Showing newest 11 of 34 posts from April 2009. Show older posts
Showing newest 11 of 34 posts from April 2009. Show older posts

Thursday, April 30, 2009

விகடனில் - 50வது சக்கரை ஸ்பெஷல் பதிவு

விகடனுக்கு ( விகடன் தாத்தாவுக்கு) என் நாலாவது நன்றிகள் :-)

ரொம்ப சந்தோசம், ஒவ்வொரு முறையும் இளமைவிகடனில் நல்ல பதிவுகளை பப்ளிஷ் செய்து ஊக்கம் தருகிறார்கள்.
அந்த டீமுக்கு டக் டக் டக் ( அதாங்க எழுந்து நின்னு கைதட்டினேன்)

இந்த முறை சக்கரையின் 50வது பதிவு


விகடனுக்கு என் ஸ்பெஷல் நன்றி

காரணங்கள்
  • என் 50வது பதிவு
  • ஸ்பெஷல்  - சரத் பேட்டி
  • ரொம்ப மெனக்கெட்டு,நேரம் எடுத்துக்கொண்டு போட்ட பதிவு
நன்றிகள்
  • எம்.பி.கேண்டிடேட் சரத்க்கு நன்றி
  • ஜப்பான் ஜோவுக்கு நன்றி (அவர் தான் இந்த பதிவை எழுத்து பிழை இல்லாமல் பதிய உதவினார்.)
  • கேள்விகள் அனுப்பிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்.
  • மற்றும் சக்கரகையின் வாசகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!


இது வரை இளமை விகடனில் வந்த பதிவுகள்


நன்றிகள் கோடி
    சுரேஷ்
~சக்கரை~
விகடனில் - 50வது சக்கரை ஸ்பெஷல் பதிவுSocialTwist Tell-a-Friend

Vote For Change ! - வோட்ட போடு

Vote For Change ! - வோட்ட போடு
Vote For Change ! - வோட்ட போடுSocialTwist Tell-a-Friend

Wednesday, April 29, 2009

புதிய தமிழ் பதிவர்களுக்கு - எப்படி தமிழில் பதிவு ( பிலாக்) போடுவது

For New Tamil Bloggers - How to blog in Tamil.
புதிய தமிழ் பதிவர்களுக்கு-எப்படி தமிழில் பதிவு ( பிலாக்) போடுவது

நான் இந்த பதிவை டிராப்ட் செய்து பத்து நாட்கள் இருக்கும், 50வது பதிவுக்காக சற்று தாமதமாக வெளியிட வேண்டியதாய் போயிற்று...

இனி புதிய பதிவாளர்களுக்கு என்ற லிங்கை சக்கரையில் கிளிக்கினால் உங்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் இதில் கிடைக்கும்


 என்ற தளத்தை கிளிக்குங்கள்
புதிய தமிழ் பதிவர்களுக்கு - எப்படி தமிழில் பதிவு ( பிலாக்) போடுவதுSocialTwist Tell-a-Friend

ஆளும் கட்சிக்கு வோட்டு ?

ஆளும் கட்சிக்கு
வோட்டு போட பூத்துக்கு போணேன்
கரண்ட் கட் ... அப்பா
வோட்ட மாத்தி போட்டு வந்த்தேன்
ஆளும் கட்சிக்கு வோட்டு ?SocialTwist Tell-a-Friend

Tuesday, April 28, 2009

சிலேட்டு சின்னத்தை பார்த்து. போடுங்கம்மா ஒட்டு !

சிலேட்டு பார்த்து போடுங்கம்மா ஒட்டு


நாம் கல்வி கற்க
முதன் முதலில் ஏனியாய்
இருந்தது இந்த சிலேட்

என் அம்மா அ,ஆ.. அம்மா என்றும்,
என் கை பிடித்து எழுதி பழகியதும்
இந்த சிலேடில் தான்

என் பெயரை எழுதி அழகு பார்த்ததும்
இந்த சிலேடில் தான்

சிலேட் குச்சிக்கு சண்டை போட்டதும்
சிலேட்டில் மதிப்பெண்கள் வாங்கியதும்

அந்த ஜொலுனா பையில் புது சிலேட்
அதுக்கு ஆடிய ஆணந்த தாண்டவம்
இன்னும் நினைவிருக்கு
இப்படி நம் ஆரம்ப படிப்புக்கு

ஆரம்ப புள்ளியாய்
இருந்த இந்த சிலேட்
இன்று அரசியலின் புத்துணர்ச்சிக்கும்
ஆரம்ப புள்ளியாய்

சரத்தின் வளர்ச்சிக்கு மட்டும் இல்லை
சகநண்பர்களின் வளர்ச்சிக்கும்
பிள்ளையார் சூழியாய் இருந்தது
இந்த சிலேட்

இனி ஒரு விதி செய்வோம்
இளைஞனுக்கு வேளை கொடுக்க
ஏழைக்கு வாழ்வு கொடுக்க
அரசியலை சுத்த படுத்த

எம்பியாய் எவ்வளவோ
வீட்டுக்கு இல்லாமல்
நாட்டுக்கு செய்ய
மே 13 வீட்டில் இருந்து

தெம்பாய் எழுந்து,
தென் சென்னை சரத்துக்கு
போடுங்கம்மா வோட்டு
சிலேட்டு சின்னத்தை பார்த்து

புரட்சியை உங்கள்
வோட்டில் போடு
மகிழ்சியை உங்கள்
முகத்தில் பாரு

   சுரேஷ்
~ சக்கரை~
சிலேட்டு சின்னத்தை பார்த்து. போடுங்கம்மா ஒட்டு !SocialTwist Tell-a-Friend

Monday, April 27, 2009

50வது பதிவு ~சக்கரை ~ ஸ்பெஷல் - சரத்பாபுவின் கேள்வி பதில் பேட்டி - தமிழில்

50வது பதிவு ~சக்கரை ~ ஸ்பெஷல்
  சரத்பாபுவின் கேள்வி பதில் பேட்டி.






நான் தமிழ் பதிவு போட அரம்பித்தது மார்ச் மாதம். இது வரை நான் இரு
பதிவுகளுக்கான இடைவெளியாய் 6 நாட்கள் விட்டது இல்லை, எந்த ஒரு பதிவும் போட ரொம்ப நேரம் எடுத்துகிட்டதும் இல்லை.
 
