Sunday, April 05, 2009

அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்...


அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் - ஒரு பயணம்...

ஒரு பயணத்தின் போது நான் பார்க்க நோந்த்து....

திருச்சி வரும் வழியில் ஒரு ஐந்து அரசு பள்ளிகள் பார்த்தேன்

என் மக்கா ... நீ எல்லாம் மாக்களாக ?


ஒரு சில வகுப்புகள் கொடுத்து வைத்தவய் ஒரு மரமாவது நிழல் கொடுத்து ...
மற்ற வகுப்புகள் என் தந்தை சூரியனின் கதிர் வீச்சில்


காசு இருந்தால் கான்வன்ட்
இல்லாடி காட்டிலா பாடம் ?

ஒவ்வொரு மழலையின் முகத்திலும் ஒரு அப்துல்கலாமை,  பார்த்தேன்
அழகிய சிரிப்பு, ஜாதி இல்லை, காசு இல்லை, எந்த கவலையும் இல்லை

என் இதயம் இனிக்கவில்லை கணத்தது...
நான் சோறு போட்டேன்
நான் முட்டை போட்டேன் ( முட்டை போட நீ என்ன கோழியா )
என்றும் சொல்லும் அரசியல்வாதின் அறிவாளி தனத்தை பார்த்து சிரித்தேன் ...
அதிலும் அவர்களுக்கு வோட்டு போடும் முட்டாள்களையும் நினைத்து....
ஹ ஹா 


ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு அல்லது இரு கட்டிங்கள்
அவை அருமை தான் சொல்லற அரசியல்வாதிகளின் பிள்ளைகளை கொண்டு போய் விடுங்கள் அங்கே
பிள்ளைகள் என்று சொல்ல முடியாது
அவர்களின் கொல்லு பேரன்களும் பேத்திகளும் படிக்கட்டும் அந்த கட்டடங்களில்

வெட்கை பற்றிக்கொள்ளும்
எப்பொழுது விழும் ??? என்ற சுவர்கள்
தரைகளே நாற்க்காலிகளாய்....


 
இது ஒன்று இல்லை ... 

அந்த அந்த வழி கிராம்ங்களில் ஒரு ஐந்து கிராம்ங்களின் அரசு பள்ளிகளில் இதே நிலையை பார்த்தேன்

அவர்களிடம் ஒரு புண்ணகை
உங்களுக்கு என்ன ஆசை படித்து என்னவாக வேண்டும் என்ற கேள்விக்கு
என்றேனும் ஒரு நாள் தானும் படித்து தன் ஏழை தாய், தந்தையை காப்பாற்றோவோம் என்று மட்டும் இல்லை
இந்த தேசத்தை ஒரு நல்ல தேசமா உருவாக்குவோம் என்ற ஒரு தீ இருந்தது அனைவரின் பதிலிலும்
IAS, Doctor, IPS, Teacher, vakkil, Police இவை அனைத்தும் சொன்ன சின்ன் குழந்தையின் பதிலில் ( இத எங்கள மாதிரி கிரம மக்களுக்கு செய்யனும் நகரத்துக்கு இல்லை) என்ற குழந்தைகள் அறிந்த பெரிய விஷியத்தை .. நம்ம அரசியல்வாதிகள் அறியாமல் இருப்பதேன் ?

அதில் ஒரு வாலு பையன் நான் சீட்டாடி நிறைய சம்மதிப்பேன் :-) என்றான் ... ஏன் என்றால் ... எங்க அப்பா நிறையா தோத்துட்டாரு...
ஆமா தோத்தா எப்படி காசு வரும் அதுனால நீயும் கெட்டு போய்டாத என்றால்
எங்க அப்பாவை ஜெய்த்தவன் எவ்வளவு காசு பாத்துருப்பான்..  என்றான் ....

என்னால் முடிந்த உதவி செய்திட்டு...அவர்களின்... அன்போடு விடைப்பெற்றேன் ...


ஒரு நாட்டின் எதிர்க்காலம்
அந்த நாட்டின் குழந்தையின் கல்வியில் தான் உள்ளது ...
வருங்கால இந்தியாவின் தூண்கள் ...
ஆனால் ஒரு கல்வியைக்கூட நம்மலால தரமாக்கொடுக்க முடியலனா எதுக்குயா வரி ?
( தரம் தான் அறிக்கை விடுபவர்களை ...
அவர்களுது பிள்ளைகளை சேர்க்க சொல்லுவோம்)
அந்த வெள்ளகாரன் க்கூட வாங்கிய வரிக்கு
நல்ல கட்டிட்ங்கள் கட்டி ரோடுப்போட்டான்
அது இன்னும் கூட நல்லா இருக்கு..
அவங்க கிட்ட ஒரு கட்டபொம்மன் கேள்வி கேட்டான் ..
அரசியல்வாதிகிட்ட நாம தான்யா கேட்கனும்

நம்ம நாட்டை திருத்த நாம் தான்யா முணையனும் 
இன்னொரு மகாத்மாவை எதிர் நோக்கும் சோம்பேறிக்ளே .. 
போய் கண்ணாடிய பாரு ... 
நீ தான்
அந்த இன்னொரு மகாத்மா

குறிப்பு- மேற்க்கோளிட்டு காட்டின இந்த வரிகள் நான் எழுதிக்கொண்டிருக்கும்  இன்னொரு மகாத்மா என்ற புத்தகத்தின் சாரம்சம்

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…

தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்...SocialTwist Tell-a-Friend

71 comments:

கலை - இராகலை said...

