Showing newest 14 of 23 posts from May 2009. Show older posts
Showing newest 14 of 23 posts from May 2009. Show older posts

Saturday, May 30, 2009

யாருடா நீ ? ( பெரிய இவனா கொங்யால )

யாருடா நீ ?
( பெரிய இவனா கொங்யால )




போஸ பாரு பெரிய டுப்புக்கா நீ
( எழுதுறதை பொறுத்துகறது பத்தாதுனு இந்த கொடுமை வேறயா)
இந்த பதிவுலகத்தை அந்த சாமி தான் காப்பாத்தனும்


எப்பாசாமி யாராச்சும் கூப்பிடுவாங்க என்று நினைத்த நேரம்.

நண்பர்களுக்கு இந்த சங்கிலி வந்த நேரம்.

நண்பர்கள் நியாமான மனிதர்களை தொடர்க்கு அழைத்தார்கள்.
சரி இனி வராது என்று நினைத்த நேரம் :-)

ஒருவர் மேல் ஒருவராய் மூன்று முத்துகள் கூப்பிட்டாங்க.. அவங்களுக்கு ரொம்ப பெரிய நன்றி ;) ( உன் நன்றி எவனுக்கு வேணும், டீரிட் கொடு )

ஹம் நான் பரிட்ச்சை கேள்விக்கு தான் பதில் சொல்ல மாட்டேன் ஆனா இந்த கேள்வி பதில் எப்ப வரும்னு நினைத்து இருந்தேன் ...

இதோ வந்துட்டேன்..


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் பெயர் ஜி.சுரேஷ் குமார், பொதுவா எல்லாரும் என்னை சுரேஷ்னு தான் கூப்பிடுவாங்க, எங்க கல்லுரி வகுப்பில் இன்னொரு சுரேஷ் இருந்தான், இருந்தாலும் கல்லுரில் எவன் வந்து சுரேஷ் உங்கள HOD கூப்பிடுறாங்க இல்லைனா வாத்தியார் கூப்பிடுறாங்கனு சொன்னாலே நான் தான் போவேன் காரணம் எங்க பிரச்சனை என்றாலும் நம்மல தான் கூப்பிடுவாங்க ( நான் அப்படி ஒரு நல்லவன்)

எனக்கு 5 மாத குழந்தை இருக்கு ( அப்போ கல்யானம் ஆயிடுச்சானு கேட்காதிங்க நம்ம இந்தியாவில் இருக்கோம் ஆகிடுச்சு)

முதலில் என் குழந்தையின் பெயரில் தான் பிளாக் அரம்பித்தேன்.

மனைவி தான் நீங்க கேவலமாய் எழுதி நம்ம பெண் பெயரை கெடுத்துவிடாதிங்க என்று சொன்னாங்க ..

அதுனால நான் 2006யில் அரம்பித்த லவ் லைப் என்ற ஆங்கில பிளாக்கை தமிழில் தொடர்ந்தேன் இரு மாதங்களுக்கு முன்பு..
நல்ல வரவேற்ப்பு முதல் தமிழ் பதிவே தமிழ்ஷில் 50 வோட்டுகள்.
இப்போ அது 60 வோட்டு

அப்புறமா ஒரு தமிழ் பெயர் வைக்கலாம் என்று முடிவு எடுத்தேன் , சரி அது டொமேயினிலும் காலியா இருக்கனும், பிளாகிலும் காலியா இருக்கனும் என்று தேடினேன். ஆமா கடை நல்லா போனா டொமேயின் ஆரம்பிக்காலம் என்று பிளாக் ஆரம்பிக்கும் போதே பிளான் இருந்தது..

நகைச்சுவையா ஜாலியா எழுதுவது தான் என் பிளான் முன்னாடி இருந்தது.
பல தமிழ் பெயர்கள் தேடி சக்கரை தான் இனிப்பா, நல்லாவும் இருந்தது, ஜாலி, சந்தோசம் என எல்லாம் இந்த பெயரில் இருக்கு.

சக்கரை வியாதி மக்களுக்கு கூட சக்கரை பிடிக்கும் ;).
குழ்ந்தைக்கும் அது ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்படி எல்லாருக்கும் பிடிக்கும் சக்கரையா இருக்கனும் என்று அரம்பித்தேன்.
டோமேயின் காலியா இருந்தது, சரி நல்லா போனால் டொமேயின் ரெஜிஸ்டர் பண்ணிகலாம் என்று இருந்தேன்...

ஹம் ஒரு மாதம் கழித்து டோமெயின் மட்டும் பண்ணிட்டேன்.... யாரும் அதை வாங்க கூடாது என்று..

ஆனா என் பிளாக் ஐடி www.sureshstories.blogspot.com என்று தான் முன்னர் இருந்தது.. அதில் சக்கரையாகபெயரை மட்டும் வைத்து தொடர்ந்து... எழுதினேன் www.sakkarai.blogspot.com பதிந்து வைத்து இருந்தேன்.. அப்புறம் சக்கரை நல்லா கடை போனியாக, ஹம் தனியா ஆரம்பிச்சாச்சு.
www.sakkarai.com


2.கடைசியாக அழுதது எப்பொழுது?


நான் போதுவா காசு, பணம் , வேளை இது எல்லாம் போனா அழமாட்டேன்.
ஆனா கிரிகெட் வி்ளையாட விடவில்லை என்று எல்லாம் சப்ப காரணத்துக்கு எல்லாம் சிறு வயதில்லை அழுது இருக்கேன்..

மனிதர்களின் அன்புக்கும் நெகிழ்வான சம்பவத்துக்கும் அழுவேன்..
கடைசியா அழுதது ..
ஹம் டிசம்பர் 27 2008 என்னையும் அறியாமல் என் மனைவி பிரசவம், நான் நகைச்சுவையா நண்பர்களிடம் ஜாலியா பேசிக்கொண்டு இருந்தேன் அப்போ ஒரு அம்மா ஏன் தம்பி முன்னாடி பின்னாடி நடக்காம இருக்கிங்க ...

நான்
சொன்னேன் நீங்க நிறையா சினிமா பாக்குறிங்க போல

கிற்ஸ்மஸ் லீவ் என்றதால்
எனது 20 நண்பர்கள் வந்து விட்டார்கள் ...

எல்லாரையும் சிரிக்க வைத்து ஓட்டி கொண்டு தான் இருந்தேன்..
இருந்தாலும் அந்த 10.27 காலை ஹம் என் குழந்தையின் முதல் அழுவை சத்தம் கண்களை நணைத்தது, மனைவியும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும் என்று என் நண்பர் பிள்ளையாரிடம் செல்லமாக சொன்னேன்.
அப்ரேஷன் தியேட்டர் முன்னாடி என்னிடம் தான் முதன் முதலில் சொல்ல வேண்டும் என்று நின்று கொண்டு இருந்தேன் ( அங்க நிக்க நான் வாங்கின திட்டு ஹம் ;)

என்ன செய்ய வாத்தியாரிடம் கூட வாங்கினது இல்லை)

தம்பி, பாப்பா பொறந்து இருக்குனு என்று சொன்ன அந்த நொடி ;) ஆகாயத்தில் பறந்தேன்.
என்னையும் அறியாமல் கண்களில் நீர். என் தாயின் வலியும் தந்தையின் சந்தோசமும் எப்படி இருக்கும் என்று என்னால் உணர முடிந்த தருணம்

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

நல்லா பெருசா இருக்கும் அப்போ தானே பின்னால உள்ளவன் பார்த்து எழுத முடியும்னு எழுத ஆரம்பித்து யானை கிறுக்கல் மாதிரி இருக்கும் .
( கோழி கிறுக்கும் போது யானை கிறுக்க கூடாதா)

என்னை நம்பி தான் என் எக்ஸாம் ஹால்
அவ்வளவு படிப்பனானு கேட்க கூடாது, நான் பிட் அடிச்சு தான் எல்லாரும் ஒரு ஒருத்தனா பேப்பர் வாங்கி பார்த்தும் ஒரு ஹாலே என்னை நம்பி தான்
பின்னாடி நானே திருந்தினாலும், இவங்க எல்லாம் நாங்க பாஸ் ஆகுறது உன் கையில்னு சொன்னால நாயகன் மாதிரி செய்ய வேண்டியதாய் போச்சு
நாலு பேரு நல்லா இருந்தா சரி தான்.

****
( ஒரு நாள் திருந்திட்டு பிட் எதும் எடுத்துட்டு போகல பின்னாடி இருந்து நண்பன்
மச்சான் காமிடா
இல்லைடா எதும் எடுத்துட்டு வரல
தெரியும் டா நான் வச்சி இருக்கிற 4 கேள்வி வந்து இருக்கு.
சரி டா நீ அடி,
இல்ல மச்சான் நீ திருந்திட்டனு தெரிந்து தான் நான் எடுத்துட்டு வந்தேன் , கொஞ்சம் அடிச்சு கொடு எனக்கு தெரியாது ...
முடியாது டா
டேய் என் நண்பன் டா நீ, என்னை உன்னை நம்பி நான், என்னை நம்பி தான் என் பின்னால இப்படி ஹாலில் இருக்கும் 20 பேரும் உன்னை நம்பி தான் மச்சான்..
சரி உங்களுக்காக என்று விட்டு கொடுத்தது தான் என்ன செய்ய அதுனால கைஎழுத்தும் அப்படி தான் நண்பர்களுக்காக)
****

இப்போ அவ்வளவா எழுதுறது இல்லை எல்லாம் கணினியில் தான்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

சாம்பார் ரொம்ப பிடிக்கும், சரியான சாம்பார் ;) என்று எல்லாம் நக்கல் வேணாம்.
முருங்க்காய் சாம்பார்.
சிக்கன் பிரியானி
தீபாவளி அன்று செய்யும் கறி குழம்பும் இட்லியும்
தினமும் தோசை மதியம் சாம்பார் சாதம் இருந்தா போதும். ஆனா தொட்டுக்க இரண்டு காய்கறிகள் வேண்டும்


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?


