
டிஸ்கி - இந்த பதிவை படித்து முடிக்கும் பொது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புதுவித அனுபவம், உணர்வு , வாழ்க்கையை பற்றிய பார்வை புதியதை இருக்கும்.இனிமேல் நீங்க பார்க்கும் உலகம் வாழ்க்கை மாறக்கூடும்.கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு ஒரு நல்ல ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும்.
பொதுவாக நான் இந்த வாழ்க்கை பற்றிய ஒரு பயிற்சி கொடுக்கும் பொது
தயவு செய்து கண்களை முடி நான் சொல்வதை கேளுங்க என்று சொல்வேன்
( இப்போ நீங்க கண்ணை மூடினால் படிக்க முடியாது , ஆதலால் அமைதியாய் மனசு லேசாக இருக்கும் பொது படிக்கவும் )
என்னடா இவன் இப்படி சொல்றானு நினைக்காதிங்க பதிவைபடித்து முடிங்க வாழ்க்கை என்றால் என்ன? பதில் நிச்சியம்
நீங்க அதிகாலை எழும் பொது உங்களால எழ முடியல ...
நீங்க உங்க விட்டுல , உங்க பெட்ரூல படுத்து இருக்கீங்க ...
உங்கள் அம்மா, மனைவி அல்லது உங்கள் உங்கள் அன்புக்கு உரியவங்க வந்து எழுபுறாங்க முடியல ....
நீங்க பேசுறது அவங்களுக்கு கேட்கல ...
எல்லாம் அழுறாங்க, உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் வராரு கைகளை புடிச்சி பார்த்து ஏதோ உங்க அப்பா/ அம்மா/ மனைவிகிட்ட சொல்றாரு..
நீங்க சொல்றது யாருக்கும் கேட்கல ... உங்களால அசைய முடியல ...
ஒரே போன் மேல போன் ...
சொந்தம் பந்தம் எல்லாம் வருது, உங்க அத்தை மாமா, ஆபீஸ் மக்கள், பக்கத்து வீட்டு மக்கள் எல்லாரும் வராங்க .. எல்லாரும் கண்கள் வலிக்க அழுவுறாங்க..
உங்களக்கு ஒன்றும் புரியவில்லை
உங்களுக்கு மாலைகள் போடுகிறார்கள் .. உங்க கட்டில் பக்கத்தில் உங்கள் அன்புமிக்க தம்பி/தங்கைகள் அம்மா அப்பா எல்லாரும் ஒரே சத்தம் ஒரேஅழுகை
காரணம் உங்கள் உயிர் பிரிந்தாயிற்று ....
பக்கத்துவிட்டுக்காரன் - நல்ல மன்சன்யா தொந்தரவே செய்ததே இல்லை ... சின்ன வயசு ...
ஆபீஸ் மேனேஜர் - நல்ல வேலை பார்ப்பான் இப்போ எவன வச்சி வேலை பார்த்து ப்ராஜெக்ட் முடிக்கிறது , இவனுக்கு தன் எல்லாம் தெரியும் ...
கடன்காரன் - பாவி பய வாங்கின கடன தராம போய்ட்டான்
கடன் வாங்கினவன் - நல்ல வேலை இவரு நமக்கு கொடுத்த கடன் யார்ருக்கும் தெரியாது ...
குடும்பம் - நேத்து வர நல்ல தான் இருந்தார் வேலை வேலை என்று இருந்தாரு, நல்ல மனுஷன்.
நேத்து காப்பி கேட்டு சண்டை போட்டு இப்படி காப்பி கூட குடிக்காம போய்டிங்களே ...
ஓர சோகம் நீங்கள் ஹெல்ப் செய்தர்வர்கள் உங்களை நல்லவர்கள் என்றும், நீங்கள் ஹெல்ப் செய்யாதவர்கள் உங்களை போய் தொலைஞ்சன் டா என்றும் சொல்வது ... உங்கள் காதில் விழுது
உங்களை குளிக்க வைத்து மாலை போட்டு அப்படியே எல்லாரும் வந்து பார்த்து அழுத பின்பு உங்களை ஏற்றி கொண்டு சுடுகாட்டுக்கு போய் எரித்தோ புதைத்தோ உங்கள் வழக்க படி முடிந்தாயிட்ட்று ..