ஓ அங்கையுமா இந்த பிரச்சினை. தமிழ் நாட்டிலும் தழிழனுக்கு இந்த கதியா?

கலை - இராகலை said...

///மேற்க்கோளிட்டு காட்டின இந்த வரிகள் நான் எழுதிக்கொண்டிருக்கும் இன்னொரு மகாத்மா என்ற புத்தகத்தின் சாரம்சம்////

வாழ்த்துக்கள் சுரேஸ்

Suresh said...

@ ஆமா கலை

இருக்கு ஆனா பத்தாது ..
சரி மறக்காம பிடித்தால் தமிலிஷிலும் தமிழ்மணத்திலும் வோட்டு போடுங்க அப்போ தான் இன்னும் நிறைய பேரை சென்று அடையும்

Suresh said...

@ கலை ;-)

நன்றி கலை ...

SUREஷ் said...

//நம்ம நாட்டை திருத்த நாம் தான்யா முணையனும்
இன்னொரு மகாத்மாவை எதிர் நோக்கும் சோம்பேறிக்ளே ..
போய் கண்ணாடிய பாரு ...
நீ தான்
அந்த இன்னொரு மகாத்மா

குறிப்பு- மேற்க்கோளிட்டு காட்டின இந்த வரிகள் நான் எழுதிக்கொண்டிருக்கும் இன்னொரு மகாத்மா என்ற புத்தகத்தின் சாரம்சம்//





நேம்ஸ் ரொம்ப பெரிசா யோசிச்சிட்டு இருப்பீங்க போல...

SUREஷ் said...

//எங்க அப்பாவை ஜெய்த்தவன் எவ்வளவு காசு பாத்துருப்பான்.. என்றான் ....//


நல்லா யோசிக்கற பையன் தல் விட்டுடாதீங்க...

Suresh said...

@ SUREஷ்

//நல்லா யோசிக்கற பையன் தல் விட்டுடாதீங்க... //

நான் தட்டி கொடுத்து :-) என்னையே அவனிடம் பார்த்து வந்தேன் :-)

மகா said...

nalla pathivu

Subankan said...

//நம்ம நாட்டை திருத்த நாம் தான்யா முணையனும்
இன்னொரு மகாத்மாவை எதிர் நோக்கும் சோம்பேறிக்ளே ..
போய் கண்ணாடிய பாரு ...
நீ தான்
அந்த இன்னொரு மகாத்மா//

சூப்பர்ணா, உங்கள் புத்தகமும் சிறப்பாக வர வாழ்த்துக்கள்

மகா said...

templete is nice

மாதேவி said...

"வெட்கை பற்றிக்கொள்ளும் எப்பொழுது விழும் ??? என்ற சுவர்கள்
தரைகளே நாற்க்காலிகளாய்...."

பார்க்கும்போதே மனத்தைவதைக்கிறது.

KISHORE said...

விழிகள் மட்டும் அல்ல இதயமும் நனைகிறது...

கடையம் ஆனந்த் said...

nice post

ஆதவா said...

இந்த அவலம் எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது... நானே அப்படிப்பட்ட ஒரு பள்ளியில் படித்தவன் தான்!!!

எதிலும் ஒரு சுகம்... மரத்தடியில் படித்தாலும்!!!

உங்களது எழுத்து நடையை இன்னும் சீரமைத்துக் கொள்ளுங்கள்!! கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறீர்கள்!!!

உங்கள் புத்தகத்திற்கு என் வாழ்த்துகள்!!!

அபுஅஃப்ஸர் said...

அருமையான பதிவு தல‌

உணர்ந்து எழுதிருக்கீங்க, இந்த நிலமைகண்டு சொல்ல வார்த்தையில்லை

அப்துல்கலாம் கண்ட கனவுகள் இப்படித்தான் சிதைந்து போகின்றன எதையும் கண்டுக்கொள்ளப்படாததால்

அபுஅஃப்ஸர் said...

வரலாற்றை புரட்டிப்பார்த்தால் பேசப்பட்டவர்கள் ஏல்லோரும் கிராமத்திலிருந்து வந்தவர்கள்தான், கிராம கல்வியை கண்டுக்கொள்ள இனியாவது முயற்சி எடுப்பார்களா இன்றைய அரசியல் தலைவர்கள்......

D.R.Ashok said...

Good one suresh

நட்புடன் ஜமால் said...

நல்ல வரிகள்.

எனக்குள் எப்போதும் எழும் கேள்வி

அதையே இங்கேயும் போடுகிறேன்
-------------------

என்ன செய்யலாம் - அதைப்பற்றி சற்றே யோசிப்போமா!

choli ganesan said...