சொன்னா நம்ம மாட்டிங்க இது வரை நான் சந்தித்த மனிதர்கள் மட்டும் பல்லாயிரங்கள் ..
சும்மா பஸில் போய் இறங்கும் போது ஒரு நால்பத்து நண்பர்களுடன் தான்
இறங்குவேன்.
நான் பஸ், ரயில் பயணம் செய்ய போனா எனக்கு தெரிந்த ஒரு 3-5 பேரு இருப்பாங்க.. எங்க போனாலும் நண்பர்கள் அயல் நாட்டுக்கு சென்ற போது கூட
டீ கடை பையனில் இருந்து பிஸ்னஸ் மேன் வரை நண்பர்கள் இருக்காங்க..
நிறையா குழந்தைகள் தான் நண்பர்கள் .
நம்ம போன் புக்கில் ஒரு 2000 பேரு நம்பர் இருக்கு, மெயிலில் ஒரு 3000+
என்ன தினமும் எல்லாம் பேசும் நண்பர்கள் கல்லூரி 5 நண்பர்கள்..

இந்த நட்பில் இருந்து லாபம் என்ன, அவர்களிடம் இருக்கும் ஒரு பாஸிடிவ் விஷியத்தை நான் கற்றுக்கொள்வேன், என்னால் முடிந்த ஒரு நல்ல விஷியத்தை யாவது அவர்களிடம் அட்லிஸ்ட் ஒரு சிரிப்பு கொடுத்துவிட்டு வருவேன். இப்படி இன்று நல்லா இருக்கும் நண்பர்கள் பலர். சமிபகாலமாக பதிவுலகமும் சேர்ந்து விட்டது இந்த வட்டத்தில்.

ஒரு ஆப் கேம்பஸ் போனால் அங்கு அவன் அவன் டென்ஷனா இருப்பான்.
இப்படி இருக்கும் போது ஒரு 300 பேரு நம்ம சுத்தி குருப்பா சிரித்துகிட்டு இருப்பாங்க. எல்லாம் அடுத்த ஆப் கேம்பஸில் பார்த்து மறுபடி ... இப்படி தான் ஒரு பெரிய வட்டம் இருக்கும்.

கல்லூரியில் 3 வருடங்கள் ரெப், நாலாம் வருடம் காலேஜ் செக்ரடரி.
( எலக்ஷன் வச்சி தான் கள்ள் வோட்டு இல்லாம தனித்து பல விஷியங்க செய்து இருக்கோம்)

தமிழ் மீடியம் மாணவர்கள் ரொம்ப பிடித்தவர்கள், அவர்களின் தன்நம்பிக்கையை அதிக படுத்தி இங்கிலிஷ் மீடியம் என்றால் ஒன்னும் இல்லை, எவனும் நமக்கு பெரியவன் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை, எல்லாரும் சமம் என்று நம்பிக்கையுடியது தான் என் பங்களிப்பு

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?


பொதுவா குளிக்கவே பிடிக்காது ;) ஹா ஹா அதுவும் லிவ் நாட்களில் என்ன செய்ய மத்தவங்க நல்லா இருக்கனும் என்று குளிப்பது உண்டு.

கடலில் குளித்து இருக்கேன் திரிவேனி சங்கமம் என்று இராமேஸ்வரத்தில் ஒரு இடத்தில் நண்பர்களுடன் குளித்து முடித்த பின்பு தான் சொன்னான் நண்பன் அங்கு இதுவரை பல பேரு அவுட் ஆகி இருக்காங்க நம்ம நேரம் நல்லா இருக்குனு.

அட பாவி முடிந்தவுடன் சொல்லுறியே நீ தாண்டா நண்பன்.

போட்டோ இராமேஸ்வர கடலில் எடுத்தது ( பெரிய சிம்புனு சொல்லி என்னை அசிங்க படுத்திடாதிங்க அதுக்கு வேற கெட்ட வார்த்தையில் கூட திட்டுங்க)

அருவியில் ஒரே முறை தான் குளித்து இருக்கேன்.. ( ஒரே முறை தான் குளித்து இருக்கேனு சொன்னது அருவியில் )

அதுல நம்ம குளிக்கறது விட ஹீரோயின் குளிச்சா தான் நல்லா இருக்கும்.

ஆறு குளியல் சுகம் ;
நண்பர்களுடன் நீச்சல் தெரியாமா முழங்கால் தண்ணியில் ஹீ ஹீ முச்சு ஆதாங்க தம் கட்டி விளையாட்டு செய்தது..
முழ்கி எழுந்தா எவனாச்சும் தண்ணியை சூடு பண்ணி இருப்பான் அவனை போட்டு உதைச்சு காலி பண்ணுறது..
இப்படி இதுவும் நல்லா தான் இருக்கும்

தீபாவளி அன்று தலையில் எண்ணை வைத்து, கண்ணில் சீயாகாய் பட அன்று மட்டும் நல்லாய் தேய்த்து குளித்த, அம்மாவின் அன்பு மிகு குளிப்பாட்டலும் சுகம் தான்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?


கண்னை பர்த்து தான் பேசுவேன்... பார்க்கும் போது அழகிய சிரிப்பு இருக்கானு பார்ப்பேன்.. இல்லாடி நான் சிரிப்பை கொடுத்து அது திரும்ப வரும்போது பார்ப்பேன்
நமக்கு சைக்காலஜி நல்லா தெரியும் , ஒருவரை பார்த்தவுடன் ஒருஅளவு மிக சரியாக எடை போட்டு அழகாய் அவர்களுடன் பேசுவேன்.
நல்ல வேளை சைட் அடிக்கும் எதை கவனிப்பீர்கள் என்று கேட்கவில்லை ;)

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?


பிடித்தது - ரொம்ப பேசுவேன், ஆட்டிடுயுட், காண்பிடனஸ், என் சிரிப்பு
பிடிக்காதது - ரொம்ப பேசுவேன்
( மனைவி என்ன சொன்னாலும் கேட்டு மாத்திகிறாங்க என்னை நான் மாத்திக்கிட்டு அவங்களோட ரொம்ப நேரம் செலவு பண்ணனும் இந்த கணினியை கட்டிக்கிட்டு அழுவுறத நிறுத்தனும்)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

என் சரி பாதி எனக்கு கிடைத்த தவம், ஹம் ரொம்ப குழந்தை தணம், நல்ல குணம், நல்ல சமையல், நல்ல கெரக்டர், கோபம் வந்தால் ஒரு நிமிடம் கூட நிக்காது சிரிச்சுடுவாங்க... ரொம்ப நல்லவங்க ..
அவங்களுக்கு வெளி உலகம் எல்லாம் கிடையாது அவங்க அப்பா தான் உலகம், கல்யானம் ஆனாவுடன் நான், இப்போ குழந்தை..
எதை சொன்னாலும் மாதிக்குவாங்க ஒரு தடவை இப்படி செய்யாதா என்ற் அன்பாய் சொன்னால் மறு முறை அப்படி நடக்கவே நடக்காது.. புதுசா ஏதாச்சும் பண்ணுவாங்க அதையும் சொன்னா மாத்திடுவாங்க
ஒரு காலத்தில் ரொம்ப சேட்டை செய்த இந்த பயலுக்கு அவங்க லட்சம் தடவை மேலானவங்க

பிடிக்காது - சத்தியமா சொல்லுறேன் எதும் இல்லை, இது சாத்தியமா ?
100% சாத்தியம் பிடிக்காது என்று எதும் இல்லை, அவங்க எல்லாத்தையும் பிடிக்கலைனு சொன்னா உடனே மாத்திடுவாங்க .. சமையல் முதற்க்கொண்டு எல்லாம் எனக்கும் பிடிக்கவேண்டும் என்று மட்டும் யோசிப்பாங்க அது தான் பிடிக்காதும் கூட


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

கடவுள் புண்ணியத்துல தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, தம்பி, மற்றும் மனைவி , பாப்பா எல்லாரும் நம்ம பக்கத்துல தான் இருக்காங்க.
கைப்பேசியும் கணினியும் இருப்பதுனால் நண்பர்களும் கூடவே இருக்காங்க

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

//கண்ராவி எவண்டா இந்த கேள்விய வச்சான் .. முதல் தூக்கனும் பீரியா ஒரு பதிவு எழுத முடியவில்லை ;)//

நீல நிற டீ சர்ட் , திக் நீலம் ஜீன்ஸ்...
இந்த ஒரு கேள்விக்கு பயந்தே நேற்று நைட் இந்த பதிவை எழுதவில்லை.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என் அழகிய மகளின் மழலை மொழி சிரிப்பும் பாட்டும்

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?


நமக்கு ஆகாய நீலம், கடல் நீலம் ரொம்ப பிடிக்கும் ;)

14.பிடித்த மணம்?