அவரு ரொம்ப பிஸியா இருந்த நேரத்திலும் கூட ( காரணம் அவரு அன்றைக்கு
நாமினேஷன், கட்சி கேம்பெயின் என்று சரியாக உறங்காமல், உண்ணாமல் பிஸியாக இருந்த நேரத்தில் எனக்கு இந்த பேட்டி கொடுத்தது அவரின் பெரிய மனசு, முதலில் அவரு சொன்ன வார்த்தை ஸாரி உங்கள கொஞ்சம் காத்திருக்க வைத்துவிட்டேன், ஒருமனிதன் ஸாரி கேட்க பெரிய மனசு வேணும், பெரும்பாலான மக்களிடம் அது இல்லை)

நான் ஏரகுடி என்ற கிராமத்துக்கு சனிக்கிழ்மை மதியம் சென்று இருந்தேன். திருச்சி துறையுர் தாண்டி இருக்கு... அங்குள்ள கோவணம் கட்டின என் கடவுள், விவசாயி மற்றும் சில பொது மக்களிடம் பேசிக்கொண்டு இருந்த போது தம்பி உங்க வோட்டு யாருக்கு, எங்க ஊருல அடுப்பு கொடுத்தாரு கலைஞர் அவருக்கு என்று ஒரு பல்லு இல்லா பாட்டியும், ஆனா என் சுவத்தில இரட்டை இலை வரஞ்சி வச்சிடாங்க இரவுல கொல்லேல போறவங்க


ஒரு தாத்தா என் வோட்டு இரட்டை இலைக்கு தான் என்று சொன்னார்.இன்னொரு மெட்டர் சொன்ன போது எனக்கு மிக பெரிய அதிர்ச்சி, தம்பி தென் சென்னையில் உங்கள மாதிரி ஒரு இளைஞர் நிக்குறாமே? நாங்கஅங்க இல்லை, ஆமா அவரு அம்மா இட்லி கடை வச்சி படிக்க வைச்சாங்களாமே என்றும்குடிசையில் இருக்கிறார் என்று சொன்னார்கள் 4 பேரு எல்லாம் வயதான கிராம மக்கள், அவர்களுக்கு அவரை பற்றி ரொம்ப தெரியாவிட்டாலும் அவரு பெயர் சொன்னது தான் எனக்கு அதிர்ச்சி, அப்புறம் அவரை பத்தி நான் இன்னும் சொல்லி,

அவரு அவ்வளவு பணம் வைத்துமா குடிசை என்று என் கதை கேட்ட பிறகு சொனனார்கள், ஹ்ம்ம் நம்ம பதிவுல அவர பத்தி சொன்னதுக்கு எதிர் பதிவுகளாய் ஒரு சில அறிவுஜீவிகள் சப்ப கட்டு கட்டினதையும் சொன்னேன்,

என்னப்பா சின்ன பசங்க நீங்க எல்லாம் ஒண்ணா இருந்தா அதுவே ஒரு நல்ல மாற்றம் என்று அந்தபாட்டிக்கும் தாத்தாவுக்கும், விவசாயிக்கும் தெரிந்ததும் கூட இவங்களுக்கு தெரியலயே

ஆமா உங்களுக்கு எப்படி அவர பத்தி தெரியும் என்றேன். அதற்க்கு அவங்க அங்கே உள்ள ஒரு 11 ஆம் வகுப்பு படித்த ஒரு இளைஞனை பத்தி சொன்னாங்க. டேய் சரவணா இங்க வாடா.. தம்பி கூப்பிடுது  என்றார்கள்.

அவரிடம் பேசிய பிறகு தான் தெரிந்தது அவருக்கு ஜீனியர் விகடன் மூலமாய் இவரை பற்றி தெரிய வந்ததாம் .அவரு சொல்லிய தாக்கதை தாத்தகளிடமும் பாட்டிகளிடமும் பார்க முடிந்தது .
அவர்கள் கண்ணில் நாங்க இருக்கும் போதே நல்லதொரு  தமிழகத்தை பார்க்க மாட்டோமோ என்ற ஏக்கத்தை பார்த்தேன்.

 அவர்களின் சொத்து எல்லாம் நிலம், ஒரு ( கார )குடிசை வீடு.

 திருச்சி வந்தவுடன் சரத்துக்கு போன் போட்டு.
அவரிடம் இதை பற்றி சொன்னேன் ஒரு கிரமத்தில் உங்கள் பெயர் தெரிந்து இருக்கு அதுவே ஒரு வெற்றி சரத் என்று. இனி இந்த வோட்டுகள் எல்லாம் சும்மா.

என்ன பொருத்த வரை அவர் வென்று விட்டார் ஒரு இரட்டை இலை, திரவாட கட்சிகள் மட்டும் தெரிந்த மக்களிடம் இன்று ஒரு இளைஞனை பற்றி தெரிந்து இருக்கிறது. இன்று  4 பேருகாவது தெரிந்தது, நாளை 4 கோடி பேருக்கும் தெரியும் .... ஆனந்தம் மக்கா

சரி இனி அவரது பேட்டி... ( இதையும் படித்து நொல்ல சொல்லி பதிவு போடும் பதர்கள் இருப்பார்கள் அவர்களை பற்றி கவலை இல்லை )

# சரத் நிறைய இளைஞர்களிடம் ஒரு நெருப்பை பற்ற வைத்து இருக்கிறார் என்றால் அது மிகை அல்ல, ஆனால் சமான்ய மக்களிடம் சில கேள்விகள் இருக்கின்றது. அவர்களது மனதில் உள்ள கேள்விகளை சக்கரைக்கு அனுப்ப சொல்லி இருந்தோம். மெயிலிலும் பின்னூட்டத்திலும் வந்த கேள்விகள் நூற்றுக்கணக்கானவை, ஆனால் எல்லாம் ஒரே வகையராவை சேர்ந்தது.

ஆதலால் எல்லா கேள்விகளும் வரும் படியாய் நல்ல கேள்விகளை தேர்ந்து எடுத்து இங்கே உங்களுக்கு பேட்டியாய் கொடுத்தூள்ளோம்#

இனி பேட்டி ...

வணக்கம் சரத்,
உங்களது ஓய்வில்லாத நிகழ்ச்சி நிரலிலும் இந்த நேர்காணலுக்கு
ஒத்துக் கொண்டதற்கு முதற்கண் நன்றிகள்.

நேர்காணலை தொடங்குவோமா?

சரத் : ஆரம்பிக்கலாமே.

வணிகத்தில் மிகப் பெரிய வெற்றியைக் கண்ட பிறகு, ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்?


நான் நாற்பது வயது அடையும் போது அரசியலில் நுழையலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். அதற்குள் எனது நிறுவனத்தை ஆயிரம் - இரண்டாயிரம் கோடி ஈட்டும் தொழில் நிறுவனமாக உருவாக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் இப்போது சமுதாயத்தில் நடப்பவற்றை பார்த்து என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் எனது திட்டத்தை 12 வருடங்கள் முன்னதாக்கி விட்டேன். ” மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களின் போது தான் நான் தேர்தல் அரசியலில் இறங்கி, சமூகத்தில் இருக்கும் அனேக மக்களை சென்றடைய முடிவு செய்தேன்".

முதலில் ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பின்மை தான் ஒரு பிரச்சினை என்று நினைத்தேன். ஆதலால் எனது நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கினேன்.

ஆனால் பிரச்சினை அரசியல் தான் என்று பிறகு உணர்ந்தேன். எனதைப் போல நூறு நிறுவனங்களை உருவாக்க, ஒவ்வொன்றும் ஒரு லட்சம் வேலைகளை உருவாக்க, நான் மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்பினேன்.

உங்களது தன்னேற்பு திட்டம் என்ன?

ஏழ்மை இல்லாத இந்தியா.
அனைவருக்கும் கல்வி.
வலிமையான இளைஞர் மன்றங்கள். சேரிகளையும், சிறுதொழில் நிறுவனங்களையும் முன்னேற்றும் பயனுள்ள அரசாங்க திட்டங்கள்.
 