வணக்கம்
அருமையான பதிவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துஇளைனருக்கெல்லாம் ஒரேமாதிரியான சிந்தனைகள் தானே இருக்கிறது ,அனாலும் நம் சமூகத்தில் ஏன் இன்னும் மாற்றங்கள் வருவதில்லை என நினைத்து வருத்த படுகிறேன். மாற்றங்கள் எல்லார் மனதிலும் மட்டுமே இருக்கினறனவா விதையாகவே?

malar said...

நான் ஏற்கனவே இந்தபதிவை பார்த்துவிட்டேன் .
ஒவ்வொரு அரசியல் வாதியும் ஒரு பள்ளிக்கு உதவி செய்தாலும் தமிழகத்து பள்ளிகள் எல்லாம் சிறப்பாக நடக்கும் .
நன்றி உங்கள் பினூட்டதிக்கு.

sakthi said...

//நம்ம நாட்டை திருத்த நாம் தான்யா முணையனும்
இன்னொரு மகாத்மாவை எதிர் நோக்கும் சோம்பேறிக்ளே ..
போய் கண்ணாடிய பாரு ...
நீ தான்
அந்த இன்னொரு மகாத்மா

arputham

sakthi said...

"வெட்கை பற்றிக்கொள்ளும் எப்பொழுது விழும் ??? என்ற சுவர்கள்
தரைகளே நாற்க்காலிகளாய்...."

valikindrathu

குசும்பன் said...

சமீபத்தில் பார்த்ததில் மிகவும் கவனம் ஈர்த்த பதிவு சுரேஸ்,
மிக நல்ல தொகுப்பு. நான் ரசித்தது அந்த சீட்டாடும் மாணவனை!

gayathri said...

sakthi said...
//நம்ம நாட்டை திருத்த நாம் தான்யா முணையனும்
இன்னொரு மகாத்மாவை எதிர் நோக்கும் சோம்பேறிக்ளே ..
போய் கண்ணாடிய பாரு ...
நீ தான்
அந்த இன்னொரு மகாத்மா

arputham


rrrrrrrrrreeeeeee[pppppptttuuuuu

பாலா... said...

நன்றி. இப்படி படிக்கிற பிள்ளைங்க தான் கான்வென்ட் பிள்ளைங்கள விட நல்லா படிக்கிறாங்க. வாய்ப்பு தான் அமையணும்.

பித்தன் said...

//அழகிய சிரிப்பு, ஜாதி இல்லை, காசு இல்லை, எந்த கவலையும் இல்லை//

குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சும்மாவா சொன்னாக..

//பிள்ளைகள் என்று சொல்ல முடியாது
அவர்களின் கொல்லு பேரன்களும் பேத்திகளும் படிக்கட்டும் அந்த கட்டடங்களில்//

புரியாத ஆளா இருக்குரிரே... எங்களோட பேரன் பேத்திகளுக்கு எல்லாம் தமிழே தெரியாது... அது இல்லாம அவங்க எல்லாம் இந்தியாவுல்லையே இல்லபா... வெளிநாட்டுல படிக்கவைகுறோம்...

//ஒரு நாட்டின் எதிர்க்காலம்
அந்த நாட்டின் குழந்தையின் கல்வியில் தான் உள்ளது ...
வருங்கால இந்தியாவின் தூண்கள் ...
ஆனால் ஒரு கல்வியைக்கூட நம்மலால தரமாக்கொடுக்க முடியலனா எதுக்குயா வரி ? //

இதுக்கு மேல... ஒன்னும் பேசபடாது சொல்லிபுட்டேன்...
...இந்தியா ஒளிர்கிறது அவ்வளவுதான்... அப்படி தான் பிரச்சாரம் பண்ணுவோம்...

//அந்த வெள்ளகாரன் க்கூட வாங்கிய வரிக்கு
நல்ல கட்டிட்ங்கள் கட்டி ரோடுப்போட்டான்
அது இன்னும் கூட நல்லா இருக்கு..
அவங்க கிட்ட ஒரு கட்டபொம்மன் கேள்வி கேட்டான் ..
//

சொல்றது நெசம்தான்,, என்ன பண்ணுறது கட்டபொம்மன் கேள்வி கேட்டு தொலச்சிபுட்டானே...

//நம்ம நாட்டை திருத்த நாம் தான்யா முணையனும்
இன்னொரு மகாத்மாவை எதிர் நோக்கும் சோம்பேறிக்ளே ..
போய் கண்ணாடிய பாரு ...
நீ தான்
அந்த இன்னொரு மகாத்மா//

என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிபுட்டிக... லைட்டா செருப்பால அடிச்ச மாதரி இருக்கு...

நல்ல பதிவு...

pappu said...

என்ன திடீரென சீரியஸ் பதிவு....

கவின் said...

மொக்கை சுரேசா??? இந்த பதிவு எழுதினது... நல்ல பதிவு
வாழ்த்ஹ்டுகள் புத்தகத்திற்கு!

நாணல் said...

நல்ல பதிவு சுரேஷ்... யோசிக்க பட வேண்டிய விஷயமும் கூட.. என்ன அரசியல் வாதிகளை திட்டி நம் வாய் தான் வலிக்குமே தவிர... அவர்கள் மாறப் போவதில்லை... நம்மால் முடிந்ததை நாம் தான் ஏதாவது செய்ய வேண்டும்....

அண்ணன் வணங்காமுடி said...