குழந்தையின் மணம், மழை பெய்த பின்னும் முன்னும் வரும் மண்வாசனை, புத்தங்கள் ;) படிக்காம ரொம்ப நாள் வைத்து இருந்து மோந்து பாருங்க சூப்பர் வாசனை வரும்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

எனக்கு மிகவும் பிடித்த பதிவர்கள் ரொம்ப பேரு ஏற்கனவே தொடர் பதிவுக்கு அழைக்கப்பட்டு அவர்களும் எழுதியாச்சு, அவர்கள் விட்ட நல்ல பதிவர்களை அழைக்கிறேன்

அ) அவிங்க
அவிங்க ராசா - இவரோட ரெண்டாவது பதிவை (இந்தி படிக்காதது தப்புங்களாயா) படித்தவுடனே முடிவு செய்தாச்சு இந்த ஆளு பெரிய ஆளாய் பதிவுலகில் வருவாருனு, இதோ பிரபலங்களுடன் இணைந்து பயணமே செய்துவிட்டார் படகில், ரொம்ப நக்கல், காமெடி, கதைனு இவருக்குனு ஒரு பாணி... பிளடி இண்டியன்ஸ் என்ற கதையை பார்த்து ரொம்ப நெகிழ்ந்துட்டேன்.
ஆனா தில்லா எனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத ஐந்து பதிவர்கள் என்று பதிவு போட்டாரு, அதுல என் பெயரும் இருக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பர்ர்கவில்லை, ஏனா அப்போ இவர் எனக்கு அவ்வளவு பரிட்சியம் கூட இல்லை, பின்னூட்டமும் போட்டதில்லை.

ஆ)KRICONS
நண்பர் புருஷோத்தமன் சிலகாலமாக பட்டாசா எழுதுறாரு. வலைபதிவாளர்களுக்கு உதவும் பதிவுகள் என்று போட்ட ஜந்து முத்தான பதிவுகள் அவரது சிறப்பு.


இ) ROSE

ரோஸ் இவங்க பதிவு எல்லாம்.. கவிதைகள் அவங்க பெயர் மாதிரியே
  1. கோபம் ஏன் தோழியே
  2. கனவு
  3. தொடரும்
ஈ) சாளரம் - கார்க்கி

சமீப காலமா தான் நான் பதிவுலகில் இருக்கேன் ஒரு 2 மாசம் தான் ஆச்சு நான் வந்து, இவரோட நக்கல் நகையாண்டி பார்த்து இப்படியும் பதிவு அதாங்க
நம்ம பேசுற மாதிரி எழுதலாம் என்று தெரிந்து கொண்டேன்...
இவரு ஒரு பதிவுல்க மன்மதன் ;)

உ) TVS-50

எல்லா பதிவும் ரொம்ப உபயோகமான பதிவு தெரியாதை சொல்லும் இவரின் டெக்னிகல் பதிவுகள் சிறப்பு, நான் தொடர்ந்து படிப்பது இவர் பதிவை, இமெயிலில் வந்துடும் இவரது பதிவு. இதில் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் அதில் ஒன்னு இது


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

என்னை தொடர் பதிவுக்கு முறையே அழைத்த முன்று நல்லவர்கள் :-)
சும்மா சூப்பரா ஜாலியா காலேஜ் யூத்க்கு எழுதுற மாதிரி எழுதுவாரு, அவரது சமீபத்திய கதை மிக அருமையான ஒன்னு, இவர் இப்படியும் எழுதுவாரா
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
நல்ல எழுத்தளர் :-) என் பெயர் வேற எப்படி பிடிக்காம போகும்
அவரின் பதிவுகளில் சில பிடித்த பதிவுகள்
அன்பின் வடிவாய் ஆட்டோ ஓட்டிகள்..! மற்றும்

நல்ல நக்கல் நகைச்சுவைனு சும்மா சாரதி தேரு எடுதாருனா பட்டாசு தான். மிகவும் ரசித்தது
17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட் கிறுக்கன். ( கிறுக்கனு தெரியும் ;) சொல்லுறிங்களா )
அதுக்காக அரியர் வைத்து பல கிரிக்கெட் போட்டிகள் விளையாடி உள்ளேன்
( போட்டினா அகில லவல் மேட்ச் இல்லை, நம்ம சென்னை 28 மாதிரி பல உள்ளூர் மேட்சஸ்)

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை
காரணம் தூரத்துல அழகு இருந்தாலும் அதை ரசிப்பதனால் கூட இருக்கலாம்

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

ஜாலியா இருக்கனு, சும்மா சிரிக்கனும் மொக்கையா இருக்ககூடாது ஓவர் சவுண்டு உட்டு எவன் பேசினாலும் (பஞ்ச்) நல்லா இல்லை

20.கடைசியாகப் பார்த்த படம்?

சர்வம் - மனைவி குழந்தையுடன் பெங்களூர் PVR யில்
மொக்கை படம் என்றாலும், என் குழந்தைக்கு அது முதல் படம் , சத்தம் போடாம பார்த்தாங்க அதுவும் முதல் பாதி நல்லா இருந்தது..

21.பிடித்த பருவ காலம் எது?

பள்ளி, கல்லூரி, இப்போ இருக்கிற திருமணமான காலம் எல்லாமே அந்த வயதில் அதற்க்கு ஏற்றார் போல சரி ஜாலியா என்சாய் செய்து இருக்கிறேன். செய்து கொண்டு இருக்கிறேன்

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

சத்தியமாதற்ப்போது நான் எந்த புத்தகம் படிக்கவில்லை , முன்பு ஒரு சில புத்தங்கள படித்து இருக்கிறேன் , பதிவுகள், ஆனந்தவிகடன், குங்குமம், குமுதம் அவ்வளவு தான்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அடிக்கடி ஒரு நாளுக்குள் பத்து மாத்திய காலம் எல்லாம் இருக்கு, இப்போ பாப்பாவுக்கு பிடித்த புகைப்படம் அதனால் மாற்றவில்லை கடந்த ஒரு மாதமாக

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

குழந்தைகளின் மழலை --பிடித்து
இரச்சல் தரும் சவுண்டு -- பிடிக்காது

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இந்த பக்கம் சிங்கபூர், கொரியா மலேசியா என்று வேளைக்காக சென்று இருக்கிறேன் ஆனால்
"ஹாப்பி டெஸ்டிங் "என்று ஒரு பேப்பர் பிரஸ்ண்ட் பண்ண டிவலபர் கான்பிரனஸ்க்கு பாரிஸ் வழியாக Malaga Spain ஸ்பெயின் சென்றேன்.
அது தான் தொலைவு...

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்கே ... நல்ல லீடர்ஷிப் குவாலிட்டி, கணினியில் புதுசா ஏதாச்சு யோசிச்சு பண்ணுவேன், மொத்தமா கிரியேடிவிட்டினு கூட சொல்லாம்...
நல்ல கதை இருக்கு ஒரு படம் இயக்கனும் பார்ப்போம். நல்ல தயாரிப்பாளர் இருந்ந்தா சொல்லுங்க ...குறைந்த செலவில் ஒரு ஜாலி யூத் படம் எடுப்போம்

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?


நம்பிக்கை துரோகம்...( இது வரை அப்படி ஏதும் இல்லை )

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ரொம்ப வாலு சாத்தான் :-) கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் நஞ்சம் இல்லை ரொம்ப ரொம்ப சுத்துனான்.
வேற ஒரு பெண்ணுக்கிட்ட கடலைனு போட்டு 2 வருடம் ஆகுது
இப்போ பொட்டி குள்ள இருக்கான் இனி வர மாட்டான்.
என் மனைவி யின் தியாகம் பல கேள் பிரண்ட்ஸ காப்பாத்திடுச்சு.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

நமக்கு கேரளா தான் :-) ரொம்ப பிடிக்கும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

செத்து போனா ஒரு ஆயிரம் பேராவது நல்லவன் டா இருந்தான் ஏதாச்சும் செய்தான் டா என்று சொல்லும் அளவுக்கு செய்யனும்.. இருக்கனும் என்று ஆசை.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

சத்தியமா ஏதும் இல்லை, சைட் அடிப்பது முதல் எல்லாமே திட்டு வாங்கினாலும் என் மனைவி யிடம் சொல்லிவிடுவது உண்டு..

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்வு -(வா - வாழ் - இழவு ) அது ஒரு பயணம், சந்தோசம் ஆவதும் துயரம் ஆவதும் ஓட்டுனரான உன் கையில் தான் இருக்கு.
//வாழ்ந்து பாருங்க
எவன் தான் தப்பு பண்ணல
அதுல இருந்து திருத்திக்கொண்டு எல்லாரையும் சந்தோச படுத்துங்க...
பயம் வேண்டாம் துணிந்து இனிதே செல் அந்த அழகிய பயணத்தில்//
ஒரு வரி கேள்வினாலும் நாங்க எல்லாம் பக்கம் பக்கமா மொக்கையா எழுதிதான் கல்லூரியில் மார்க் வாங்குவோம் அது மாதிரி தான் இந்த பதிலும்.


பெரிய மொக்கையை படித்தற்க்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

( படிக்காமா படம் பார்த்தவங்களுக்கும், சும்மா கங்காரு மாதிரி தாவி படித்த நண்பர்களுக்கும் நன்றி!!!)

எல்லோரையும் படிக்க வைக்க போடுங்கம்மா ஓட்டு.....

என் பதிவை கூட இவ்வளவு பெரிசா அடித்தது இல்லை, ஹம் உண்மை தமிழன் அண்ணனை மாதிரி அடிக்க வைச்சிடிங்க :-)

தமிழர்ஸ் மற்றும் தமிழிஷ்
யாருடா நீ ? ( பெரிய இவனா கொங்யால )SocialTwist Tell-a-Friend

Thursday, May 28, 2009

பெங்களூர் டிராபிக் போலிஸும் நானும் - நகைச்சுவை

( இது ரெண்டும் உண்மை சம்பவம்)

சூவைங்

ஒரு 6 வருடத்துக்கு முன்னாடி கல்லூரி படிக்கும் போது வண்டியில தான் சுத்துவோம்...