அரசியலுக்கு வருவதற்கு முன் உங்களுக்கு உள்ள சமூகப் பணி அனுபவத்தைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ஊழியர்கள் அவர்களது கனவுகளை அடைவதும், அவர்களது குடும்பங்களைத் தாங்கவும் உதவுவது தான் எனது தொழிலின் மைய நோக்கம்.

850 நாட்கள் தொழில்முனைவர் அனுபவத்தில், 350 நாட்கள் இளைஞர்கள் பல
நிறுவனங்களை தொடங்க ஊக்குவித்தலிலும் அறிவுரை கூறுவதிலும் நான் செலவு செய்தேன். ( மீன் பித்து கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் அவர்களே மீன்களை பிடித்துக்கொள்வார்கள் என்ற பழமொழி தான் என் நினைவுக்கு வந்தது)

ஒரு மிகப் பெரிய தொழில் முனைவரை விட நூறு சிறிய தொழில் முனைவோர்
சமூகத்துக்காக உழைப்பது சிறந்தது.
 
தேர்தலில் வெற்றி பெறுவீர்களா?

ஆம், வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளது. இளைஞர் சக்தியில் நான்
நம்பிக்கை வைத்துள்ளேன். மக்கள் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால்,மாற்றம் தொடங்க ஆரம்பிக்கும்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு உங்கள் நிலை என்னவாக இருக்கும்? 

எனது தொகுதிக்கு தேவையான வேலைகளை திறமையாக செய்வதே மைய நோக்கமாக இருக்கும்.
 
எனது நேர்மையான கொள்கைகளையும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் மாற்ற மாட்டேன்.

தேர்தலுக்கு பிறகு உங்கள் தொழிலையும் இணையாக எப்படி செய்வீர்கள்?

தொழில் நெறிகளின்படி தொழிலை செய்ய வேண்டும்.லாபம் மட்டும் எனது குறியாக இருந்திருந்தால், அதை வியாபாரத்திலேயே செய்திருப்பேன்.

வியாபாரம் தனியாகவும், மக்கள் சேவை தனியாகவும் இருக்கும்.

ஒரு வேளை நீங்கள் தோல்வியடைந்தால்?

நான் தோற்றாலும் கூட, அனேக மக்களை ஒரு இளைஞனுக்கு வோட்டு போட
வைத்ததற்காகவும், ஒரு வாய்ப்பு அளித்ததற்காகவும் மகிழ்ச்சி அடைவேன்.

நீங்கள் எங்கள் மேல் நம்பிக்கை வைத்தால், இளைஞர்கள் சமூகத்தில் ஒரு
மாற்றத்தை கொண்டு வருவார்கள்.


வேறு ஏழ்மையான தொகுதியில் போட்டியிடாமல் சென்னையில் ஏன்
போட்டியிடுகிறீர்கள்?


நான் வேறு தொகுதியில் நின்று தோற்றால் ஏழை மக்களுக்கு எந்த பயனுமிருக்காது. நான் வெற்றி பெற்றால் அவர்களுக்காக உழைக்க முடியும். தென் சென்னையில் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வெற்றி பெற்ற பின் பசியற்ற, சேரியற்ற இந்தியாவை உருவாக்குவதே எனது மைய நோக்கமாக இருக்கும்.

பிரச்சாரத்துக்கு தேவையான நிதியை எப்படி சமாளிப்பீர்கள்?

25 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையத்தினால் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். நன்கொடைகளை வாங்கும் பணியில் ஏற்கனவே இறங்கி விட்டேன்.
எனது நிறுவனத்திலிருந்து ஒரு ரூபாய் இந்த தேர்தலுக்காக
வராது, பிரச்சார நிதிப்பணம் ஒரு ரூபாய் கூட எனது நிறுவனத்துக்கு செல்லாது
என்பதே எனது வாக்கு.

தமிழ்நாட்டில் போட்டியிடுகிறீர்கள், ஆனால் உங்களது இணையத் தளம் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் இருக்கிறதே?

எனது இணையத் தளம் தற்போது ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழுக்கு மொழி
பெயர்க்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது.

உங்கள் உடையை பற்றி ஒரு ஜாலியான கேள்வி - மேலங்கி ( Coat, Blazer) ஏன் அணிகிறீர்கள்? (சென்னை பயங்கர சூடாக இருக்கிறதே)

(சிரிக்கிறார்)

தொழில் நெறிப்படி எனது தொழிலை செய்கிறேன், அதனைப் போலவே உடையும் அணிகிறேன். அரசியல் சமூக சேவையைப் பற்றியதே தவிர உடையைப் பற்றியது அல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

கோடீஸ்வரர் ஆன பிறகும் ஏன் குடிசையில் வாழ்கிறீர்கள்?

நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை என்னால் மறக்க முடியாது.
இத்தனை கோடிகளை சம்பாதித்த பிறகும் எனது பழையகாலத்து வீட்டில் எனது தாயாருடன் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சியே.
விலையுயர்ந்த வீடு மகிழ்ச்சியான வாழ்க்கையை தந்து விடாது.

லோக் பரித்ரான் உடன் உங்களை ஒப்பிடுங்கள்.

லோக் பரித்ரானின் நோக்கத்தை நான் மதிக்கிறேன். நான் தோற்றாலும் கூட,
மக்களுக்காக தொடர்ந்து உழைக்க முயற்சி செய்வேன். தோல்வி என்பது வெற்றிக்கு செல்லும் படிக்கல்.

உங்களது தேர்தல் அறிக்கை மேலோட்டமாக இருக்கிறதா? இதை எப்படி செயல்படுத்துவீர்கள் என்று சொல்ல முடியுமா?

தயவு செய்து, எனது இணைய தளத்தில் இருக்கும் ஒரு பக்க அறிக்கையை படித்து பாருங்கள்.

இந்த நாள் வரை வந்த தேர்தல் அறிக்கைகளிலேயே, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அறிக்கை என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்.
ஒரு நோக்கத்தை அறச்சார்பான இயக்கமாக, செயல் திட்டமாக மாற்றுவதற்கு என்னுடைய மேலாண்மை அறிவை எப்படி பயன்படுத்தி இருக்கிறேன் என்பதை காட்டுகிறது. எனது அறிக்கையை நீங்கள் இங்க தரவிறக்கம் செய்யலாம். http://sarathbabu.co.in/in/manifesto/


இளைஞர்களுக்கும், சக்கரை வலைமனை வாசகர்களுக்கும் நீங்கள் கூறும் செய்தி.

நான் அறிந்திராத இளைஞர்கள் பல பேர் வெகு ஆர்வமாக எனக்கு உதவி செய்கிறார்கள், அவர்களது அற்புதமான ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி.

இளைஞர்களே, வாருங்கள் நாம்

ஒன்று சேர்ந்து ஒரு மாற்றத்தை உருவாக்குவோம். நீங்கள் எப்போதும் என்னை இந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் sarathbabu.southchennai@gmail.com.