நல்ல அவசியமான பதிவு. அருமை

http://arivalee.blogspot.com/

நன்றி...

RAMYA said...

சுரேஷ், மனதிருக்கு மிகவும் பாரமா போச்சு.

நிதர்சனம் அல்லவா ஏற்றுக் கொள்ள கொஞ்சம் கசப்பா இருந்தது.

உங்கள் சிந்தனைகளின் சாராம்சம் அருமையா இருக்கின்றது.

நீங்க எழுதும் ஒவ்வொரு எழுத்துக்களும் முத்துக்களாய் வெளிவர
எனது வாழ்த்துக்கள் சுரேஷ்.

vinoth gowtham said...

சுரேஷ்
ஆயிரம் பேர் இருக்காங்க இது சரி அல்ல அது சரி அல்ல என்று சொல்வதற்கு.
தயவு செய்து பேச வேண்டாம் செய்வோம்.
நான் தயார்.

vinoth gowtham said...

இன்னும் எல்லாம் பேசிக்கிட்டு தான் இருப்பாங்க.
Global Warming nu வாய் கிழிய கத்துன வேலைக்கு ஆகாது.
அட்லீஸ்ட் ஒரு சின்ன செடியாவது நட வேண்டும்.
அதே மாதிரி தான் இதுவும்.
வெளிச்சம் போட்டு காட்டி பெயர் வங்கி கொள்ள ஆயிரம் பேர் இருக்காங்க.
நம்ம அவங்கள ஆகா வேண்டாம்.

Viji said...

What a thoughtful writing, Suresh.
The innocent face of these kids, really touched me...it also raises the concern on the quality of education they wd get...

The urban/ rural divide in India is in extremes, which is not at all healthy.

Instead of promising free rice/wheat / loquor or politicians shud focus on basic education.

In India there are many, many schools without the basic classroom facility....

ஜோசப் பால்ராஜ் said...

இருக்க வரியெல்லாம் போதாதுன்னு கல்விக்குன்னு தனியா Educational Cess அப்டின்னு ஒரு வரிய ப.சி அப்பச்சி போட்டாங்களே? அந்த வரியெல்லாம் எங்க போவுது?

Krish said...

நன்றாக இருக்கிறது உங்களின் வலைப் பதிவு! இந்த பதிவை பார்த்தும் பழைய நியாபகங்கள்!!

Suresh said...

@ மகா

//nalla pathivu//

மகா

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அடிக்கடி சக்கரை கடைக்கு வந்து சந்தோசமா
சிரிச்சிட்டு போங்க

Suresh said...

@Subankan

# //நம்ம நாட்டை திருத்த நாம் தான்யா முணையனும்
இன்னொரு மகாத்மாவை எதிர் நோக்கும் சோம்பேறிக்ளே ..
போய் கண்ணாடிய பாரு ...
நீ தான்
அந்த இன்னொரு மகாத்மா//

சூப்பர்ணா, உங்கள் புத்தகமும் சிறப்பாக வர வாழ்த்துக்கள் #


ரொம்ப ரொம்ப நன்றி சுபா

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அடிக்கடி சக்கரை கடைக்கு வந்து சந்தோசமா
சிரிச்சிட்டு போங்க

Suresh said...

@மகா

//templete is nice//

நன்றி தோழி

Suresh said...

@மாதேவி

// "வெட்கை பற்றிக்கொள்ளும் எப்பொழுது விழும் ??? என்ற சுவர்கள்
தரைகளே நாற்க்காலிகளாய்...."//

# பார்க்கும்போதே மனத்தைவதைக்கிறது. #

ஆமாம் மாதேவி மனதை ரொம்ப பாதித்தது அதான் இந்த பதிவு

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அடிக்கடி சக்கரை கடைக்கு வந்து சந்தோசமா
சிரிச்சிட்டு போங்க

Suresh said...

@KISHORE

///விழிகள் மட்டும் அல்ல இதயமும் நனைகிறது...//

ஆமாம் தோழா ... அதனால் தான் இந்தப்பதிவு

Suresh said...

@கடையம் ஆனந்த்

// nice post //

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆன்ந்த்

Suresh said...

@ஆதவா

// இந்த அவலம் எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது... நானே அப்படிப்பட்ட ஒரு பள்ளியில் படித்தவன் தான்!!!//

ஆமாம் ஆதவா அதற்க்கு ஒரு தீர்வும் என்னிடம் இருக்கிறது இல்லை என்றால் அடுத்த தலைமுறையும்
நானும் அப்படிப்பட்ட ஒரு பள்ளியில் படித்தேன் என்று ஒவ்வொரு தலைமுறையும் கூறும்

நாம் மாத்திக்காட்டுவோம்

//நானே அப்படிப்பட்ட ஒரு பள்ளியில் படித்தவன் தான்!!//

ஒரு மிக சிறந்த படைப்பாளி ... தந்தது அந்த பள்ளி...


//எதிலும் ஒரு சுகம்... மரத்தடியில் படித்தாலும்!!!//
நானும் :-) அந்த சுகத்தை ஒரு சில நாட்கள் அனுபவித்துள்ளேன்

//உங்களது எழுத்து நடையை இன்னும் சீரமைத்துக் கொள்ளுங்கள்!! கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறீர்கள்!!! //
கண்டிப்பாக

// உங்கள் புத்தகத்திற்கு என் வாழ்த்துகள்!!! //
மிக்க நன்றி

Suresh said...