கூருப் ஸ்டடி என்று சொல்லிட்டு எவன் வீட்டுகாவது சென்று ஆங்கில படம், மொக்கை கதை, இப்படி தான் போகும் வாழ்க்கை, எவனாச்சும்  பார்த்து டேய் அந்த பெண்ணு உன்னை தான் மச்சி பார்க்குது ...

நிஜமாவா டா, ஆமா டா உன்னை தான் பாக்குறா பாரு நீ பேனா கேட்ட உடனே சிரிச்சிட்டு கொடுத்துடா , நம்ம ரமேஷ் கேட்டு கொடுக்கல

அப்படியா ( இளையராஜா மியூசிக் ) ( பல்ப் எரியும்)

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திஅவன அன்னைக்கு நைட் விட்டத்தை பார்த்து .. காதல் கதை போலிவைப்போம்.... வேற வழி நைட் 1 மணி வரை அந்த மொக்கை கேட்ட வேண்டும்

ஏனா அது பீல்ங்கிஸ்...

அடுத்த நாள் அவன் காதல சொல்ல வைச்சு பூஸ் போன பிறகு தான் எங்க நட்பு அவனுக்கு புரியும்...

நாங்க ஹெல்ப் பண்ணுறோம்னு சொல்லி எல்லாம் கவுத்த கதை தான் ஜாஸ்தி, அதில் 2 , 3  கிளிக்கும் ஆகி இருக்கு

சரி மேட்டருக்கு வருவோம், இப்படி அயராது படிக்க போகும் போது, ஒரு டிராபிக் போலிஸ் புடிச்சிட்டாரு..

தம்பி டிரவிங்க் லைசன்ஸ் இருக்கா..

இருக்கு அங்கிள்னா சொல்ல முடியும், இருக்கு ஸார்..

சரி இரவு என்ன இப்படி பாஸ்டா வா ஓட்டுறது...

சாரி சார் நண்பன் ஹாஸ்பட்ல இருக்கான், (அவங்க தாத்தா பாட்டி இறந்து டாரு இப்படி சொல்லி மாட்டிகிட்டா அது ஸ்கூல் லிவ் லெட்டரோட ரைட்)

டேய் தம்பி ( அதான் டேய் சொல்லியாச்சுல அப்புறம் என்ன தம்பினு பாச மழை) நீ இப்படி வண்டி ஓட்டினா நீ அவனுக்கு பக்கத்து பெட் தான்.

உங்க அப்பா என்ன பண்ணுறாரு ( கலக்டர்னு சொன்னா நம்ப போறிங்களா இல்லை தானே அப்புறம் என்ன கேள்வி) 
 அவரு செண்டரல ... செண்டரல !!!

சார் செண்டரல் னா செண்டரல் கவுர்மண்ட்ல எஞ்சினயரா இருக்காரு..

ஏன் தம்பி அவரு புள்ளாயா நீ ?  பாத்து படிச்ச புள்ளா நடந்துக்கொங்க

( அட்வைஸ் தான் அவன் அவன் பீரியா கொடுக்குறாங்க)

சரிங்க ஸார்ர்ர்ர்

சரி எவ்வளவு இருக்கு

படிக்கிற பையன் கிட்ட எவ்வளவு இருக்கும் 2 ருபாய் தான் இருக்கு ஸார்

ஏன்யா நீ எல்லாம் காலேஜ் படிக்கிற பையனா ?
பாக்கெட் மணி எல்லாம் இல்லையா

அது எல்லாம் காலையிலே காலி ஸார்...

சரி போ இனி மெதுவா போகனும் சரியா

தாங்க்ஸ் சார்...


ச ரொம்ப நல்லவர் காசு வாங்காம ( இருந்தா தானே வாங்குவார்) அனுப்புராரு..

ஸர்ர்ர்ர்ர்ர்

தம்பி 2 ரூபாய் கொடுத்துட்டு போ பா டீ குடிப்போம் ...

இருந்த 2 ரூபாய் கூட விடல நல்லவங்க..

அன்றில் இருந்து டிராபிக் போலிஸில் மாடினாலே பர்ஸில் பணம் இருந்தால் வண்டிய நிறுத்திட்டு போற கேப்புல அதை ******** மறைச்சு வைச்சிட்டு தான் போறது... என்ன செய்ய..
ஒரு நாளு ஒரு போலிஸ் கிட்ட காசு இல்லைனு சொல்லியும் எல்லா பாக்கெடிலும் கைவிட்டு காசு இருக்கானு செக் பண்ணியதுனால

காலேஜில் பிட் அடிக்கும் போது எல்லாம் மேல் பாகெட்டில் தான் வைப்பது உண்டு, ஸ்கூலில் படிக்கும் போது மட்டும் ****** மறைச்சு வைப்போம்

என் நண்பன் சொல்லுவான் டேய் சரஸ்வதி பாவம் டா..
போலிஸில் மாட்டும் போது லட்சுமியும் பாவம் டா


****

நம்ம பர்ஸில் எப்போதும் காசு அவ்வளாவா வச்சிக்க மாட்டோம் காரணம் ஒன்னு கார்ட் இருக்கு, இன்னொனு போன் இருக்கு, இது வரை பிரச்சனை வந்தது இல்லை


தினமும் சாப்பிட ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு தான் வருவேன்...

ஹம் இப்போ ஆபிஸ் கொஞ்சம் தூரமா மாதிட்டாங்க ...என்ன செய்ய

மதியம் கிளம்பி வந்தா இன்னைக்கு பெங்களூர் டிராபிக் போலிஸ் புடிச்சிட்டாங்க..

TN ரெஸிடரேஷன் புடி அமுக்கு என்று பாய்ந்து ஹீரோமாதிரி வந்தாரு ..

புடிச்சிட்டாங்களா புடிச்சிட்டாங்க..

அவரு இங்கிலிபிஷில்

show your driving license ?  (சோ (ஷோ) யூவர் டிரவைவிங் லைசன்ஸ்...)

என்னா இருந்தாலும் முடிஞ்சது சோலி...

கொஞ்சம் தூரம் தள்ளி ... ஒரு போலிஸ் பைகில் இருப்பாரு ஹீரோ மாதிரி நம்ம காக்க காக்க அன்புசெல்வன் மாதிரி கண்ணாடி எல்லாம் போட்டுக்கிட்டு ..

(ஓ அன்புசெல்வன் டிராபிக் போலிஸ் இல்லைனு மொக்கை போடாதிங்க அவரு மாதிரி பில்டப்பா இருந்தாரு)

you have emission certificate ? (யூ ஹாவ் எமீஷன்)

எஸ் (Yes )

you have insurance ? (யூ ஹாவ் இன்ஸுரனஸ்)

எஸ் (Yes )

(டேய் நல்ல பசி டா  you have money ? (யூ ஹாவ் மணியானு) மேட்டருக்கு வாங்க டா)

Your insurance is over ( யூவர் இன்ஸீரனஸ் இஸ் ஓவர் )
( எனக்கு உன் சோலி ஓவர்னு எனக்கு கேட்டுச்சு)

சார் இருக்கும் சார்
புதுசா ரினுவள் பண்ணி வைத்தார் எங்க அப்பா ...

உடனே மனைவிக்கு போன் இன்ஸீரனஸ் இருக்கா பாரு..

இருக்குங்க..

சார் வீட்டுல இருக்கு.

நோ உங்க கிட்ட இருக்கனும்...

சரி You have paid Road Tax for TN registration ? ( யூ ஹாவ் ரோட் டேக்ஸ் பார் டின் )

அவ் அவ் அவ் னு வடிவேல் கணக்கா ஏண்டா

இருக்கு ஸார்..


ஓ சோ ...

நீங்க வந்தது பீரி லைப்ட் இல்லை, நோ இன்ஸூரனஸ் சோ இதுக்கு ஒரு 100 அதுக்கு ஒரு 300 அதுக்கும் ஒரு 400 சோ 800

என்ன டா இது எங்க ஊரு வாத்திய விட கொழப்புராங்க..

அதுக்குள்ள ஒரு லாரியை புடிச்சாங்க அவன் பாடுக்கு வந்து 50 ரூபாய் கொடுத்துட்டு ஏது என்னானு கூட கேட்க்காமா போய்டான் இவரு கூப்பிட கூப்பிட போய்டான் ஒரு வேளை ரெகுலர் கஸ்டமர் போல

டேய் இன்னைக்குனு பார்த்தா நான் நல்லா வேற டிரஸ் பண்ணனும்..

நீங்க நின்னைக்கிற மாதிரி என் கிட்ட ஒன்னும் இல்லைனு சொன்ன நம்ப போறாங்களா என்ன ..

சரி இன்ஸ்பெக்டர் கிட்ட யூ டாக்  என்றார்

அவரு கிட்ட ஸார் I have in home ( ஐ ஹாவ் இன் ஹோம்)

Are you born in America ? (ஆர் யூ பார்ன் இன் அமெரிக்கா ...)

இல்லை சார் அப்புறம் என்ன இங்கிலிஷ் ( எத்துனை பேர காலேஜ் ல ராகிங் பண்ணி இருப்பே சுரேஷ் எல்லாம் அவர்கள் சாபம் நடக்கட்டும் முடிந்த அளவு அடிங்கடா )

இல்லை சார் எனக்கு தமிழ் தான் நல்லா வரும்..

கன்னடா கோத்தில்லா

சொல்ப்ப சொல்ப்ப ( இந்த வார்த்தை தான் நல்லா தெரியும் )

அவரு கன்னடா லே **!@#!#!##$$%  என்ன சொன்னாருனா
தெரிந்த கன்னடாவில் பேசு இது பெங்களூர் அப்படினு சொன்னாரு

( உலக மொழி படங்கள் பார்த்தது நல்லதா போச்சு)

ஓக்கே
அவர் டேக் ஒவர்னு வடிவேல் சொன்ன மாதிரி இவன் முடிச்சு அடுத்தவனுக்கு அனுப்பினாங்க...