மக்களை சென்றடைவதற்கும், அவர்களது கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததற்காக சுரேஷுக்கும், சக்கரை வலைமனை வாசகர்களுக்கும் முக்கியமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 சுரேஷ் - இந்த அருமையான நேர்காணலுக்காக உங்களுக்கு நன்றி, சரத்பாபு.  உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி, எங்களது கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு நன்றி.

இது அனைவருக்கு ஒரு தெளிவான எண்ணத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். சக்கரை பதிவு வாசககர்கள் மற்றும் எனது சார்பாக நீங்கள் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இந்த பதிவை தமிழில் எழுத்து பிழை இல்லாமல் எழுத உதவியாய் இருந்த நல்ல உள்ளம் ஜப்பான் ஜோ அண்ணன் ஜோ ஆனந்த் அவர்களுக்கு சிறப்பு நன்றி

-  நன்றி
  சுரேஷ்
~சக்கரை~

சரத்பாபுவின் எலக்ஷன் வீடியோ
50வது பதிவு ~சக்கரை ~ ஸ்பெஷல் - சரத்பாபுவின் கேள்வி பதில் பேட்டி - தமிழில்SocialTwist Tell-a-Friend

50வது பதிவு ~சக்கரை ~ ஸ்பெஷல் - சரத்பாபுவின் கேள்வி பதில் பேட்டி- ஆங்கிலத்தில்

Exclusive interview with Sarath babu. 
Hot Question and Answers with the MP candidate Food King Owner Sharath Babu
  ~Sakkarai~ Best Tamil Blog.



# Many of the youngsters are happy that Sarath has initiated the fire in politics. 
But there were few questions which are there in the minds of every common people.
Through sakkarai blog we initiated a process of collecting the questions  and we received many questions over mail and blog comments, there were about hundreds of questions received over mail. Since most of them are similar.I finally drafted the questions for the interview such that it covered almost all the questions. #


Hi Sarath,
First of all thanks for accepting the interview in your busy schedule.
Shall we start the interview
Sarath : Yes, please 


Why politics after seeing such a huge success in business?
I had planned to enter politics when I turned 40. By then I had planned to make my company a Rs 1000-2000 crore enterprise. But I simply could not take what is happening. So I advanced my plan by 12 years.
It was during the Mumbai terror attacks that I took the decision to plunge into electoral politics in order to reach out to more people across society,”
Initially I thought it was the lack of jobs that was a problem for the poor people. So I set about creating jobs within my company but then I realised the problem is politics. I want to help others create a hundred companies like mine, providing one lakh jobs each.

Whats Your mission ?

Poverty free india
Education for all
Strong youth forums
Effective government plans to develop slums and small scale enterprises

Can you share us your Social Service Experience before coming into politics.
Focus of my business is to help employees achieve dreams and support families.
I have spent more than 350 days of my 850 day entrepreneurship career encouraging and mentoring youngsters to open more companies. 100 smaller entrepreneurs working for society are better than 1 huge entrepreneur.

Will you win elections?
Yes I am confident I will. I am confident of youth power. Things will start changing if people decide to give youth a chance.

What will be your stand after winning elections?

Focus will be on getting work done efficiently for my constituency. I wont change my principles of honesty and commitment to my people.
 
How will do your business in parallel after elections?
Business has to be done professionally. If profit was my only motive, i could have done it by concentrating on my business itself. Business will be separate and public service will be separate.

What if you lose?
Even if i lose, I will be happy if i would have been able to convince more people to vote for the youth and give them a chance. If you have confidence in us, youth will bring change to society.

Why are you contesting in Chennai and not in other poor area?

Poor people dont benefit if i just stand in elections from their area and lose. I will be able to work for them better if i win. I am confident of winning from South Chennai. After winning, my mission is to have a hunger free and slum free India.

How do you manage funds for campaigning ?
We are allowed to spend Rs 25 lakh. I am already in the process of collecting donations. My promise is that not even one rupee for this election will come from my company and not one rupee from the campaign funds will go to my company.

 
Contesting in TN I see your website in English and not in Tamil ?
My website is currently in english. I am getting the website translated to tamil.

On a lighter note about your dress - Why are you wearing blazers ( Its too hot !).
Laughs ! ...
I represent educated youth who looks forward to the future. I dress professionally and I do my work professionally. Politics is about social service not dress.

Being a Crorepati why are you still living in hut ?

I cannot forget where i come from. Even after earning crores, i am happier staying in my childhood home with my mother. A costly house does not mean happy life.

Compare you yourself with Lok Paritran
I respect the cause of Lok Paritran. Even if i fail, i will continue trying to work for the people. Failure is a stepping stone to success
 
Is your Manifesto superficial ?
Can you tell us how will you implement the same ?
Please read my one page manifesto on my website. 
I proudly claim it is the most structured manifesto prepared till date. It shows how I have used my management knowledge to convert a vision to a mission to goals to action plan.
You can download my manifesto from here : http://sarathbabu.co.in/in/manifesto/


Message to youngsters and Sakkarai Blog Readers
Many Youngsters whom i don't know are helping me with such a passion.Thanks to all, for your wonderful support and love. Youngsters, come lets join hands together to make a change.You can always reach me at sarathbabu.southchennai@gmail.com. A Special Thanks to Sakkari Blog readers and Suresh for creating this opportunity to reach people and answer their questions.

Thank You Sarathbabu for this wonderful Interview. 
Thanks a lot spending your valuable time and answering many of our questions. 
Hope this will give clear idea to all. Once again thanks a lot and wishes from all Sakkarai Blog Readers and myself to win elections.

     Suresh
~ Sakkarai ~


Watch the Election Promo Video of SarathBabu

50வது பதிவு ~சக்கரை ~ ஸ்பெஷல் - சரத்பாபுவின் கேள்வி பதில் பேட்டி- ஆங்கிலத்தில்SocialTwist Tell-a-Friend

Tuesday, April 21, 2009

சரத்பாபுவுக்கு வெற்றி நிச்சியம் - கலக்கல் அலசல்.

எம்.பி கேண்டிடேட் சரத்பாபுவுக்கு வெற்றி நிச்சியம் -  கலக்கல் அலசல்
குடிசையில் இருந்து கோட்டைக்கு


சரத்ப்பாபுவிடம் நேற்று போனில் பேசும் வாய்ப்பு கிடைத்தது... அருமையாய் பேசினார் , எதோ பழகிய நன்பர்ப்போல், ஒரு எம்.பி கேண்டிடேட் இடம் பேச முடியுமா அதுவும் ஒரு சாதரண இளைஞன்.. நடத்ததே ... அன்பாய், பன்பாய் ஒரு மாப்பிளை மச்சான் சொல்லதா குறை தான் .. அப்படி ஒரு பழகிய நட்பு போல் பேச்சு.
சக்கரையின்  50 வது சிறப்பு பதிவாய் அடுத்த பதிவு சரத்பாபுவின்  சிறப்பு பேட்டி.உங்கள் மனதில் இருக்கும் கேள்விகளை sakkaraisuresh@gmail.com
 
இப்போது அவரின் வெற்றி வாய்பு சாத்தியமா ? என்று ஒரு அலசல்
நம் சக்கரையின் வாசகி சில கேள்விகளை கேட்டார் அந்த கேள்வியின் பதில் எல்லாருக்கும் போய் சேர வேண்டும்...