அடுத்த நாள் காலை சொந்தம் பந்தம் எல்லாம் காலி..
உங்கள் விடு உங்கள் மனைவி மக்கள் அப்பா அம்மா தம்பி அண்ணன் தங்கை ...
இவர்கள் மட்டும் உங்கள் விட்டு சென்ற நினைவுகளோட ...
ரெண்டு நாள் கழித்து ... உங்கள் போட்டோ மாலை மாற்றி நடு விட்டில் இருக்க..
தம்பி, உங்கள் மனைவி, மக்கள், அண்ணன், தங்கை, அக்கா எல்லாரும் அவர் அவர் வேலையை பார்க்க கிளம்பியாச்சு ... ஆபீஸ் போறவங்க ஆபீஸ் .... ஸ்கூல் காலேஜ் போறவங்க காலேஜ் ... நீங்கள் இல்லாமலும் உலகம இயங்கும் ...
நீங்கள் மட்டும் தான் உங்கள் ஆபீஸ் கட்டிக்கொண்டு காப்பற்றுவதாக நினைத்க்கொண்டு இருந்த நீங்கள் ... உங்களக்கு அதிர்ச்சி தான் ...
நீங்க இல்லாம உலகம சுற்றும் ... நீங்க இல்லாம மக்கள் வேலையை செய்வார்கள்...
அப்போ அப்போ உங்கள் நண்பர்கள், உங்கள் உறவுகள் உங்கள் நினைவுகளை அதுவும் பசுமையான நினைவுகளை சுமப்பார்கள் ...
உங்கள் மனைவி அப்பா அம்மா, பிள்ளைகள், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டும் ஒரு மாதமாவது உங்கள் நினைவில் இருந்து வருந்துவார்கள் ...
அதுவும் நீங்கள் அவர்களோட வாழ்ந்த விதம் பொறுத்து ...
ரெண்டு தலை முறைக்கு அப்புறம் உங்கள் பெர்யர் சொன்னால் யாருக்கும் தெரியாது அப்படி ஒருத்தர் இருந்தக்கு அடையாளம் என்று ஒன்னும் இருக்காது ...
எனவை ... நம்ம உயிர் நம்மலிடம் இருக்கும் வரை ... நல்லதை செய் .. நாலு பேர
சந்தோஷ படுத்து ... நல்ல வயிறு நெறைய ஏழைக்கு சோறு போடு ...
வேலை வேலை வேலை என்று மட்டும் சுற்றாமல் உங்கள் மனைவி, அம்மா, அப்பா, மக்கள் ( உங்கள் பிள்ளைகள்) , நெருங்கிய நண்பர்கள், தம்பி, அண்ணன், அக்கா, தங்கை ... எவர்களோட நேரம் ஒதுக்கு ... அன்பாய் இருக்கு நல்ல நினைவுகளை கொடு ... அன்பு காட்டு ... எக்ஸ்பிரஸ் யூர் லவ் .... என்று நான் அடிக்கடி சொல்வது உண்டு.... எக்ஸ்பிரஸ் செய்யாமல் .... நம்மளோட உன்னோட அன்பை கொண்டு செல்லாதே ! ....
நீ இறந்தால் ரெண்டு வாரம் தான் துக்கம் ... அப்பரும் வருடம் ஒருமுறை படையல் ... அதுவும் நீ இறந்த அன்று ..
உனோட நல்ல நினைவுகள்... நீ இல்லாத அந்த இடைவழியை குறைக்கும் ...
காதல் செய் ... உன் காதலி இடம் மட்டும் அல்ல ... அனைவரிடமும்
அன்பு செய் ... நீ இல்லாமலும் இருப்பாய் :-)
அன்புத்தோழன்
சுரேஷ்.