சரி பர்ஸில் காசு இருக்கானு பார்த்தா 10 ருபாய் இருக்கு.

ஒரு மணி நேரம் பாஸ் சும்மா நிக்க வைச்சு ஆளு ஆளுக்கு டைலாக்..

ஹம் முடியல சார் விடு பக்கத்துல தான் இருக்கு சாப்பிட்டு வரும் போது இந்த வழியில் தான் வருவேன் உங்களுக்கு தரேன் ஹம்...

அப்புறம் நூறு ரூபாய் க்கு டீல் ஓவர்... பக்கத்து ஏடி.எம் போய் எடுத்து கொடுத்தேன்..

கொடுக்கும் போது. சார் இன்னும் 200 கொடுங்க

டேய் ஏதோ கொடுத்து வச்சவன் மாதிரி கேட்டுகுறிங்க

நல்ல வேளை நம்ம பாங் பேலன்ஸ் எப்போதும் ஒரு சில நூறுகள் தான் இருக்கும். இது மாத கடைசி வேற சார் 600 தான் மீதி இருக்கு, இன்னும் ரெண்டு நாள் ஓட்டனும் சொல்லி விளக்கி

100 கொடுத்துட்டு  தான் வீட்டுக்கு வந்தேன்.

வரும் போதே மனைவிக்கு ஆனந்தம் ..
வேணுங்க இனி ஒழுங்கா எல்லாத்தையும் வண்டியில் வச்சுடுங்கனு சொன்னாங்க

அப்போ தான் பார்த்தேன் அந்த இன்ஸீரன்ஸ் என் பின் பாக்கெடில் இருந்தது அட ச காட்ட எடுத்து.. அந்த நேரத்தில் மறந்துட்டேன்...

ஹம் என்ன கொடுமை சரவணா இது,

இதனால் இன்னைக்கு ஆபிஸ்க்கு மதியம் போக முடியவில்லை, சாப்பிட்டது லேட், செல் போன் பேட்டரி அவுட் ... டூடே சூப்பர் டே



******

ஸ்பெஷல் நீயுஸ் - பிறந்தநாள் வாழ்த்துகள்



இன்று நம்ம  பதிவுலக கதாநாயகன்,கவர்ச்சி கண்ணன் ( கண்ணி தான் இருக்கனுமா ) கார்த்திகைப்பாண்டியன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

இன்னும் அவரு பேச்சிலர் பேச்சிலர் பேச்சிலர்... (லட்சியம் கொண்ட சீனியர் லக்ட்சரர்)




பெங்களூர் டிராபிக் போலிஸும் நானும் - நகைச்சுவைSocialTwist Tell-a-Friend

Wednesday, May 27, 2009

லக்கி லக்கி நீ லக்கி - அப்பா ஆகிடாரு லக்கி, வாழ்த்துகள்!

வாழ்த்துகள் லக்கி!

இன்று லக்கிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது...

இந்த தருணத்தில் அவரை மனதார வாழ்த்துகிறேன்..

என்ன தான் கருத்து மோதல் இருந்தாலும், அவரை வாழ்த்த காரணம் ?

நானும் ஒரு 5 மாத பெண் குழந்தைக்கு தகப்பன் என்ற முறையில். அப்பா என்ற செய்தியை கேட்ட அந்த நொடி, நமது வாரிசை பார்க்கின்ற அந்த நொடி, மணைவியின் பத்து மாத தவம், வலி எல்லாம் அந்த ஒரு நிமிடம், அது ஒரு ஆணந்த நிமிடம். நீங்க அப்பா ஆகிடிங்க என்று சொல்லும் போது.. ஹா ஹா

போன் செய்தும் அவருக்கு வாழ்த்து சொல்லிட்டேன்.

( எனக்கு பெண் குழந்தை இருக்கிற விஷியத்தை என் அடுத்த கேள்வி பதிலில் இல்லைனா என் குழந்தையின் பிறந்த நாள் அன்று சொல்லாம் என்று இருந்தேன், லக்கியின் மூலம் சொல்லியாச்சு)

வாழ்த்துகள் லக்கி, சந்தோசமா உங்க அழகிய தேவதையுடன் நேரத்தை செலவு பண்ணுங்க ... டீரிட் எல்லாம் சென்னை வரும் போது பார்த்துகலாம்.


நட்புடன் - சுரேஷ்.





லக்கி லக்கி நீ லக்கி - அப்பா ஆகிடாரு லக்கி, வாழ்த்துகள்!SocialTwist Tell-a-Friend

Tuesday, May 26, 2009

வாலு கொடி பறக்குதுடா


நான் சாரு நிவாதவை விஜய் டிவியில் பார்த்து தெரியும், அவரோட பேச்சு ஒரு முறை... என்னை கவர்ந்தது... தன் மனைவியிடம் தயங்காமல் அன்பை வெளிபடுத்தினார், அவர் ஜஸ் கீரிம் சாப்பிட வில்லை என்று அவங்களும் வேண்டாம் என்று சொன்ன போது...

அப்புறம் பரிசல் பதிவில் "சாருவோட ஜீரோ டிகிரி பற்றி பேச அவர் நண்பன் வரும் போது அதுக்கு "நான் கடவுளை" பத்தியே பேசு'  என்று சொன்ன நகைச்சுவை மூலம் எனக்கு சாரு ஜீரோ டிகிரி என்ற புத்தகம் எழுதியது தெரிய வந்தது..

அதுக்கு அப்புறம் பித்தன் சொல்லி அவரோட சைட் அதாங்க வெப் சைட் சென்று பார்த்தேன்..  அவரோட பதில்கள் சில வற்றை படித்தேன்...

தனிப்பட்ட முறையில்  வேறு கருத்துகள் இருந்தாலும்,
நல்லவன் மாதிரியே வேஷம் போடும் நாடக மனிதர்கள் மத்தியில் அவரு ஒன்னும் தப்பு இல்லை ( எனக்கும் சில இல்ல அவரோட பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரை தப்பாக பார்க்க எனக்கு தோன்றவில்லை.

நான் ஒன்னும் ரொம்ப எல்லாம் புத்தகம் படிப்பவன் இல்லை எனக்கு தெரிந்த அறிவுக்கு சொல்கிறேன்)



நான் அதிகம் படித்த புத்தகம் சி்றுவர்மலர், தென்னாலி ராமன் கதைகள், சிறுகதைகள், அம்புலிமாமா, கோகுலம்,  ( எங்க வீட்டில் வெள்ளி தின மலர் வாங்குவதற்க்கு காரணமே இந்த சிறுவர்மலர் நான் 12வது படிக்கும் வரை கூட வாங்கினோம்..

எனக்கு சிறுகதைக்கள் பிடிக்கும், வண்ணதாஸனின் கவிதைகள் .. இன்னும் பெயர் தெரியா ஆசிரியர்களின் கதைகள்..

இப்போ அது மாதிரி பதிவுலக நான் ரசித்த பதிவர் நிறையா இருக்காங்க ...
அதில் வாலுபையன் மிக ரசித்த நண்பர்.. ( அதற்க்கு காரணம் நானும் ஒரு வாலு அதுவா கூட இருக்கலாம்.

பொதுவா ஒரு பதிவு போதும் வாசகர்களை (மக்களை)  கட்டிப்போட்டு திரும்ப தளத்திற்க்கு அழைத்து வர... அது மாதிரி வாலுவோட பல பதிவுகள் ... இருக்கு.

சும்மா நக்கல், கதை, கவிதை, வாலுதனம் எல்லாத்தையும் பின்னி எடுக்குறாரு..

இதுவோடு அவரு ஒரு 212 பாலோவர், பல நல்ல உள்ளங்களை சம்பாதித்தவர்.
அனானி பெயரில் யாரையும் காயப்படுத்தாத மனிதர். பதிவர்களுக்கு ஒன்னுனா உதவி செய்யும் இந்த அருன் இன்னும் வளர்க, வாழ்க

பதிவுலகத்தில் வாலு கொடி பறக்குதுடா.

பிகு - படம் நண்பர் தமிழ்த்துளி தேவா ( மப்பு இல்லாத போது எடுத்த படம் தான் நம்புங்கள்)
வாலு கொடி பறக்குதுடாSocialTwist Tell-a-Friend

தமிழர்ஸ் - தமிழிஷ்க்கு போட்டியா ?



நான் சில திணங்களுக்கு முன்பு தமிழிஷின் மோசடி என்ற பதிவை போட்டேன்,
அதற்க்கு ரவி அவர்கள் டெக்னாலஜி தெரியவில்லை என்று சொன்னார்.

ஆனால் அந்த பதிவுக்கு பின்பு தமிழ்ஷில் சரியாக 11-13 வோட்டு வாங்கினாலே பப்ளிஷ் ஆகிவிடுகிறது...

ஆனால் காமெடி என்னானா அதுக்கு முன்னாடி (ஏன் இந்த தமிழிஷின் மோசடி பதிவு கூட) 17- 18 வோட்டு வாங்கியும் அது பப்ளிஷ் ஆக்வில்லை...

ஆனா டெக்னாலி தெரியலைனு சப்ப பதிவு போட்டாரு நம்ம ரவி...

டெக்னாலஜி தெரிந்ததுனால சொல்லுறேன்..
அப்படி எத்துனை வோட்டுகள் வாங்கினாலும், அந்த பதிவை பப்ளிஷ் செய்யாம டிஸ்கார்ட் பண்ணலாம்.