@அபுஅஃப்ஸர்

//அருமையான பதிவு தல‌//

ரொம்ப ரொம்ப நன்றி அபு உங்கள மாதிரி நல்ல உள்ளங்களின் ஊக்கங்கள் தான்

//உணர்ந்து எழுதிருக்கீங்க, இந்த நிலமைகண்டு சொல்ல வார்த்தையில்லை//
ஆமா இது என்னை ரெண்டு நாட்களா தூங்க விடவில்லை ... பதிவு போட்ட பிறகு தான்
பாரத்தை இறக்கி வைத்தார்ப்போல் ஒரு உணர்வு, ஆனாலும் இதை சரி செய்யாமல் மணம் உறங்காது

//அப்துல்கலாம் கண்ட கனவுகள் இப்படித்தான் சிதைந்து போகின்றன எதையும் கண்டுக்கொள்ளப்படாததால்//
ஆமாம் அபு

@அபுஅஃப்ஸர்

// வரலாற்றை புரட்டிப்பார்த்தால் பேசப்பட்டவர்கள் ஏல்லோரும் கிராமத்திலிருந்து வந்தவர்கள்தான், //
அது என்னவோ மறுக்க முடியாத உண்மை... அருமையா சொன்னீங்க
//கிராம கல்வியை கண்டுக்கொள்ள இனியாவது முயற்சி எடுப்பார்களா இன்றைய அரசியல் தலைவர்கள்......//
முயற்ச்சி எடுக்கவைக்கனும்

Suresh said...

@அபுஅஃப்ஸர்

// வரலாற்றை புரட்டிப்பார்த்தால் பேசப்பட்டவர்கள் ஏல்லோரும் கிராமத்திலிருந்து வந்தவர்கள்தான், //
அது என்னவோ மறுக்க முடியாத உண்மை... அருமையா சொன்னீங்க
//கிராம கல்வியை கண்டுக்கொள்ள இனியாவது முயற்சி எடுப்பார்களா இன்றைய அரசியல் தலைவர்கள்......//
முயற்ச்சி எடுக்கவைக்கனும்

Suresh said...

@D.R.Ashok

//Good one suresh//

நன்றி அசோக்

Suresh said...

@நட்புடன் ஜமால்

# நல்ல வரிகள்.

எனக்குள் எப்போதும் எழும் கேள்வி

அதையே இங்கேயும் போடுகிறேன்
-------------------

என்ன செய்யலாம் - அதைப்பற்றி சற்றே யோசிப்போமா! #

அதற்க்காண முயற்சியும் ஒரு பெரிய யோசனையும் என்னிடம் இருக்கிறது வலையுலக நண்பர்களிட்ம் தான் முதல் பகிர்வு இருக்கும்

Suresh said...

@choli ganesan

// வணக்கம்
அருமையான பதிவு //
நன்றி தோழா

//தமிழ்நாட்டில் உள்ள அனைத்துஇளைனருக்கெல்லாம் ஒரேமாதிரியான சிந்தனைகள் தானே இருக்கிறது ,அனாலும் நம் சமூகத்தில் ஏன் இன்னும் மாற்றங்கள் வருவதில்லை என நினைத்து வருத்த படுகிறேன். மாற்றங்கள் எல்லார் மனதிலும் மட்டுமே இருக்கினறனவா விதையாகவே?//

வாங்க கணேசன்

உங்கள் எழுத்துகளில் தெரிகிறது நிங்கள் யார் என்று?

அதற்க்காண முயற்சியும் ஒரு பெரிய யோசனையும் என்னிடம் இருக்கிறது வலையுலக நண்பர்களிட்ம் தான் முதல் பகிர்வு இருக்கும்

Suresh said...

@malar

//நான் ஏற்கனவே இந்தபதிவை பார்த்துவிட்டேன் .
ஒவ்வொரு அரசியல் வாதியும் ஒரு பள்ளிக்கு உதவி செய்தாலும் தமிழகத்து பள்ளிகள் எல்லாம் சிறப்பாக நடக்கும் .
நன்றி உங்கள் பினூட்டதிக்கு.//
அது என்னோவோ உண்மை தான் மலர்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அடிக்கடி சக்கரை கடைக்கு வந்து சந்தோசமா
சிரிச்சிட்டு போங்க

Suresh said...

@sakthi

//நம்ம நாட்டை திருத்த நாம் தான்யா முணையனும்
இன்னொரு மகாத்மாவை எதிர் நோக்கும் சோம்பேறிக்ளே ..
போய் கண்ணாடிய பாரு ...
நீ தான்
அந்த இன்னொரு மகாத்மா

arputham

நன்றி சக்தி :-)

Suresh said...

@sakthi

// "வெட்கை பற்றிக்கொள்ளும் எப்பொழுது விழும் ??? என்ற சுவர்கள்
தரைகளே நாற்க்காலிகளாய்...."

valikindrathu//

ஆமா சக்தி எனக்கும் வலித்தது அதான் இந்த பதிவு..