31 comments:
நல்லா இருக்கு நண்பா.
தங்கள் தத்துவம் சரிதான். என்ன ஒரே போ(ர்)தனையாக இருக்கிறது. மனிதனுக்கு 6 அறிவு எதற்கு இருக்கிறது. எதுவும் பிறர் சொல்லித்தான் நம் புத்திக்கு எட்டும் என்றால் அந்த 6 வது அறிவு இருந்தும் பிரயோஜனமில்லை. ஏதோ ஒரு ஆர்வத்தில் இதையெல்லாம் எழுதுகிறீர்கள். மேலும் எழுதி தங்கள் ஆர்வத்தை நான் கெடுக்க விரும்பவில்லை. தங்களுக்கு எனது வாழ்த்துகள்.
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.
நல்லா இருக்கு. வாழுறது கொஞ்சம். நல்லவனா வாழ்ந்தா, பேர் நிலைக்கும்னு போட்டிருக்கீங்க.
//காதல் செய் ... உன் காதலி இடம் மட்டும் அல்ல//
ச்ச..ச்ச...அதெப்படிங்க! நாங்க அடுத்தவங்க காதலியையும் காதலிப்போம்.
நல்ல அறிவுரை, போதனை யப்பா இதுக்கெல்லாம் ரூம்போட்டு யோசிப்பீங்களோ?
வாழ்த்துக்கள்
யதார்த்தம்.. அத்தனையும் உண்மை
நல்ல இருக்கு சுரேஷ்... யோசிச்சா ஆயிரம் அர்த்தம் சொல்லுது தலைவா ...
என்ன ஒன்னு... நாங்க எல்லோரையும் காதிலிக்க ரெடியா தான் இருகோம் அவங்க ரெடியானு கேட்டு சொல்லுங்க...
கடவுச் சீட்டு என்ற பெயரில் நான் எழுத நினைத்துக் கொண்டிருந்த களம்... நீங்கள் முந்திவிட்டீர்கள்...
இறப்பு என்பது இல்லாமல் போவதல்ல... ஏதோ ஒன்றை இருத்திவிட்டுப் போவது!!!
அது வெறுமையாக இருக்கலாம்
அல்லது புகழாக இருக்கலாம்..
நல்ல பதிவு
சுரேஷ் அருமை.நானும் இதைத்தான் கேட்டேன் வாழ்க்கையைச் சின்னதாகச் சொல்லுங்கள் என்று.வாழும்போது அன்போடு இருங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.உண்மையும் கூட.
கலக்கல் பதிவு...
Absolutely true. Let thinking take wings.
subbu
பொது இல்ல சுரேஷ், "போது"
@ வினோத் கெளதம்
நன்றி நண்பா
அடிக்கடி கடைக்கு வந்து :-) போங்க
@ Ananth
// என்ன ஒரே போ(ர்)தனையாக இருக்கிறது.//
என்ன பண்றது சிலநேரம் இப்படி பெருசா சொன்னா போர் அடிக்கும்
நானே ஒரு ஜாலி :-) காமெடி செய்யும் மனிதன்.. சிலநேரம் எப்படி எனக்கும் தெரியாம எதாவது வந்து விழுந்துடுத்து...
அடுத்த பதிவுல கண்டிப்பாக சீரியஸ் இல்லாம போர் அடிக்காம காமெடி பண்ணியடலம்
உங்கள் அருமையான பின்னோட்டம் என்னை மேருகேத்த ஹெல்ப் செய்தது
// மனிதனுக்கு 6 அறிவு எதற்கு இருக்கிறது. எதுவும் பிறர் சொல்லித்தான் நம் புத்திக்கு எட்டும் என்றால் அந்த 6 வது அறிவு இருந்தும் பிரயோஜனமில்லை. //
உங்களுக்கு இருக்கு அண்ணன் யாரும் சொல்லாமலே நீங்க அன்பை கொடுக்குறிங்க அன்பா இருக்கீங்க ..