சரி இப்போ தமிழ்ஷ் பிரச்ச்னை பண்ணவில்லை..

அதுக்கு அந்த பதிவில் இனி தமிழ்ஷில் சப்மிட் பண்ணாமா இருக்க தில் இருக்கானு பின்னூட்டங்கள் வேற..

( நமக்கு ரொம்ப தில் இருக்கு :-) )

ஆனா தமிழ்ஷ் இனி அப்படி நடக்காமல் இருக்கும் என பதில் கூறியதால் தொடர்ந்து தமிழிஷில் பதிந்து வருகிறேன்.. இப்போது பிரச்சனை இல்லை.

நேற்று ஒரு தளம் பார்த்தேன் தமிழர்ஸ்.காம் ( www.Tamilers.com)

இது தமிழ்ஷ் போலவே இருக்கு ?

அந்த அளவுக்கு பாப்புலர் இல்லை ஆனா புதிதாய் பார்க்க நல்லா இருக்கு. நெல்லைதமிழ் மாதிரி இந்த தளமாவது ஓழுங்கா நடுநிலையா இருக்கானு பொறுத்து இருந்து தான் பார்க்கனும்.

தமிழர்ஸ் - தமிழிஷ்க்கு போட்டியா ?

வாய்ப்பே இல்லை காரணம் இது புதியது... ஆனால் பார்போம்.. எப்படி இருக்குனு.

புதியதாய் வர தளங்கள் தமிழர்ஸ்,உலவு, நம்குரல் மற்றும் பிரபலமான தமிழ்ஷ் அனைத்துக்கும் ஒரே விஷியம் பதிவர்களை நம்பி தான் தளங்கள் இருக்கே தவிரே ... தளத்தை நம்பி எந்த பதிவரும் இல்லை.

தமிழர்ஸ் இதை புரிந்துக்கொண்டு செயல்பட்டால் தமிழர்ஸ்.காம் வளர வாய்ப்பு இருக்கிறது..

வளர்ந்து பின்பு நடுநிலை மாறாமல் இருந்தால் தான் நலம்.

வாழ்த்துகள் தமிழர்ஸ்



நன்றி
சுரேஷ்.




தமிழர்ஸ் - தமிழிஷ்க்கு போட்டியா ?SocialTwist Tell-a-Friend

Monday, May 25, 2009

முதுகு சொறிதல் ? இல்லை நட்பு பாராட்டுதல் - குங்குமம்

என் நண்பன்...

ஆம் பதிவுலகில் கிடைத்த மிக சிறந்த  நண்பன்,முதலில் கிடைத்த நண்பனும் கூட .. நம்ம வினோத் கெளதம்.

அவன்  எழுதிய பதிவு ..

சில பருவங்கள் சில பார்வைகள்..

சும்மா ஆட்டோகிராப் மாதிரி அழகான நினைவுகள்...

நம்ம சக பதிவர்கள் பதிவுகள் எல்லாம் பத்திரிக்கையில் பார்க்கும் போது எவ்வளவு ஆனந்தம் வருமோ, அதை போல் நண்பன் விணோவின் பதிவை குங்குமம் வார பத்திரிக்கையில் பார்த்த போதும் ஆணந்த தாண்டவம் தான்...


நண்பா, எனக்கு அதில் ஒரு சின்ன பெருமை நான் முதன் முதலில் கொடுத்த பட்டாம் பூச்சி உனக்கு தான்..


உன்னை மாதிரி ஜாலியா அழகாய் எழுத நான் கற்ற்க்கொள்கிறேன்.. டா..


சும்மா பறக்கிற மாதிரி இருக்கு..


நண்பர் பிரியமுடன் வசந்தின்

ஒரு கொசுவின் கதை

பதிவும் வந்து இருக்கு. வாழ்த்துகள் சகா..


இதை முதுகு சொறிதல் என்று சொல்ல மனமில்லாமல் நட்பு பாராட்டுதல் என்று சொல்கிறேன்..



வாழ்த்துகள் நண்பா..


தொடர்ந்து எல்லாரும் கலக்குங்க


இங்க மிக பெரிய நன்றி நம்ம குங்குமம் டீமுக்கு தான் சொல்லனும். எல்லாருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியா யாரு தயவும் இல்லாத நம்ம பிளாகர்ஸ்க்கு நல்ல ஊக்கம்  மற்றும் உத்வேகம் தரவே 3 பக்கங்கள் குங்குமத்தில் பிளாக் ஸ்பாட் என்று ஒதுக்கிய அந்த ஆசிரியருக்கும் அந்த நல்ல டீமுக்கும் நன்றி.

இது மிக நல்ல விஷியம்.
மீண்டும் நன்றி டீம்...


இனி அனைவரும் நன்றாக எழுத ஒரு பத்திரிக்கை உலகில் இடம் கொடுத்து இருக்கிறது .. நம் குங்குமம்..



நன்றி
ஆணந்த நண்பன்
சுரேஷ்


முதுகு சொறிதல் ? இல்லை நட்பு பாராட்டுதல் - குங்குமம்SocialTwist Tell-a-Friend

Thursday, May 21, 2009

பிராபாகரன் உடம்பை பற்றிய வீடியோவை அவரே பார்த்து சிரிக்கும் உண்மை

பிராபாகரன் உடம்பை பற்றிய வீடியோவை அவரே பார்த்து சிரிக்கும் உண்மை 
பிராபாகரன் உடம்பை பற்றிய வீடியோவை அவரே பார்த்து சிரிக்கும் உண்மைSocialTwist Tell-a-Friend

Monday, May 18, 2009

முதல் பயணம் - முதல் சிறுகதை.

 
(படம் நான் கிளிக்கியது)
சின்ன வயசுலே இருந்து நம்ம குந்தனுக்கு ஏரபிளேயினில் பறக்கனும் ரொம்ப ஆசை...


டேய் குந்தா உள்ள வாடா

ஏரபிளயின் சவுண்டு கேட்டா போதுமே ... உடனே மொட்ட மாடியில போய் பார்க்க வேண்டியது கொருக்கு பய..புள்ள

நான் ஒரு நாள் அதுல பறப்பேன் மா உங்களும் அய்யாவையும் கூட்டிட்டு போறேன் பாருங்க..

உங்க அய்யா நம்ம பிளசர்ல போக சொன்னாலே வேட்டிய நணைச்சுடுவாரு... அவரு எங்க ஏரபிளானால போய்... போடா

(சில வருடங்கள் கழித்து நம்ம குந்தனுக்கு ஓரிசாவுல ஒரு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது...)

டேய் குந்தா ரொம்ப தூரம் போய் படிக்கனுமா ஏன்யா நம்ம ஊருல இருக்குற படிப்பு படிச்சா பத்தாது...

அய்யா பாரு பேச கூட முடியாம பாசத்துல அழுறாரு... என் சிங்கம் அழுது இது தான் முத்ல் முறை..
எங்க அம்மா செத்த் போது கூட கண்ணுகளங்கவில்லை ம்ம் பாவிபய உன் மேல எம்ப்புட்டு பாசம் வைச்சி இருந்தா இப்படி அழுவாரு...

அய்யா அழாதிக ரெண்டு நாளு நம்ம டிரெயினல் போய் சேர்ந்துடுவேன்..

அய்யா குந்தா ஏதோ ஆர்டல்னு ஒரு விளம்பரம் போடுறாங்கள அந்த மாதிரி நம்ம அய்யாவுக்கும் ஒரு செல் வாங்கி கூடு பா நீ வேளைக்கு போய்...

சரி ஆத்தா...

காசு இருக்கா தம்பி.. இந்தா இதையும் வைச்சிக்கோ.. ஏய் புள்ள நம்ம பயலுக்கு முறுக்கு செஞ்சி வைச்சியே அதை கொடுத்தியா,...

அய்யோ மறந்துடேங்களே ..

இப்படி தான் உங்க ஆத்தா மறந்து  மறந்து ... அப்புறம் எனக்கு கொடுத்து சாப்பிட சொல்லி துன்புறுத்துவா... குந்தா..

சரி பா பார்த்து போய்டு வா...


*******

ஏலாய் மாப்பிள இந்த டியிரேயின வந்து இருக்காம நம்ம ஏரபிளானுல வந்து இருந்தோம் சீக்கிரம் வந்து இருக்கலாம்.... நான் வேளைக்கு போய் சம்பாதிச்சா ஒரு வாட்டி சந்தோசமா அந்த பறவை போல பறப்பேன் டா..

டேய் நீ போனதே இல்லையா நம்ம சந்தோஷ் அப்பா ஏர்பிளேன் காப்பிடனாம் மச்சான்.. அவன் ஊரு சென்னை அவனோட நம்ம அடுத்த முறை சென்னை போனா அவங்க அப்பா ஏர்போர்ர்ட்டுக்கு கூட்டிட்டு போவாரு சொன்னான் மாப்பிள..

மச்சான் நாமலும் நாலவது வருஷம் வந்துட்டோம்...

டேய் சந்தோஷ் நீயும் உங்க அப்பாக்கிட்ட கூட்டிடு போன மாதிரி தெரியல..

சாரி மச்சான் அவரு நம்ம போற நேரத்துக்கு அவருக்கு ஊருக்கு வெளிய பறுந்து போய் டாரு நானே எங்க அப்பா டிக்கெட் வாங்கி அந்த பிளைட்டுல பறந்தா தான் பார்பாரு போல .... கேப்டன் நரேஷ்...

மச்சான் எங்க ஊருல கேப்டனா அது நம்ம விஜயகாந்து தான்...

டேய் உங்க லோல் இருக்கே..