Suresh said...

@குசும்பன்

// சமீபத்தில் பார்த்ததில் மிகவும் கவனம் ஈர்த்த பதிவு சுரேஸ்,
மிக நல்ல தொகுப்பு. நான் ரசித்தது அந்த சீட்டாடும் மாணவனை!//

ரொம்ப ரொம்ப நன்றி குசும்பன்
நான் அந்த சீட்டாடும் மாணவனில் என்னை பார்த்தேன் :-)

Suresh said...

@gayathri

sakthi
//நம்ம நாட்டை திருத்த நாம் தான்யா முணையனும்
இன்னொரு மகாத்மாவை எதிர் நோக்கும் சோம்பேறிக்ளே ..
போய் கண்ணாடிய பாரு ...
நீ தான்
அந்த இன்னொரு மகாத்மா

arputham


rrrrrrrrrreeeeeee[pppppptttuuuuu

வாங்க காய்த்திரி

ரொமப் ரொம்ப சந்தோசம் ... ஏன் அடிக்கடி நீங்கள் சக்கரை பக்கம் வருவதில்லை என்று சக்தியிடம் கேட்டேன்

எதா இருந்தாலும் பேசி தீர்திக்கலாம் அடிக்கடி சக்கரை கடைக்கு வந்து சந்தோசமா சிரிச்சிட்டு போங்க

Suresh said...

@பாலா...

// நன்றி. இப்படி படிக்கிற பிள்ளைங்க தான் கான்வென்ட் பிள்ளைங்கள விட நல்லா படிக்கிறாங்க. வாய்ப்பு தான் அமையணும். //

மிக சரியாக சொன்னிங்க பாலா ...

Suresh said...

@பித்தன்

//அழகிய சிரிப்பு, ஜாதி இல்லை, காசு இல்லை, எந்த கவலையும் இல்லை//

# குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சும்மாவா சொன்னாக.. #

:-) சரி தான்

//பிள்ளைகள் என்று சொல்ல முடியாது
அவர்களின் கொல்லு பேரன்களும் பேத்திகளும் படிக்கட்டும் அந்த கட்டடங்களில்//

# புரியாத ஆளா இருக்குரிரே... எங்களோட பேரன் பேத்திகளுக்கு எல்லாம் தமிழே தெரியாது... அது இல்லாம அவங்க எல்லாம் இந்தியாவுல்லையே இல்லபா... வெளிநாட்டுல படிக்கவைகுறோம்... #
அதுக்கு தான் இந்த சவுக்கடி... என்ன அடிச்சாலும் எங்களுக்கு உறைக்காது என்று சொல்லும் அவர்களுக்கு இருக்கு ஆப்பு அதை வைப்பவர்கள் நாம் தான்

//ஒரு நாட்டின் எதிர்க்காலம்
அந்த நாட்டின் குழந்தையின் கல்வியில் தான் உள்ளது ...
வருங்கால இந்தியாவின் தூண்கள் ...
ஆனால் ஒரு கல்வியைக்கூட நம்மலால தரமாக்கொடுக்க முடியலனா எதுக்குயா வரி ? //

# இதுக்கு மேல... ஒன்னும் பேசபடாது சொல்லிபுட்டேன்...
...இந்தியா ஒளிர்கிறது அவ்வளவுதான்... அப்படி தான் பிரச்சாரம் பண்ணுவோம்... #

அஹா :-)

//அந்த வெள்ளகாரன் க்கூட வாங்கிய வரிக்கு
நல்ல கட்டிட்ங்கள் கட்டி ரோடுப்போட்டான்
அது இன்னும் கூட நல்லா இருக்கு..
அவங்க கிட்ட ஒரு கட்டபொம்மன் கேள்வி கேட்டான் ..
//

# சொல்றது நெசம்தான்,, என்ன பண்ணுறது கட்டபொம்மன் கேள்வி கேட்டு தொலச்சிபுட்டானே... #

வருவோம் ல :-)

//நம்ம நாட்டை திருத்த நாம் தான்யா முணையனும்
இன்னொரு மகாத்மாவை எதிர் நோக்கும் சோம்பேறிக்ளே ..
போய் கண்ணாடிய பாரு ...
நீ தான்
அந்த இன்னொரு மகாத்மா//

# என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிபுட்டிக... லைட்டா செருப்பால அடிச்ச மாதரி இருக்கு... #
ஹ ஹா லைட்டா தானா ஹ ஹா

// நல்ல பதிவு... //

தோழா உங்க பிண்ணோட்டத்தை மிகவும் ரசித்தேன் பித்தன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அடிக்கடி சக்கரை கடைக்கு வந்து சந்தோசமா
சிரிச்சிட்டு போங்க

Suresh said...

@pappu

// என்ன திடீரென சீரியஸ் பதிவு.... //

சக்கரையின் நோக்கமே இது தான் :-)
சில சமையம் நம்ம சக்கரை தடவி தான் மருந்து கொடுக்கனும் பாப்பு

Suresh said...