நிறையா நண்பர்கள் ஆறு அறிவு இருந்தும் வேலை வேலை என்ற சுத்துராங்க...
90 % அப்படி தான் .. அவங்களுக்கு தான் இந்த பதிவு...
உங்கள மாதிரி நண்பர்கள் இதை படித்து பின்னோட்டம் இட்டது என்னோட பாக்கியம் ...
//ஏதோ ஒரு ஆர்வத்தில் இதையெல்லாம் எழுதுகிறீர்கள். மேலும் எழுதி தங்கள் ஆர்வத்தை நான் கெடுக்க விரும்பவில்லை. தங்களுக்கு எனது வாழ்த்துகள்.//
கண்டிப்பா அர்வம் ரொம்ப இருக்கு அதை ஆர்வ கோளர மாத்தாம பாத்துக்கரேன்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி , :-)
@ பாப்பு :-)
//நல்லா இருக்கு. வாழுறது கொஞ்சம். நல்லவனா வாழ்ந்தா, பேர் நிலைக்கும்னு போட்டிருக்கீங்க.//
நான் சொன்ன பதிவ ஒரு லைன்ல கற்புரம் பத்திரி புருஞ்சிக்கிட்டியே பாப்பு :-)
எல்லாருக்கும் வைக்கத்தை ஆப்பு :-)
//ச்ச..ச்ச...அதெப்படிங்க! நாங்க அடுத்தவங்க காதலியையும் காதலிப்போம்.//
காதலிங்க :-) அவ ஆளு ஆட்டோ எடுத்துக்கிட்டு வந்தா ஒரு போன் போடுங்க :-)
பாப்பு :-) எல்லாருக்கும் வைக்கத்தை ஆப்பு :-)
@ அபுஅஃப்ஸர் said...
// நல்ல அறிவுரை, போதனை யப்பா //
எனக்கு அறிவுரையே புடிக்காது என்ன செய்ய நான் சொனதுக்கு எப்படி போதனையாகி
என்னை புத்தர் ஆக்கிடிங்களே :-)
//இதுக்கெல்லாம் ரூம்போட்டு யோசிப்பீங்களோ?//
ஆபீஸ் இருக்க எதுக்கு சொந்த செலவுல ரூம் போட்டு யோசிக்கணும் ;-)
@ நசரேயன்
//யதார்த்தம்.. அத்தனையும் உண்மை//
நன்றி நரேன் நீங்களாவது ஒத்துகிடிங்களே இது எதார்த்தம் உண்மை என்று :-) ஹி ஹி
@ கிஷோர்
நல்ல இருக்கு சுரேஷ்... யோசிச்சா ஆயிரம் அர்த்தம் சொல்லுது தலைவா ..
கிஷோர்
என்னோட பதிவு ஒருத்தரை யாவது யோசிக்க வைத்து என்று சொந்தசமா இருக்கு நண்பா :-)
//என்ன ஒன்னு... நாங்க எல்லோரையும் காதிலிக்க ரெடியா தான் இருகோம் அவங்க ரெடியானு கேட்டு சொல்லுங்க.//
ஹி ஹி நம்ம ரெடி தான் பொண்ணுங்க தான் நம்மள பார்த்தாலே ஜுராஸிக் பார்க் மிருகத்த பாத்த மாதிரி லுக் விட்டு பயந்து நடுங்குதுங்க என்ன செய்ய ...
அதுக்கும் ஒரு பதிவு வருது ...
@ ஆதவா
// கடவுச் சீட்டு என்ற பெயரில் நான் எழுத நினைத்துக் கொண்டிருந்த களம்... நீங்கள் முந்திவிட்டீர்கள்...//
அன்புள்ள ஆதவா
நீங்க நினைத்த கருவா நான் நினைத்து. அதுவே எனக்கு பெருமை தான்
நீங்க வைத்த கடவுச் சீட்டு பெயரே ஆயிரம் சொல்லுது ஆதவா ...