English
//Hey Suresh, Personally i do admire this IIM grad:-), and appreciate his initiative.
But i am not happy with voting for independant candidates....Many a time they just help in splitting the votes...And even if they manage to win, they can contribute nothing much....//

தமிழில்
" சுரேஷ், என் தனிப்பட்ட முறையில் நான் அவரை பார்த்து பிரம்மித்து ரசிக்கும் ஒரு நபர் மற்றும் அவரது இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன்.
ஆனால் ஒரு தனி நபர் அதாங்க சுயேட்சிக்கு நான் வோட்டு போட விரும்பவில்லை. பெருப்பாலன நேரங்களில் அவர்கள் ஓட்டுகளை பிரிக்கின்றார்கள், அப்படியே அவர்கள் ஜெய்த்தாலும் அவர்கள் ரெம்ப பெரிசா
ஒன்னும் நமக்கு செய்ய முடியாது"
இந்த தோழி ஒரு தைரியச்சாலி. அவரின் எழுத்துகள் எப்போதும் ஒரு வித நேர்மையான அழகுடன் இருக்கும்... இவரின் இந்த வெளிப்படையான கேள்வி என்னை கவலையில் அழ்த்தினாலும் அவரின் இந்த வெளிப்படையாய் கேட்ட விதம் கவர்ந்தது... உங்களுக்கும் இந்த கேள்விகள் இருக்கலாம் அதற்க்கான பதில் தான் இந்த பதிவு

// But i am not happy with voting for independant candidates....Many a time they just help in splitting the votes...//

அப்படி இல்லை... நிங்க சொன்ன மாதிரி எல்லாரும் நினைத்தால் அப்புறம் அவருக்கு டிப்பாஸ்ட் போய்டும் ..அது அவருக்கு மிக பெரிய வெறுப்பை ஏமாற்றத்தை இந்த மக்களின் நம்பிக்கையின்மையை கொண்டு வரும்.
பேசாம நம்மலும் நம்ம வேளை உண்டு நாம் உண்டு இருக்கலாம் என்று தோண வைக்கும்

அவரு ஜெய்க்காட்டி கூட அவருக்கு சேரும் ஒரு ஒரு வோட்டும் அவருக்கு ஒரு மிக பெரிய நம்பிக்கை.நம்ம வோட்டு நல்ல ஆட்சி கிடைக்காட்டியும் நல்ல ஒரு இளைஞனுக்கு நம்பிக்கை கொடுத்தோம் என்று சந்தோசம் இருக்கும்..

//And even if they manage to win, they can contribute nothing much....//

சத்தியாமா அவரு ஜெய்த்தால் ஒரு மிக பெரிய மாற்ற்த்தையும் தன்நம்பிக்கையும் இளைஞ்ரிடமும் மக்களிடமும் கொண்டு வரும்

நேற்று இது பற்றி அவரிடம் சொன்ன போது அவரு சொன்ன கதை அருமையான கதை அனைவருக்கும் தெரிந்த கதை தான் ...
"ஒரு நாள் ராசா எல்லாரு வீட்டில் இருக்கும் பாலில் கொஞ்சம் ஒரு பெரிய பாத்திரத்தில் உத்த சொன்னாராம் அதற்க்கு எல்லாரும் " நம்மை தவிர எல்லாரும் பால் உத்துவாங்க என்று எண்ணி தண்ணி உத்தினாங்க கடைசியில்
அந்த பாத்திரத்தில் தண்ணி தான் இருந்தது.. அது போல இப்படி எல்லாரும் நினைச்சு வோட்டு போடாடி கடைசியில் தண்ணி கதை தான்"
சரத்பாபு பற்றி என் 20 நன்பர்கள் தென் சென்னை நன்பர்களிடம் சொன்னேன் எல்லாருக்கும் அவரை தெரிந்து இருக்கிறது ஆனா அவரு எலக்ஷன்ல நிக்கிறது யாருக்கும் தெரியல... அது தான் மிகப்பெரிய வருத்தம், அவருக்கு எல்லா படித்த இளைஞர்களும் வோட்டு போடுவாங்க ஆனா அவரு நிக்கிறது தெரிந்தால் தான். இல்லைனா எதோ ஒரு சரத்பாபு என்று மிஸ் ஆகிடும்.


சரி அவருக்கு என்னால் முடிந்த அலோசனையை சொன்னேன்
 
1. போஸ்டர் அடித்து ஒட்டுங்கள் தென் சென்னை ஏரியா முழுவது ஒரு இளைஞன் நிக்கிறான் என்று தெரியட்டும். 
2. யார் இவர் என்ற கேள்வியாவது வரும். அந்த வாசங்கள் ரொம்ப அழமானதாய் இருக்கனும். டீ கடையில் ஒட்டனும்
3. தென் சென்னை எரியா பேப்பர் டிஸ்ட்ரிபுஸன் ஒரு இடத்தில் இருந்து தான் நடக்கும் அந்த இடத்தில் ஒரு ஒரு பேப்பர்குள் ஒரு துண்டு நோடிஸ், இது படித்த மக்களை சென்று அடையும்.
4. அவரு இப்போ சேரிக்கு சென்று வந்துயுள்ளர் அந்த புகைப்படங்கள் அனைத்து டீ கடை வாசலிலும் இருக்கனும் அப்போ அது ஏழை மக்களை சென்று அடையும்
5. அவரின் தேர்தல் அறிக்கை அனைவரையும் சென்று அடையும் படி செய்யனும்
6. அனைத்து கனிணி நிறுவனத்திலும் ஒரு மாஸ் இமெயில், ஒரு போஸ்டர் இருக்கனும்
7. அந்த ஏரியா சங்கங்கள், கல்லூரி,பள்ளிகள் எல்லாவற்றிக்கும் ஒரு விசிட்

உங்களின் ஆலோசனைகள் அவசியம், அதை பின்னூட்டதில் தெரிவிக்கலாம்

இப்போது அவரின் வெற்றிக்கு தேவை 
1. தென் சென்னை இளைஞர்கள்.
2. எல்லா ஆபிஸ்க்கும் அவரை பற்றி மெயில் பண்ண ஒருதராவது இருக்கனும். அப்படி இருந்தால் உங்களின் நம்பர், இமெயில், பெயர், உங்க நன்பர்களின் பெயர், இமெயில், போன் நம்பர் ஆகியவற்றை ஒரு XL ல போட்டு அவருக்கு
மெயில் பண்ணுங்க - sarathbabu.southchennai@gmail.com


அவரின் சின்னம் ஏப்ரல் 27 அன்று அறிவிக்கப்படும். அது வரை நம்மால் முடிந்த முயற்சினை செய்வோம்.