@கவின்

# மொக்கை சுரேசா??? இந்த பதிவு எழுதினது... நல்ல பதிவு #
வாழ்த்ஹ்டுகள் புத்தகத்திற்கு!

சக்கரையின் நோக்கமே இது தான் :-)
சில சமையம் நம்ம சக்கரை தடவி தான் மருந்து கொடுக்கனும் கவின்
அரம்பத்தில் இருந்து சீரியஸா பேசினா படிக்க யாரும் இருக்க மாட்டங்க

Suresh said...

@நாணல்

# நல்ல பதிவு சுரேஷ்... யோசிக்க பட வேண்டிய விஷயமும் கூட.. என்ன அரசியல் வாதிகளை திட்டி நம் வாய் தான் வலிக்குமே தவிர... அவர்கள் மாறப் போவதில்லை... நம்மால் முடிந்ததை நாம் தான் ஏதாவது செய்ய வேண்டும்.... #


நன்றி நாணல்
அதற்க்காண முயற்சியும் ஒரு பெரிய யோசனையும் என்னிடம் இருக்கிறது வலையுலக நண்பர்களிட்ம் தான் முதல் பகிர்வு இருக்கும்

Suresh said...

@அண்ணன் வணங்காமுடி

//நல்ல அவசியமான பதிவு. அருமை

http://arivalee.blogspot.com/

நன்றி... //

நன்றி வணங்காமுடி

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அடிக்கடி சக்கரை கடைக்கு வந்து சந்தோசமா
சிரிச்சிட்டு போங்க

Suresh said...

@RAMYA

# சுரேஷ், மனதிருக்கு மிகவும் பாரமா போச்சு.

நிதர்சனம் அல்லவா ஏற்றுக் கொள்ள கொஞ்சம் கசப்பா இருந்தது.

உங்கள் சிந்தனைகளின் சாராம்சம் அருமையா இருக்கின்றது.

நீங்க எழுதும் ஒவ்வொரு எழுத்துக்களும் முத்துக்களாய் வெளிவர
எனது வாழ்த்துக்கள் சுரேஷ். #

ரம்யா,

போதுவா சக்கரைக்கு வரவங்க சந்தோசமா தான் போகனும் என்று நினைப்பது உண்டு
ஆனால் ஒரு சில உண்மைகள் கசத்தாலும் சொல்ல வேண்டியது நம் கடமை அல்லவா
அதான் இந்த பதிவு

ரொம்ப சந்தோசம் உங்கள் வாழ்த்துகளுக்கும் வருகைக்கும்... உங்கள் ஊக்கத்துக்கும்

Suresh said...

@vinoth gowtham

# சுரேஷ்
ஆயிரம் பேர் இருக்காங்க இது சரி அல்ல அது சரி அல்ல என்று சொல்வதற்கு.
தயவு செய்து பேச வேண்டாம் செய்வோம்.
நான் தயார். #

வினோ வெரி குட் இத தான் எதிர்ப்பார்த்தேன்

அதற்க்காண முயற்சியும் ஒரு பெரிய யோசனையும் என்னிடம் இருக்கிறது வலையுலக நண்பர்களிட்ம் தான் முதல் பகிர்வு இருக்கு

Suresh said...

@vinoth gowtham

# இன்னும் எல்லாம் பேசிக்கிட்டு தான் இருப்பாங்க.
Global Warming nu வாய் கிழிய கத்துன வேலைக்கு ஆகாது.
அட்லீஸ்ட் ஒரு சின்ன செடியாவது நட வேண்டும்.
அதே மாதிரி தான் இதுவும்.
வெளிச்சம் போட்டு காட்டி பெயர் வங்கி கொள்ள ஆயிரம் பேர் இருக்காங்க.
நம்ம அவங்கள ஆகா வேண்டாம். #

மிக சரி :-) உண்க்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பிருக்கேன் பார் ... முணைவோம்

Suresh said...

@Viji

// What a thoughtful writing, Suresh.
The innocent face of these kids, really touched me...it also raises the concern on the quality of education they wd get...

The urban/ rural divide in India is in extremes, which is not at all healthy.

Instead of promising free rice/wheat / loquor or politicians shud focus on basic education.

In India there are many, many schools without the basic classroom facility....//

ரொம்ப நன்றி விஜி

// The urban/ rural divide in India is in extremes, which is not at all healthy./

மிக சரி

// Instead of promising free rice/wheat / loquor or politicians shud focus on basic education./

அருமை :-) தோழி

// In India there are many, many schools without the basic classroom facility....////

நிதர்சண உண்மை

விஜி
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அடிக்கடி சக்கரை கடைக்கு வந்து சந்தோசமா
சிரிச்சிட்டு போங்க

Suresh said...

@ஜோசப் பால்ராஜ்

// இருக்க வரியெல்லாம் போதாதுன்னு கல்விக்குன்னு தனியா Educational Cess அப்டின்னு ஒரு வரிய ப.சி அப்பச்சி போட்டாங்களே? அந்த வரியெல்லாம் எங்க போவுது?//

அவங்க அவ்ங்க விட்டுக்கு தான் ...

ஜோசப் பால்ராஜ்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அடிக்கடி சக்கரை கடைக்கு வந்து சந்தோசமா
சிரிச்சிட்டு சிந்திச்சிட்டு போங்க

Suresh said...