கண்டிப்பாக எழுதுங்க உங்க கண்ணோட்டம், எழுது நடை எல்லாம் வித்தியாசம் மற்றும் அருமையாய் இருக்கும் ...
//நீங்கள் முந்திவிட்டீர்கள்//
நான் முந்த வில்லை ..
இப்போ தான் கத்துக்குட்டி உங்களை போன்ற நல்ல பதிவர்களிடம் காற்றுக்கு கொண்டு இருக்கிறேன்
//இறப்பு என்பது இல்லாமல் போவதல்ல... ஏதோ ஒன்றை இருத்திவிட்டுப் போவது!!! அது வெறுமையாக இருக்கலாம்
அல்லது புகழாக இருக்கலாம்.//
இந்த வரிகளுக்காகவே உங்களக்கு ஆயிரம் சபாஷ்
// நல்ல பதிவு//
நீங்க சொன்ன சரி தான் :-)
@ ஹேமா
நன்றி தோழி
//நானும் இதைத்தான் கேட்டேன் வாழ்க்கையைச் சின்னதாகச் சொல்லுங்கள் என்று.//
யாரு கிட்ட கேட்டிங்க ? :-)
//வாழும்போது அன்போடு இருங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.//
அப்படியா :-) நீங்க சொன்ன சரி தான்
உங்கள மாதிரி நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் என்னோட பதிவுல இவ்வளவு அர்த்தம் உள்ளது நீங்க சொல்லித்தான் தெரியுது நன்றி தோழி ...
@ சுப்பு ,கவின்
நன்றிகள் , உங்கள் வருகைக்கும் உங்கள் அன்பிற்கும் :-)
அடிக்கடி வந்து படிச்சிட்டு பிடிச்ச வோட்ட போடுது சந்தோசமா போங்க :-)
@ ஜொ
// பொது இல்ல சுரேஷ், "போது" //
இந்த தட்சு எனக்கு ரொம்ப புதுசு, பிழையை சுட்டி காட்டியதற்கு நன்றிகள் :-)
திருத்தி விட்டேன் ...
நல்ல பதிவு நண்பா
நல்ல பதிவு சுரேஷ்...
நிஜம் தான் வேலை வேலைன்னு உணர்வுகளை உணர மறந்துடிரோம் ....
@ நிலாவன்
\\நல்ல பதிவு நன்பா \\
நன்றி நிலாவன் .... அடிக்கடி வாங்க :-) சந்தோசமா சிரிச்சி சுவைச்சிட்டு போங்க
@ நாணல்
//நல்ல பதிவு சுரேஷ்...
நிஜம் தான் வேலை வேலைன்னு உணர்வுகளை உணர மறந்துடிரோம் .... //
நன்றி நாணல் :-)
நமது குடும்பம் மனைவி மக்கள் இவர்களிடம் கொஞ்ச நேரம் ஒதுக்கி அன்பா இருந்த எல்லாருக்கும் சந்தோசம் .... வேலையும் தெளிவா செய்யலாம்
நல்ல பதிவு super
@ mythees
// நல்ல பதிவு super //
நன்றி :-)
//
காதல் செய் ... உன் காதலி இடம் மட்டும் அல்ல ... அனைவரிடமும்
அன்பு செய் ... நீ இல்லாமலும் இருப்பாய் :-)
//
What an advice, wow! ;-)
'''எனவை ... நம்ம உயிர் நம்மலிடம் இருக்கும் வரை ... நல்லதை செய் .. நாலு பேர
சந்தோஷ படுத்து ... நல்ல வயிறு நெறைய ஏழைக்கு சோறு போடு ...////
எல்லா உதவிகளும் செய்து பார்த்தாலும் உறவுகள் எல்லாம் முதுகில் தான் குத்துகிறார்கள் .
உங்கள் பதிவு ரொம்ப நல்ல இருந்தது .
தன் பிள்ளைகள் தன்னுடைய அம்மா அப்பா உறவுகள் மட்டுமே உண்மை ...
Post a Comment