Thursday, March 12, 2009

மொக்கைச்சாமி.

மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..

கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது

அப்படியே ஆகுகன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.

ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து
யாரப்பா.. நீ?ன்னு கேட்டாராம்..

இவன் சொன்னானாம்... மொக்கைமாமி

பாவம்.. அவனுக்கு சாவே வரல!
மொக்கைச்சாமி.SocialTwist Tell-a-Friend

30 comments:

அபுஅஃப்ஸர் said...

ஹா ஹா ஹா ஹா

செமகலக்கல்

அபுஅஃப்ஸர் said...

நல்லதாப்போச்சி மொக்கை பூமினு சொல்லாம விட்டாரே

Suresh said...

@ அபுஅஃப்ஸர்

நன்றி நண்பா உங்கள மாதிரி நல்லவங்கள பார்த்து தான் பதிவு போட ஆரம்பிச்சேன்

சூர்யா ௧ண்ணன் said...

ஊப்பர்! ஊப்பர்!
(சூப்பர் சொல்லத்தான் வந்தேன் ஆனா 'சா' தான் வரலியே)

ஓட்டுப் போட்டுட்டேன்! நன்றி!

Suresh said...

@ சூர்யா ௧ண்ணன்

நன்றி ஊப்பர்! கண்ணன் ஹி ஹி :-)

நன்றி நண்பரே எனக்கும் உங்க ச வியாதி தொத்திக்கிச்சு

pappu said...

நல்ல காமெடி... சாரி, தப்பா சொல்லிட்டேன்.... நல்ல மொக்கைடா... சா(மா)மி

ஷீ-நிசி said...

ஹா! ஹா!

கடவுளுக்கும் உண்டு காமெடி!!!

ஆதவா said...

ஹாஹா.....


கடவுளே இப்பலாஅம் காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டார???

ஹாலிவுட் பாலா said...

என்னத்தை மெல்ல..! அதான் கலக்கியிருக்கீங்களே... ஒவ்வொரு பதிவுலயும்....!

கலக்குங்க்க.. தல..! அடுத்த ப்ளாக்ல என்ன மொல்லி இருக்கீங்கன்னு பார்த்துட்டு வர்றேன்.

மூப்பரப்பு...!!

ஹாலிவுட் பாலா said...

என்னங்க.. தல.. உங்களுக்கு ‘இனிமையான காலங்களே’ இது நாள் வரை வரலையா??? LOL.

ப்ளாக் மும்மாவே இருக்கு?!

நசரேயன் said...

மரண மொக்கை மொக்கை மாமி

kishore said...

ஐயோ சாமி முடியல சுரேஷ்...

பூமகள் said...

ஹா ஹா..

நல்ல நகைச்சுவை.. நல்லா நகைச்சுவைச்சேன்.. ;)

நன்றாக உள்ளது தொடருங்கள்..

தங்கராசா ஜீவராஜ் said...

நல்ல நகைச்சுவை.....
வாழ்த்துக்கள் நண்பனே தொடருங்கள்..

vinoth gowtham said...

Nice template.

Matter kalakal.

Suresh said...

@ ஷீ-நிசி,ஆதவா

வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி :-)

கடவுளும் எத்தனை நாள் தான் சீரியஸா இருக்குறது :-)

Suresh said...

@ papu

வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி :-)

Suresh said...

@ ஹாலிவுட் பாலா
//என்னத்தை மெல்ல..! அதான் கலக்கியிருக்கீங்களே... ஒவ்வொரு பதிவுலயும்....!//
இருந்தாலும் உங்களுக்கு என்மேல ரொம்ப அதித நம்பிக்கை போல :-)

/கலக்குங்க்க.. தல..! அடுத்த ப்ளாக்ல என்ன மொல்லி இருக்கீங்கன்னு பார்த்துட்டு வர்றேன்.//
வாங்க வாங்க உங்கள மாதிரி நல்லவங்களுக்கு தானே கடைய தொறந்து வச்சி இருக்கேன் :-)

நானும் வந்து பாக்குறேன் நீங்க என்ன மொல்லி இருக்கீங்க :-)

Suresh said...