@Krish

//நன்றாக இருக்கிறது உங்களின் வலைப் பதிவு! இந்த பதிவை பார்த்தும் பழைய நியாபகங்கள்!!//

உங்கள மாத்ரி நல்ல ஊக்கங்கள் ... உள்ளங்கள் இருக்கும் வரை
நல்ல பதிவுகள் வரும் கிர்ஷ்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அடிக்கடி சக்கரை கடைக்கு வந்து சந்தோசமா
சிரிச்சிட்டு போங்க

தீப்பெட்டி said...

நல்லா சொல்லி இருக்கீங்க

நேற்று அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் இன்று கான்வென்ட் வாசலில் தனது குழந்தைகளுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தன்னை உயர்த்திய அரசு பள்ளிகளில் என்ன குறையை கண்டார்களோ அதை நிவர்த்தி பண்ண இவர்கள் எந்த துரும்பை கிள்ளிப்போட்டர்கள்.
எல்லாவற்றையும் யாரோ வானுலகில் இருந்து தேவதூதன் வந்து செய்வான். நாம் நோகாமல் நொங்கு திங்க வேண்டும் என்ற பேராசை.
அவர்கள் காத்து நிற்பதும் ஒருவகையில் அவர்களின் அசட்டுத்தனத்திற்கு கிடைக்கும் மறைமுக செருப்படி

Rammohan said...

ஆம் ... நீங்களும் தான் மகாத்மா...இணையுங்கள் சாரலில்...
”மகிழ்ச்சி வெள்ளம், குதூகலக் குற்றாலம்னெல்லாம் நம்ம உற்சாகத்தைப் பகிர்ந்துக்க என்னென்னவோ எழுதுவோம், பேசுவோம். ஆனா, பிறந்ததில் இருந்து சந்தோஷத்தோட சாரல்கூட படாதவங்களைப் பத்தி எப்பவாவது யோசிச்சிருக்கோமா?
”வாழ்க்கையில் சந்தோஷ மழைக்காக ஏங்கிக்கிடப்பவர்களுக்கு எங்களோட சின்ன உதவி சாரல்....

http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=3346339

www.saaral.co.in

லவ்டேல் மேடி said...

நெம்ப அருமையான பதிவுங்கோ தம்பி......!!! நெஞ்ங்கோ சொல்லுறது நெம்ப கரக்ட் ....!!
ஆனாலுமும் தம்பி தமிழ்நாட்டுல இருக்குற எல்லா அரசு பள்ளிகோடாங்களும் இப்புடி இருக்கறதில்ல ......!! ஒவ்வொரு அரசு பள்ளிகோடங்கல்ல சிறந்த பொறுப்புமிக்க தலைமை ஆசிரியர்கள் இருக்கதுனால நெம்ப சிறப்பா இயங்கீட்டு இருக்குது......!!!

அப்பறம் இன்னோன்னு...... ஓட்டு போடுரவநேல்லாம் பைத்தியகாரன்னா ......!!!!! ஓட்டு போடாதவிங்கெல்லாம் நெம்ப அறிவாளியாக்கும்......??? கொஞ்சம் யோசிச்சு பாருங்கோ தம்பி...... நீங்க ஓட்டு போடுலீனா அரசியல்வியாதிகளுக்கு இழப்பே கெடையாதுங்கோ.....!!! உங்க ஓட்ட கள்ள ஓட்டா அவிகளே அவிங்க சின்னத்துல குத்தீட்டு போயிருவாங்கோ......!!!


ஒக்காந்து யோசிச்சு பாருங்கோ தம்பி......!!!!!!

குமரை நிலாவன் said...

பதிவை படித்ததும்
மனசுக்குள்ள ஏதோ பாரமாக
இருந்தது நண்பா .
எல்லா கிராமத்து பள்ளிக் கூடங்களையும்
கான்வென்ட் அளவுக்கு ஆக்கமுடியாட்டியும்
ஏதோ என்னால் முடிந்தது எங்கள் கிராமத்து
பள்ளிக் கூடத்தையாவது கான்வென்ட் அளவுக்கு ஆக்கிவிடவேண்டும்
என்பது எனது ஆசை

//நம்ம நாட்டை திருத்த நாம் தான்யா முணையனும் இன்னொரு மகாத்மாவை எதிர் நோக்கும் சோம்பேறிக்ளே .. போய் கண்ணாடிய பாரு ... நீ தான்அந்த இன்னொரு மகாத்மா//


புத்தகம் கண்டிப்பாக நன்றாக வரும்
நண்பா
எனக்கு நன்பிக்கை இருக்கிறது .

சிம்பா said...

சுரேஷ் உங்கள் பதிவுக்கு நான் இதற்க்கு முன் ஒருமுறை வந்துள்ளேன். விகடம் மூலமாக தான்...

மதிய உணவு திட்டத்தில் நடைபெறும் ஒரு சில உள்ளடி விசயங்களை பற்றி செய்தி சேகரித்து வருகிறேன்...

மேலும் ஒரு சில விசயங்களில் உங்களது உதவி எனக்கு கண்டிப்பாக தேவை...

சுட்டி குரங்கு said...

ரொம்ப நல்ல பதிவு !!

கணக்குவழக்கு

 

Copyright 2008 All Rights Reserved