தென் சென்னை படித்த மக்களின் கோட்டை, எல்லா படித்த் மேதாவி அறிவாளிகளும் வீட்டில் லீவ் உட்டாங்க  என்று படுத்து நியுஸ்ல தேர்ல் பத்தியும், சினிமா,பீச், பிகர் என்று சுற்றாமல் அன்று ஒரு நாள் ஆவது ஒட்டு போடுங்க ஒரு இளைஞனுக்கும் சரத்பாபுவின் வெற்றி ஒரு இளைஞரின் வெற்றி
நன்பர் குமரை நிலாவன் நேற்று மலேசியாவில் இருந்து போனில் சொன்னது...
அவரது நன்பர் ஒரு படித்த நன்பருக்கு இவரு போன் பண்ணி வோட்டு போட சொன்னால் அவரு கேட்டது " இவரு நம்மாளா ?

 சீ சாதி பேய் படித்த இளைஞனையும் ஆட்டி வைக்கிறது ...


வேணாம் மக்கா
 
நீயும் வரமாட்ட, வந்தவனையும் குறை சொல்லி நையாண்டி பண்ணுவ, அறிவாளி தனமா பேசுவ, படுத்துகிட்டு அரசியல்வாதிய திட்டுவ, பதிவும் போடுவ, மக்களிடம் ஆதங்கத்தை சொல்லுவ,ஆனா இளைஞனுக்கு வோட்டும் போட மாட்ட அவருக்கு உன்னால் உட்காந்து மெயில் அனுப்பும் உதவியும் செய்ய மாட்ட... நீ தான் இந்த நாட்டின் தேசதுரோகி
அவர் வாங்கும் ஒரு ஒரு வோட்டும் ஒவ்வொரு இளைஞனை பற்றிக்கொள்ளும் புரட்சி தீ... 

முதல் முதலாய் ஒரு வருமையின் விளிம்பில் இருந்து வந்த படித்த நல்ல இளைஞனுக்கு சாதிபாராமல், மதம் பாராமல், கட்சி பாராமல் ஒட்டை போடுங்க...
உன் ஒவ்வொரு வோட்டும் நீ இளைஞனுக்கு போடும் புரட்சி தீனி, புதியதொரு சமுதாயத்தை ஏற்படுத்துவோம்.
வெற்றி நிச்சியம்
 
இளையத்தமிழா வா !
புதியதோர் இளையதமிழக்த்தை மக்களுக்காக உருவாக்குவோம் ...
அரசியல் தலைவர்களுக்கு நாம் யார் என்று காட்டுவோம்
இளைஞனுக்கு வோட்டு போட்டு மக்கள் சக்தினா என்னவென்று காட்டுவோம்
சக்கரையின்  50 வது சிறப்பு பதிவாய் அடுத்த பதிவு சரத்பாபுவின்  சிறப்பு பேட்டி.உங்கள் மனதில் இருக்கும் கேள்விகளை sakkaraisuresh@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
சரத்பாபுவுக்கு வெற்றி நிச்சியம் - கலக்கல் அலசல்.SocialTwist Tell-a-Friend

Friday, April 17, 2009

நன்பர்களுக்கு பதில் பின்னூட்டம் வேண்டாம்



எனக்கு தோன்றிய ஒரு விஷியத்தை நம் சக பதிவர்களிட்ம் பகிர்ந்துக்கொண்டு கருத்துக்கேட்டேன்.. அபார ஆதரவு...

உங்களிடம் இதோ கேட்கிறேன்....உங்கள் கருத்தை சொல்லுங்கள் நன்பர்களே

" நான் பதிவு போட ஆரம்பிக்கும் முன்னாடி ... நான் படிக்கும் பதிவுகளுக்கு ஒரு கமெண்டை போட்டு அதற்க்கு பதில் வந்ததா என்று நிறைய நேரம் அந்த தளத்திற்க்கு சென்று பார்ப்பது உண்டு ..காரணம் ஒன்னும் பெருசா இல்லை.. நம்ம பதிலுக்கு அவரு என்ன சொல்லி இருக்காரு ... அவரு பிரபலம் இல்லை  என்றாலும் அவரை பெரிய எழுத்தாளாரக தான் நினைப்பதூண்டு .. ( அவரின் எழுத்து மேல் உள்ள் மரியாதை தான்)

இப்படி இருக்கும் போது தான் நான் பதிவு போட வந்தேன் ( வந்து என்னத கிழிச்சேனு அடுத்த விஷியம்) வந்து நான் எழுதிய முதல் பதிவில் பின்னூட்டம் இல்லாம ஈ ஒட்டுவ்வேனு நினைச்சா நிறைய நன்பர்கள் ஊக்கம் கொடுத்தாங்க ( இத்துனைக்கும் அன்றைய தேதிக்கு தமிழ்ஷ் தமிழ்மணம் ஆகிய திரட்டிகள் பற்றி தெரியாது ... காரணம் என் நன்பர்கள்  பதிவாளர்கள் இல்லை .. பிரபல பதிவர்களும் எனக்கு தெரியாது...) இனி வரும் புதியவர்களுக்கு உதவியாய்
"புதிய பதிவர்க்ளுக்கு" என்று ஒரு விரைவில் ஒரு பகுதி சக்கரையில் இருக்கும்.

அதனால் எனக்கு வரும் ஒரு ஒரு பின்னூட்டமும் நான் பதில்  சொல்வதுண்டு
அப்படி இருக்கும் போதே என் பதிவுல நன்பன் கிஷோர் ஒரு நாள் என்ன மச்சான் நான் போட்ட பின்னூட்டத்துக்கு பதில் சொல்றதே இல்லைனு சொல்லி புட்டான் ....பாச காற புள்ள நான் பதில் சொல்லாடி நெஞ்சு வெடிச்சுடும்.
அப்புற்ம் அவனுக்கு போன் போட்டு டேய் டுபுக்கு !@#!@#!@%#$ ( இப்படி திட்டினா தான் அவனுக்கு ஒரு சந்தோசம்)  நான் அப்போவே பதில் சொல்லிருக்கேனு சொல்லி அதை மெயில் பண்ணி (Date and Time) யோட காண்பித்த்வுடன் தான் அவனுக்கு ஒரு சந்தோசம்... ஹ்ம்ம் இவனாவது கேட்டான்... எத்துனை பேரு கேட்காம இருக்காங்கலே...

அதனால சக்கரைக்கு வரும் பின்னூட்டத்துக்கு கண்டிப்பா அப்போ இல்லாடி (அப்பாலவாது )கூட அப்புற்மாவது நான் பதில் சொல்ல்வது உண்டு ... அட்லிஸ்ட் வருகைக்கு நன்றி என்று...