@ ஹாலிவுட் பாலா

// என்னங்க.. தல.. உங்களுக்கு ‘இனிமையான காலங்களே’ இது நாள் வரை வரலையா??? LOL.//

// ப்ளாக் மும்மாவே இருக்கு?!//

அட அது நிறைய இருக்கு :-) அதுக்கு தான் இப்போவே பெயரை மட்டும் பிடிச்சி வச்சிகிட்டேன் அந்த கேப்ல பாத்துடிங்க ..
சிகிரமே பகிர்ந்து கொள்கிறேன் அந்த இனிமை காலங்களை :-)

Suresh said...

@ நசரேயன் @ கிஷோர்

வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி :-)நண்பர்களே

Suresh said...

//நல்ல நகைச்சுவை.. நல்லா நகைச்சுவைச்சேன்.. ;)//

மக்கள் எல்லாம் சந்தோசமா இருந்த சரிதான் :-) நன்றி தோழி , அடிகடி வந்து கடி வாங்கிட்டு போங்க :-)

Suresh said...

@ தங்கராசா ஜீவராஜ்
அட உங்க பேருலே அருமையான ஜீவன் இருக்குங்க :-)
உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி :-)
கண்டிப்பாக நல்லதை நிறைய எழுதுவேன் வாங்க வாங்க வந்து படிச்சிட்டு சந்தோசமா போங்க :-)

Suresh said...

@ வினோத் கெளதம்

// Nice template.//
நல்ல வேலை அட்டைப்படத்தை மட்டும் பார்த்து சூப்பர் மேட்டேர்னு சொன்ன மாதிரி இருந்துச்சு ( குமுதம் அட்டைப்படத்தை பார்த்து நாங்க முக்காவாசி நேரம் டேய் மச்சான் இன்னைக்கு குமுதம் சூப்பர் ! சொன்னது தான் நியாபகம் வருது ! படிக்காம படம் பார்த்த காலம் :-) அது . இப்போவும் அப்போ அப்போ ...அது படத்த பொருத்து )

//Matter kalakal.//
இப்போ தான் உசுரே வந்துச்சு ! நன்றி நண்பா
உங்களுக்கு டேம்புலேட் பிடித்தால் எடுத்து கொள்ளவும்.

டவுசர் பாண்டி said...

அவரு நம்ப ஆளு நைனா ! அதா அவர்க்கு 'சா' வர்லே, நம்பளுக்கு கூட செல வார்த்த வர்மாட்டுன்னுது, யாரு சாபன கூட்தொதோ பா !

R.Gopi said...

சூப்பர் மொக்க "மல"

ஐயோ, எனக்கு "த"வே வரல.........

தமிழ்நெஞ்சம் said...

super .. enge pidicheenga. haa haa.. semma joke

Suresh said...

@ டவுசர் பாண்டி

அவரு நம்ப ஆளு நைனா ! அதா அவர்க்கு 'சா' வர்லே, நம்பளுக்கு கூட செல வார்த்த வர்மாட்டுன்னுது, யாரு சாபன கூட்தொதோ பா !

வாங்க டவுசர் :-) எப்படி இருக்கீங்க உங்க வருகைக்கு மிக்க நன்றி ...
எனக்கு கரெக்ட் எழுதுனலே தப்பா தான் வரும்
இதுல வரம் வேற வாங்கின ஓர காமெடி தான் போங்க

Suresh said...

@ கோபி

//சூப்பர் மொக்க "மல"

ஐயோ, எனக்கு "த"வே வரல.........//

நன்றி நல்ல வேலை :-) தா தான் வரல .. ஹ ஹ அடிக்கடி வாங்க

Suresh said...

@
தமிழ்நெஞ்சம் Says:

//super .. enge pidicheenga. haa haa.. semma joke//
எல்லாம் அவன் செயல்
( எவன் போர்வர்து பன்றனோ அவனோட செயல் :-) லோல் )

Eswari said...

சாமியா கொக்கா......

கணக்குவழக்கு

 

Copyright 2008 All Rights Reserved