வருடத்து ஒரு முறை பசங்க எல்லாம் டிரேயினல் ஊருக்கு போய்ட்டு வந்து ஒரே ரூம்ல சந்தோசமா இருக்கோம்.. அனா நாலு வருத்துசல நாலு வாட்டி தான் ஊருக்கு போக முடிந்தது..
இந்த டிரேயினல் போனா அதுக்கே ரெண்டு நாளு அப்புறம்... என்னத்த சொல்ல..

மச்சான் நான் வேற பிளேஸ் ஆயுட்டேன்... முதல சம்பிளம் வாங்கினா பிளேன்ல தான் ஊருக்கு ;) அப்புறம் எங்க ஆத்தா அய்யாவை கூட்டி கிட்டு போகனும்..

சரி டா இதே புளம்பலா போச்சு..

பக்கது ரூம்ல இருந்து

மச்சான் வாடா இன்னைக்கு பார்ட்டி கொடுக்குறான் நம்ம அசோக்...

சரி டா வரோம்..

டேய் மச்சான் இன்னைக்கு  வாந்தி எல்லாம் எடுபாங்க அதனால ரூம்ல பினாயில் இருக்க ....

10 பாட்டில் இந்த மாச பட்ஜட்ல வாங்கி வச்சாச்சு...

ஒ*** குடிக்க தண்ணி வாங்குறாங்களோ இல்லையோ ஓசி தண்ணி அடிச்சு வாந்தி எடுத்தா அதை கழுவ பினாயில் வாங்கி வச்சிடுறாங்க..

சரி வா...

டேய் போன் வந்து இருக்கு உங்க ஆத்தா பேசனுமா... ஆத்தாவுக்கு 500 ரூபாய்க்கு செல் போட்டாலும் போடாங்க அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து ரவுசு கொடுக்குது..

டேய் மிஸ்டு கால் இல்லை டா ஆத்தா லைன்ல இருக்கு...

டேய் குந்தா அய்யா தவறிட்டாரு டா.... சீக்கிரம் புறப்புட்டு வாடா எனக்கு கையும் ஓடல காலும் ஓடல குந்தா அய்யா நம்ம எல்லாதையும் விட்டு இப்படி போய்டாரே படுபாவி பய உங்க அய்யன் இப்படி பன்னிட்டாரே

ஆத்தா நீ அழாத நான் வந்துடுறேன்.. நான் வராமா அய்யாவ எடுக்க வேண்டாம்..
நல்லா தானே ஆத்தா இருந்தாரு .. அய்யோ

நெஞ்சு வலி... டா. சரி சீக்கிரம வந்துடு குந்தா.. ஆஆ

சரி ஆத்தா

டேய் குந்தனை வேகமாய் கையில் இருப்பதை வைத்து , மோதிரம், செயின் எல்லாம் வைச்சு அவசரமா டிக்கெட் போட்டு ஏரபிளனல் டிக்கெட் வாங்கி அனுப்பி வச்சுடுவோம்.. சரி அசோக்


அன்று வின்னுலகம் ஏந்திய தன் அய்யனை பார்க்க வின்னூர்தில் போகிறான்..
ஒரு பறவையாய் ... அதே ஏரோபிளையின் காத்தடியில் சிக்கிய சிதரிய பறவையாய்

இந்த முதல் பயணம் அவனால் மறக்க முடியாமல் போனது...

~சக்கரை~
  சுரேஷ்

(இந்த கதையை அன்புக்குரிய என் மச்சானின் நண்பன் குந்தனுக்கு சம்ர்பிக்கிறேன்.. அவரது தந்தையின் ஆண்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
இது ஒரு உண்மை கதையை வைத்து சித்தரித்து எழுதியது)
முதல் பயணம் - முதல் சிறுகதை.SocialTwist Tell-a-Friend

Sunday, May 17, 2009

சரத்தின் வோட்டு எண்ணிக்கை மற்றும் பல


தேர்தல் வோட்டு எண்ணிக்கை நிலவரம் வர வர நானும் போன் மூலம் தென் சென்னை நிலவரத்தை அறிந்து கொண்டு இருந்தேன்...

எனக்கும், நண்பர்கள் சரத்தின் நிலவரம் குறித்து மெயிலும், SMS, போனும் செய்தார்கள்..

அங்கு வோட்டு எண்ணிக்கையில் இருந்த அனைத்து கட்சி மக்களும் கேட்ட ஒரே கேள்வி யார் இந்த சரத்பாபு :-)

ஆமாம் மொத்தம் 17,000+ வோட்டுகள் ...

இத்துணைக்கும் கடைசி நேரத்தில் போஸ்டர்ஸ் கிழிக்கப்பட்டது,பணம் விளையாடியது...

ஜந்து வருடங்கள் இருந்தும் விஜயகாந்து கட்சி வாங்கிய  வோட்டுக்கு நிகராக
ஒரு தனி நபர் ஒரு மாதம் மட்டுமே உழைத்து வாங்கிய வோட்டுகள் 17,000+ அவன் அவன் பல லட்சங்கள் கோடிகள் செலவு செய்து பண்ண முடியாததை ...

நம்ம சரத் 17,000 வோட்டுகள் வாங்கி சாதனை படைத்தார்... இது வரலாறு தான்..

இந்த வெற்றி கிடைத்த அன்று அனைத்து கட்சிகளும் அவரை தொடர்பு கொண்டு தங்கள் கட்சியில் இணைய சொல்லியது....

பல குண்டர்கள் மத்தியில் நம் இளைஞர்கள், நல்லவர்களை..
நம்பி அடிச்சான் ஸீக்ஸர்

அவரிடம் இது பற்றி ஒரு அரை மணி நேரம் பேசினேன்... அடுத்த கட்ட நடவடிகளும் விவாதித்தோம்...

இந்த இளைய சக்திக்கு சில நல்ல விஷியங்கள் செய்ய நல்ல பிளான்கள் வச்சி இருக்காரு... இனி தொடர்ந்து சமுக பணியில் பல விஷியங்களை செய்வோம் என்றார்..

அவர் உங்கள் அனைவருக்கும் தன் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்..

சும்மா இல்லை இது வரலாறு :-) .... நம்ம மீடியா பலம், கட்சி பலம், பண பலம், குண்டர்கள் பலம் இது ஏதும் இல்லாமல் கலக்கிட்டார்

சரத்பாபுவிற்க்கு வாழ்த்துகள்...

ஏதேனும் மாற்றம் நடக்காதா என்று எண்ணி வாக்களித்த 17 அயிரம் நண்பர்களுக்கும் நன்றிகள்

எனது வேளச்சேரி நண்பர்கள் அனைவருக்கும் சரத்தை பற்றி சொல்லி இருந்தேன்.  30 நண்பர்களும்அவர்களுது குடும்பத்தோட  வோட்டு போட்டு விட்டு... சந்தோசமாய் அவங்க எனக்கு போன் போட்டு சொன்னார்கள்..

நன்றி நன்றி ...
களப்பணி, இணையபணி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி


~சக்கரை ~

   சுரேஷ்


சரத்தின் வோட்டு எண்ணிக்கை மற்றும் பலSocialTwist Tell-a-Friend

Thursday, May 14, 2009

வோடோஃபோன் zoozoo அனிமேஷன் இல்லை making மேகிங்க் ஆப் சூ சூ விளம்பரங்கள்

ZooZoo சூ சூ என்ற வோடோஃபோன் விளம்பரம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து உள்ளது, அது அனிமெஷன் என்று பலரும் ( என்னையும் சேர்த்து தான்) நினைத்து தவறு...

இந்த சூ சூ ZooZoo இப்போது பிரண்ட் ஆகிவிட்டது ... ஆம் இது வரை பேஸ்பூகில் ZooZoo சூ சூ என்ற பேஜ்க்கு 1,75,367 பேன்ஸ் ... அதனால் வோடோப்போன் இப்போது   மேகிங்க் ஆப் சூ சூ zoo zoo என்று வெளியிட்டுள்ளது .. பார்த்து ரசியுங்கள் பிடித்தால் வோட்ட போடுங்க...

ZooZoo community on Facebook






புடிச்சா வோட்ட போடுங்க


வோடோஃபோன் zoozoo அனிமேஷன் இல்லை making மேகிங்க் ஆப் சூ சூ விளம்பரங்கள்SocialTwist Tell-a-Friend

கலைஞரின் மன்னிக்க முடியாத வரலாற்று பிழை

கலைஞரிடம் 40 எம்.பி ஸீட் இருந்தது, அவர் நினைத்து இருந்தால் ஆதரவு வாபஸ் என்று சொல்லியாவது ஈழத்து போரை நிறுத்தி இருக்க முடியும்...

எலக்ஷன் டைமில் உண்ணாவிரதம், தனி ஈழம், என்று எல்லாம் சொல்லி காமெடி பண்ணியது தான் மிச்சம்..

இந்த தடவை திமுக, அதிமுக இருவருக்கும் 40 ஸீட் கிடைக்காது  20 டூ 25 + தான் அதனால் தமிழகம் மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாய் இருக்காது ...

காங்கிரஸ் திமுக ஜெயித்தால் அவர்களோடு கூட்டனி, அதிமுக ஜெயித்தால் அவர்களோடு என்று மாறிவிடும்...

அம்மாவின் ஆதரவு பெற ஒரே கண்டிஷன்... திமுகவுக்கு கொடுக்கும் மாநில ஆதரவை விலக்கி,  ஆட்சியை கலைக்க வைக்க வேண்டும்...
ஆதலால் இந்த முறை யாரு செயித்தாலும்  ஈழத்துக்கும் ஒரு தீர்வு கிடைக்காது...