(சரி மொக்கை போதும்.... மெட்டருக்கு வா)

அன்னாத்தை கதை சொல்லுறாறு
விஜயகாந்து பாணில சொல்லனும்னா 
இது வரை சக்கரைக்கு வந்த மொத்த பின்னூட்டம் - 2130
இதில் நான் பதில் சொன்ன பின்னூட்டங்கள் -  913
ஆக மிதி நம்  மக்களின் பின்னூட்டங்கள் -  1217

யோசிச்சு பாருங்க தலைவா ... அதுவும் எனக்கு தெரிந்த நம் பதிவுலக நன்பர்களின் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லும் நேரத்திற்க்கு நான் புது பதிவுகளை ( சக நன்பர்களாகிய உங்களின் பதிவுகள் தான்) மற்றும் புதிய பதியவர்களின் பதிவு படித்து பின்னூட்டம் செயதால் நல்லது  தானே

அப்போ பதில் சொல்லவே மாட்டிங்களா... ( எடக்கு முடக்கு பசங்க சங்கம்)

கண்டிப்பா கேள்வி கேட்டு அல்லது ஒரு கருத்துக்கேட்டு வரும் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லுவேன் .. சக நன்பர்கள் இல்லாமல் புதியதாய் படிக்கும் நன்பர்களுக்கு ஒரு பதிலும் வருகைக்கு நன்றியும் சொல்லுவேன்....

தெரிந்த என் சக பதிவுலக நன்பர்களுக்கு நன்றி சொல்லி நட்பை கொச்சப்படுத்த விரும்பவில்லை .... ( இப்படி சொல்லி எஸ்கேப்பா :-) )

நானும் தினம் அலசும் என் சக பதிவுல நன்பர்களின் பதிவுக்கு பின்னூட்டம் செய்து பதில் எதிர்பார்க்க போவதில்லை.... ( உனக்கு இனி எவன் டா பதில் சொல்லுவான் ஹ அஹா ) காரணம் எனக்கு பதில் சொல்லும் நேரத்திற்க்கு நிங்க மற்ற பதிவர்களின் பதிவுகளை படிக்கலாம்.. ( அட்வைஸ் அறுமுகம் சொல்லிட்டாரு எல்லாரும் கேட்டுவிட்டு தான் மறு வேளை )


உங்களின் கருத்துகள் மற்றும் பின்னூட்டம் மிக அவசியம் அது தான் அடுத்த பதிவு எழுதுவதற்க்கு ஒரு உந்துகோல்.. ( ஏன் கமெண்ட் போடமா போய்டுவோம்னு பயமா ?இல்லை தெரிச்சு போச்சா ) .
நன்பர்கள் இனி பதில் பின்னூட்டம் (ஒரு சில பின்னூட்டங்களை தவிர்த்து ) எதிர்ப்பார்த்து சேர்வு அடையவேண்டாம்... ( நன்பர்களுக்கு இல்லையா  அப்போ இனி நாங்க எல்லாம் எதிரி இப்போ பதில் பின்னூட்டம் போட்டு தானே ஆகனும் ஹ ஹா )

உங்கள் பதிவுகளில் என் பின்னூட்டம் இருக்கும் ... (அப்படி மட்டும் இல்லாடி உன் கடை காத்து வாங்கும் )

உங்க கருத்தை சொல்லுங்க .... (கருத்து கேட்டுட்டா சொல்லிடுவோமா நாங்க எங்க அப்பா அம்மா சொல்லியே கேட்க மாட்டோம்) அட பின்னூட்டத்தில் தான் சொல்லுங்க .. ( பின்ன உன் பின் மண்டையிலா சொல்லுவாங்க)

நிங்களும் இதனை பின்பற்ற நினைத்தால் ( பெரிய காந்தி பின்பற்று வாங்க... உன்னை எல்லாம் பிளாக்கில பாலே பன்னுற்தே தப்பு)  இந்த பதிவுக்கு லிங்க் கொடுத்துடுங்க உங்க நன்பர்களும் புரிந்துக்கொள்வார்கள்...

50 பதிவு போடுறதுகுள்ள ஒரு 100 Followers வரும்னு பார்த்த .. ஹ்ம்ம் கஷ்டம் தான் போல .. பார்த்து பாலோ பண்ணுக பாஸ் :-)

 பாலோ பண்ணல கண்ணை குத்தி புடுவேன்
 
உன்னை பாலோ  பண்ணா இது தான் கதி .. 


குறிப்பு - இந்த பதிவு ஒரு கருத்து கேட்க்கும் பதிவு....
நம்மை நாம் நன்றாக புரிந்துக்கொள்ள இது உதவும் ...
நான் பதில் பின்னூட்டம் போடாவிட்டால் என்னடா இவன் மாறிட்டானு நிங்க நினைச்சிடக்கூடாது ..அதற்க்கு தான் இந்த பதிவு
உங்கள் புரிதலுக்கு நன்றி மக்கா :-)
நன்பர்களுக்கு பதில் பின்னூட்டம் வேண்டாம்SocialTwist Tell-a-Friend

அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு விவரம் நிங்களே பார்த்துகோங்க

அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு விவரம் நிங்களே பார்த்துகோங்க மக்களே
ஒரு மஞ்ச பையோட சென்னைக்கு வந்த சாதரண அரசியல்வாதியின் சொத்து மதிப்பு இன்னைக்கு தேதிக்கு 265,772,885 அப்பா சாமி ..

இது (265,772,885 ) போய் கணக்குனு சின்ன குழந்தைக்குகூட தெரியும் ... ஆனா இதுவே கண்னை கட்டுதே .. உன்மையான சொத்து மதிப்பு சொன்னா நாடு தாங்காது.

இன்னும் நிறையா இருக்கு... இது சும்மா சாம்பில் .. இந்த கணக்கு 2006 கணக்கு 2011ல் எத்துனை கோடிகளோ.இது எல்லாம் ஏழை மக்களின் (ரத்தம்) பண்ம்.
எந்த பிஸினஸ்ல இப்படி பல கோடிகள் பார்க்க முடியும்... நம்ம அரசியல தான் ஹா ஹா.
இது சாத்தியமா? இன்கம் டேக்ஸ், போலிஸ்,கஸ்டம்ஸ், கோர்ட் எல்லாம் சும்மா நடுதர. எழை மக்களை பயமுற்த்த தான் லாய்க்கு...
கண் முண்ணாடி கைவர்களை வச்சிகிட்டு கொல்லபுறம் தேடுறாங்கயா ..

கடைசியில் ஒருபாய் காசு கூட வராது இது எல்லாம் மக்கள் பணம் இவங்க ( எல்லா கட்சியும் தான்) என்ன அம்பானியா பிசினஸ் பண்ணி சம்பாதிக்க ...
எல்லா அரசியல் தலைவர்கள் முதல் தொண்டர்கள் (கடைக்கோடி தொண்டன் விதி விலக்கு) வரை இதே நிலைமை தான்.




Sl. No.Candidate Name StateConstituency GenderTotal AssetPan
1Karunanidhi M. Tamil NaduChepauk M265,772,885Y
Average Asset265,772,885
நமக்கு எல்லாம் காமராசர் மாதிரி ஒரு தலைவர் வேணும் . எப்படி ? அம்மாவுக்கு மின்விசிறி போர்வை வேணுமானா. ரெண்டும் எதுக்கு ஒரே நேரத்துல ஒன்னு தான் வாங்கி தர முடியும் என்று சொல்ற மாதிரி ஒரு தலைவர் உன்னத தலைவர். தன்னநலமே இல்லாம உழைக்கும் தலைவர்.

