும் கருத்தும் நல்லாயிருக்கு.

தொடர்ந்து எழுதுங்கள்.

மற்ற பதிவுகளையும் படித்தேன். விஜய் டிவி பற்றிய பதிவில் எழுத்து பிழைகளை சரி செய்யவும்.

என் வலையின் வருகைக்கு நன்றி.

Suresh said...

@ வண்ணத்துபூச்சியார்

நன்றி கண்டிப்பாக நல்ல பதிவுகளை தர முயற்சி செய்வேன்.

எனது பிழைகளையை சுட்டி காட்டியதற்கு நன்றி, சரி செய்கிறேன் :-)

மீண்டும் வருக :-) வருக

PERSONAL said...

Kalakuringa,
[[[Sindhanai Selvan SURESH]]]
ungaladhu pani thodara enadhu manamaarndha vazthukal..!!


Ungalin rasigan
Vijay Amirtharaj (IGCC boy)

Suresh said...

நாங்க எல்லாம் சின்ன பசங்க.. சிந்தனை சிற்பி எல்லாம் இல்லை :-)
நன்றி நண்பா !

Suresh said...

@அனானி
நன்றி

மனோ said...

supper one

Suresh said...

@ மனோ

நன்றி நண்பா :-) அடிக்கடி வந்து சிரிச்சிட்டு போங்க

Evanooruvan said...

கடவுள் இல்லை என்று மட்டும் சொல்லுவது அல்ல.... இதுதான் உண்மையான பகுத்தறிவு..... இனும் தொடர்கள் நண்பரே.......

ஜெயம் said...

//ஒரு IAS கலெக்டர் கட்சி ஆரமபிச்சா, அதுக்கு இவர்கள் ஆதிரவு கொடுபர்ர்களா ?//

சுரேஷ்,
மிகவும் அருமையான பதிவு ....
சிந்திக்க தூண்டும் வரிகள்... சிந்தனைகள் ....

தொடரட்டும் ... உங்களது பதிவு சேவை
இது ...பாமரர்க்கும் தேவை....

வாழ்க வளமுடன்

Anonymous said...

GOOD ARTICLE

SAMEER

Suresh said...

@ Evanooruvan

//கடவுள் இல்லை என்று மட்டும் சொல்லுவது அல்ல.... இதுதான் உண்மையான பகுத்தறிவு..... இனும் தொடர்கள் நண்பரே.......//

உங்கள் வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி நன்பா :-)

உங்க்ள் ஆசிர்வாதம் மற்றும் பின்னூட்டம் தான் எனக்கு உற்சாகம்

Suresh said...

@ ஜெயம்

# //ஒரு IAS கலெக்டர் கட்சி ஆரமபிச்சா, அதுக்கு இவர்கள் ஆதிரவு கொடுபர்ர்களா ?//

சுரேஷ்,
மிகவும் அருமையான பதிவு ....
சிந்திக்க தூண்டும் வரிகள்... சிந்தனைகள் .... #

ரொம்ப ரொம்ப சந்தோசம் ஜெயம் ...
உங்கள் பின்னூட்டங்கள் ஒரு ஊக்கத்தை தருகிறது தோழா

//தொடரட்டும் ... உங்களது பதிவு சேவை
இது ...பாமரர்க்கும் தேவை....

வாழ்க வளமுடன்//

உங்கள மாதிரி மக்களின் உற்சாகத்தால் தான் நல்ல பதிவுகள் தர முடிகிறது

வாழ்க வளமுடன்

Suresh said...

@ சமீர்

//GOOD ARTICLE

SAMEER//

நன்றி சமீர் ரொம்ப சந்தோசம் தலைவா
அடிக்கடி சக்கரை கடைக்கு வாங்க தலை

தமிழர்ஸ் - Tamilers said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

கணக்குவழக்கு

 

Copyright 2008 All Rights Reserved