சீக்கிரமா முடிக்க சொல்லி இலங்கைக்கு நெருக்கடி.
இல்லை என்றால் உலக நாடுகள் தடுத்து விடும்...

அப்பாவி மக்களும், குழந்தைகளின் கணவுகளையும் சிதைத்து விட்டு...

என்ன சொல்ல

கலைஞர் மன்னிக்க முடியாத வரலாற்று பிழை செய்து விட்டார்
கலைஞரின் மன்னிக்க முடியாத வரலாற்று பிழைSocialTwist Tell-a-Friend

Wednesday, May 13, 2009

தேர்தலுக்கு அப்புறம் யாரு ஜெயிப்பாங்க ?- வடிவேல் காமெடி

தேர்தல் முடிந்து போச்சு, இவங்க ஜெயிப்பாங்க என்று அவங்களும், அவங்க செயிப்பாங்க என்று இவங்களும் சொல்வதை பார்த்தா இந்த வடிவேல் காமெடி தான் நியாபகத்துக்கு வருது....  நீங்களும் பார்த்து சிரியுங்க ..
மே 16 நிலவரம் தெரியும்...


தேர்தலுக்கு அப்புறம் யாரு ஜெயிப்பாங்க ?- வடிவேல் காமெடிSocialTwist Tell-a-Friend

Saturday, May 09, 2009

ஜெயா டிவியில் கலைஞர் உண்ணாவிரதத்தை காமெடி பண்ணிட்டாங்க

நான் பொதுவா ஜெயா டிவி எல்லாம் பார்ப்பதே இல்லை, இன்று என் மாமா, "கலைஞர் உண்ணாவிரத்தை"  ஜெயா டிவியில் காமெடி பண்ணிட்டாங்க  என்று சொன்னார். யூ டியூபில் தேடி பிடித்து பார்த்து நிஜமா சிரித்துவிட்டேன்...

என்னை மாதிரி நிறையா பேரு பாத்து இருக்க மாட்டிங்க ... பார்த்து சிரிங்க...

குறிப்பு - கலைஞரை காய படுத்த விரும்பவில்லை,சீரியசா அவரு செஞ்சது இப்படி காமெடி பண்ணிட்டாங்களே...










ஜெயா டிவியில் கலைஞர் உண்ணாவிரதத்தை காமெடி பண்ணிட்டாங்கSocialTwist Tell-a-Friend

தமிழிஷின் மோசடி

நானும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறேன் ...

தமிழ்ஷில் முன்பு என் பதிவு 9 வோட்டு வாங்கினாலே பப்ளிஷ் ஆகிடும், ஆனா சில திணங்களாக 13-18 வோட்டு வாங்கினாலும் அப்படி ஆவது இல்லை.

எனது டாப் மொஸ்ட் பதிவு அதிகம் வோட்டு பெற்ற பதிவு கலைஞர் 59 வோட்டுகள் வாங்கின பதிவு கணக்கு முடக்கப்பட்டது எல்லாம்  கருத்து மொதல் எற்பட்ட பிறகு தான்...

இப்போது அந்த பதிவு TOP POSTS in YEAR யில் இல்லை...

நான் அதற்க்கு மெயில் செய்து சப்ப பதில் தான் வந்தது... காரணம் என் கமெண்ட்ஸாம்

அடுத்து எந்த பதிவு அதிக வோட்டு வாங்கினாலும் பப்ள்ஷ் செய்வது இல்லை

ஆனால் அதையும் தாண்டி சில பதிவுகள் 5வது பக்கத்திற்க்கு போனாலும் மக்கள் 19 வோட்டு போட்டு சில பதிவுகளை பப்ளிஷ் செய்ய வைத்தார்கள்

சரி இனி நான் ஏப்ரல் 30 ஒரு பத்து நாட்களுக்கு முன் அனுப்பிய மெயில் பாருங்க

Even after getting 15 votes mine is not published in main page


Suresh G ✆

 to service
show details Apr 30 (9 days ago)
Reply
Follow up message
Even after getting 15 votes mine is not published in main page ( The same voters who voted for other artcile 9 votes got publsihed)


So its not the voters, who voted. Also i thought if the old article gets max vote it will not be published in Tamilsh home page and left many, but this was my yesterday's article and got maximum votes..  Please explain me i may be wrong.


ஆளும் கட்சிக்கு வோட்டு ?


Even after getting 13 votes mine is not published in main page
சிலேட்டு சின்னத்தை பார்த்து. போடுங்கம்மா ஒட்டு !
Suresh
Reply
Forward

Tamilish Service ✆

 to me
show details Apr 30 (8 days ago)
Reply
Follow up message
திரு. சுரேஷ் அவர்களுக்கு,


தொடர்பு கொண்டதற்கு மிக்க நன்றி . ஓட்டுகள் தொடர்பான சந்தேகங்களுக்கு  இந்த இடுகையை பார்க்கவும். http://blog.tamilish.com/pakkam/70 .


இடுகையின் மதிப்பு வாக்கு எண்ணிக்கையை விட வாக்கு அளிக்கும் உறுப்பினரின் வாக்கு மதிப்பை சார்ந்தது. உறுப்பினரின் வாக்கு மதிப்பு ஒவ்வொரு 15  நிமிடங்களுக்கும் அவர்களது செயல்பாடு பொறுத்து மாறும். 15 நிமிடங்களுக்கு முன்பு பத்து உறுப்பினர்கள் வாக்களித்த இடுகை பிரபலமானால்  அடுத்து அவர்கள் வாக்குகள் அளிக்கும் அனைத்து இடுகைகளும் பிரபலம் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாக்களிப்பவரின்  ஓட்டு மதிப்பு ஒரே மாதிரி எல்லா நேரமும் இருப்பதில்லை.


உங்கள் சந்தேகத்திற்கு இந்த பதில் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும் சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் தொடர்பு கொள்ளவும்.


நன்றி


அருண்
For Tamilish.com
- Show quoted text -




On Thu, Apr 30, 2009 at 7:41 AM, Suresh G <suresh.sci@gmail.com> wrote:
Even after getting 15 votes mine is not published in main page ( The same voters who voted for other artcile 9 votes got publsihed)


So its not the voters, who voted. Also i thought if the old article gets max vote it will not be published in Tamilsh home page and left many, but this was my yesterday's article and got maximum votes..  Please explain me i may be wrong.


ஆளும் கட்சிக்கு வோட்டு ?


Even after getting 13 votes mine is not published in main page
சிலேட்டு சின்னத்தை பார்த்து. போடுங்கம்மா ஒட்டு !
Suresh
Reply
Forward

Suresh G ✆

 to Tamilish
show details Apr 30 (8 days ago)
Reply
Follow up message
Thanks a lot Arun,

For your wonderful reponse ;) before i used to get my posts published in main page, i love tamilish and felt bad thats why asked you, got the response thankyou, i will try to put better posts, thanks for your support

Suresh

2009/4/30 Tamilish Service <service@tamilish.com>

என்று பதில் சொல்லி இருந்தேன் ...



"அடுத்து அவர்கள் வாக்குகள் அளிக்கும் அனைத்து இடுகைகளும் பிரபலம் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாக்களிப்பவரின்  ஓட்டு மதிப்பு ஒரே மாதிரி எல்லா நேரமும் இருப்பதில்லை." - தமிழ்ஷ் சொன்னது



இப்படி எல்லாம் கோடு அடிக்க வாய்ப்பு இல்லை, சும்மா விடுறாங்க மச்சான் கதை, டைம் பேஸ் பண்ணி அதே வோட்ட்டர் போடுற வோட்டு என்று இருக்க முடியாது, வோட்டர் மதிப்பு வேணா இருக்கலாம் ஆனா அதே 9 வோட்டர் போட்ட டைம் வேற என்று சொல்வது எல்லாம் காதுல பூ என்று என் நண்பர்களும் சொன்னார்கள்

ஆனாலும் நான் நம்பிக்கிட்டு இருந்தேன்


ஆனா மேட்டர் என்னா இப்போது என் நண்பன் ஷ்ங்கர் மெயில் பண்ணி இருந்தான் அதை பாருங்க
fromshankar 
sender-timeSent at 8:54 AM (GMT+05:30). Current time there: 9:54 AM. ✆


மச்சி இங்க தொடரும் இடுகைகளில் submitted 20 hours ago என்று காண்பிக்கிறார்கள். ஆனால் தமிலிஷ் வெப்சைட்டில் தொடரும் இடுகைகளில் இந்த பதிவையே காணோம்! - ஷங்கர்



இத பார்த்த பின்பு நான் எடுத்த ஸீரின் ஸாட் பாருங்க 


என் பதிவு submitted 20 Hours Ago ஆனா காமெடி என்ன வென்றால் கொக்க மக்க Most Popular in தொடரும் பதிவுகளில் மாதவராஜ் பதிவு Submitted 1 day 32 minutes ago அதற்க்கு 7 வோட்டு, அடுத்து மச்சான் கார்த்திகை பாண்டியன் பதிவு இருக்கு submitted 23 hours ago அதுக்கு 6 வோட்டு 


ஆனா என் பதிவு submitted 20 hours ago அதுக்கு 13 வோட்டு வாங்கி இருக்கு அதை காணோம் பாருங்க மக்களே !


நீங்களே நியாத்தை சொல்லுங்க இனி தமிழ்ஷில் submit panama நெல்லை தமிழ், தமிழ்மணத்தை நம்ப வேண்டியது தான்








நன்றி
சுரேஷ்














தமிழிஷின் மோசடிSocialTwist Tell-a-Friend

கணக்குவழக்கு

 

Copyright 2008 All Rights Reserved