தென் சென்னை சரத்பாபுவுக்கு வோட்ட போடுங்க மக்கா

நிங்களே கிழே உள்ள லிங்கை கிளிக்கி சொத்து மதிப்பை பார்த்துகோங்க
அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு விவரம் நிங்களே பார்த்துகோங்கSocialTwist Tell-a-Friend

Thursday, April 16, 2009

எம்.பி கேண்டிடேட் சரத்பாபு சக்கரைக்கு அனுப்பின மின்னஞ்சல் - வாசகர்களுக்கு நன்றி

அன்புள்ள 
சக்கரையின் வாசகர்களே இதோ தென் சென்னையின் எம்.பி கேண்டிடேட் சரத்பாபு சக்கரைக்கு அனுப்பின மின்னஞ்சல்.
இந்த மின்னஞ்சலை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளும் நோக்கம்...
இந்த கருத்து இன்னும் நிறைய மக்களை சென்று அடையும் என்ற நம்பிக்கையில்
இந்த மின்னஞ்சலில் அவர் சொன்ன பாரட்டுகள் அனைத்தும் நம் சக்கரையின் வாசகர்கள் உங்களையே சேரும்...
Forward this to all your friends, Make sure it reaches ate last some south Chennai people.
சரத்பாபு வெற்றி தமிழக இளைஞர்களின் வெற்றி

From: sarath babu
Date: Thu, Apr 16, 2009 at 2:58 PM
Subject: Vision 2025: A Hunger Free India
To: suresh.sci@gmail.com
Hi Suresh,
Hope this mail finds you in good spirits.
Thanks a lot for the encouragement and interest shown by you in this campaign. It is a pleasure and a confidence booster to get support from motivated people like you. 
And thanks again for the link to the website...it is a people's movement, more people visit the better it is.
This is how you can contribute to this movement for change:
1. Take out time and SUPPORT us actively in our door-to-door and other public campaigns. Please send in your phone no. and area of residence so that we can inform you as and when we go campaigning there.
2. Contribute creatively in the form of written message, short video messages, blogs, emailers or other forms of communication. You can send it to this email id: sarathbabu.southchennai@gmail.com or you can leave a comment on our website www.sarathbabu.co.in.
3. Volunteer for our banner campaign that we are doing on Saturday, April 18, 2009. Come along with your friends and family to show your commitment towards bringing in the change. Details regarding this will be available on our website soon.
4. There are attached two documents which are self explanatory. Please fill in contacts details of your friends, neighbours and other contacts across South Chennai. It would help me communicate with the citizens directly. Together, we can bring a change in the politics and governance of our country and encourage more educated youngsters to get into politics.
5. And keep spreading the word around that South Chennai is going to change soon!
Let us show the light to the whole country.
To know more about me please check the following links:
Links of articles published after my announcement of contesting in the elections:
Here is my brief profile that you can forward to your friends and contacts.
"I am Sarathbabu, a proud resident of Chennai.
Coming from the slums of Chennai, I went to the best management institute in India, IIM Ahmedabad.
Supporting 250+ families, my mother's upbringing and values gave me the honour of sharing the stage with our revered Dr. APJ Abdul Kalam
I succeeded in my small way, and I want you to overcome barriers like I did.
 
Developed Indians is what we need for a Developed India.
We need to bring the change we need ourselves. So I am taking the initiative to bring the change by standing for the forthcoming Lok Sabha elections. I wish to make our South Chennai the model constituency of India.
Please SUPPORT me. To know more about me, please log on to www.sarathbabu.co.in 
LETS CHANGE NOW
I have risen from the bottom. If I can, so can you. I will ensure that happens.
- E. Sarathbabu
With Best Regards,
E. Sarathbabu
Founder & CEO, FOODKING

Alumni IIM Ahmedabad & BITS, Pilani
Honorary Rotarian Dist. 3201
Pepsi MTV Youth Icon 2008

LETS CHANGE NOW
Keep visiting our website www.sarathbabu.co.in to track this movement.
SOUTH CHENNAI CONSTITUENCY 
Assembly constituencies in South Chennai Lok Sabha Constituency

S. No.
Assembly Constituency No.
Constituency Name
1
22
Virugambakkam
2
23
Saidapet
3
24
Thiyagarayanagar
4
25
Mylapore
5
26
Velachery
6
27
Sholinganallur

1.      VIRUGAMPAKKAM (22):
Ward No.
Ward Name
065
Virugambakkam (North)
128
Virugambakkam (South)
129
Saligramam
130
Kodambakkam (North)
131 
Kodambakkam (South)
2.      SAIDAPET (23)
Ward No.
Ward Name
132
Saidapet (West)
133
Kumaran Nagar (North)
134
Kumaran Nagar (South)
135
Saidapet (East)
136
Kalaignar Karunanidhi Nagar
138
G.D. Naidu Nagar (East)
139
G.D. Naidu Nagar (South)
140
Guindy (South)
141
Guindy (East)
3.      VELACHERY (26):
Ward No.
Ward Name
151
Adyar (West)
152
Adyar (East)
153
Velacherry
154
Thriuvanmiyur (West)
155
Thiruvanmiyur (East)

4. THIYAGARAYANAGAR (24):
Ward No.
Ward Name
117
Vadapalani (West)
120
Navalar Nedunchezian Nagar (East)
121
Navalar Nedunchezian Nagar (West)
122
Ashok Nagar
123
M.G.R.Nagar
124
Kamaraj Nagar (North)
125
Kamaraj Nagar (South)
126
Thiyagaraya Nagar
127
Rajaji Nagar
137
V.O.C.Nagar
5. MYLAPORE (25):
Ward No.
Ward Name
94
Bharathidasan Nagar
96
Vivekanandapuram
115
Alwarpet (North)
116
Alwarpet (South)
142
Bhemmannapet
143
Thiruvalluvar Nagar
144
Madhavaperumal Puram
145
Karaneeswarapuram
146
Santhome
147
Mylapore
148
Avvai Nagar (North)
149
Raja Annamalaipuram
150
Avvai Nagar (South)

6.      SHOZHINGANALLUR (27):
Tambaram Taluk (Part):
1.
Nanmangalam
2.
Kovilambakkam
3.
Medavakkam
4.
Karapakkam
5.
Perumbakkam
6.
Vengavasal
7.
Chittalapakkam
8.
Ottiambakkam
9.
Arasankalani
10.
Semmanjeri
11.
Uthandi villages

Town Panchayats (TP) and Cantonments (CT):
1.
Puzhithivakkam (Ullagaram) (TP)
2.
Perungudi (TP)
3.
Kottivakkam(CT)
4.
Palavakkam (CT)
5.
Neelankarai (CT)
6.
Injambakkam (CT)
7.
Okkiyamthuraipakkam (CT)
8.
Pallikaranai (CT)
9.
Madipakkam (CT)
10.
Jalladianpettai (CT)
11.
Shozhinganallur (CT)
சரத்பாபு வெற்றி தமிழக இளைஞர்களின் வெற்றி
எம்.பி கேண்டிடேட் சரத்பாபு சக்கரைக்கு அனுப்பின மின்னஞ்சல் - வாசகர்களுக்கு நன்றிSocialTwist Tell-a-Friend

கணக்குவழக்கு

 

Copyright 2008 All Rights Reserved