பரிட்ச்சையில் சீரோ பதிவில் 200 ஆ ???
நாங்க சின்ன வயசுல ( அரம்பிச்சிட்டான் டா ஆட்டோகிராப் சேரன்)
சரி .. கல்லூரியில் படிக்கும் போது கூட 100க்கு 100 வாங்கியது இல்லை இதோ பதிவில் 200 ஹம் நம்மல நம்பி பாலோ செய்யுற அந்த நல்லவங்கள நினைச்சா எனக்கு அதிசியமா தான் இருக்கு ...
அந்த நல்லவங்களுக்கு என்னத்த கொடுத்து (சொல்லி) பாராட்ட ( எதை கொடுத்தாலும் ஓக்கேனு சில வாண்டு பசங்க சொல்லுவாங்க ) இப்போதைக்கு என் மனசையும் நேரில் பார்க்கும் போது டீரிட்டும் கொடுத்து ( நீங்க கொடுத்து) பாராட்டுவேன்
வந்து நாலு மாசத்தில் 200 பாலோவர்ஸ் ...
ரொம்ப பொறுப்பை கொடுத்து என்னை கெடுத்துடுச்சு :-) இனி நான் எப்படி மொக்கை எழுதுவேன்
பெண்கள் கீழே விழுகிறார்கள்
நான் என் நண்பன் ராசாவும் ஊருல வண்டியில் போகும் போது எப்போதும் வேகமா போவோம் அன்று கொஞ்சம் மெதுவா போனோம்..
எதிரே 3 பேரு டிரிபில்ஸ் ( 3 பேர் வந்த தான் டிரிபிள்ஸ் இல்லைனா டபிள்ஸ் சிங்கிள்ஸ்னு ) வந்து வண்டியில் இடிக்க கீழே விழுந்துதோம்..
அப்போ சைடில போனவன் வந்தவன் எல்லாம் உங்களுக்கு எல்லாம் வேணும்டா.. என்னைக்காச்சும் விழுவிங்கனு நினைச்ச்சோம்னு டையலாக் வேற ... அட பாவிகளா விழுந்தவனை தூக்குங்கடா..
அதே நேரம் அந்த சைடில் ஸ்கூட்டியில் ஒரு பார்டி அது பாட்டியா இருந்தா கூட இவங்க கண்ணுக்கு ஏஞ்சல் தான்.. விழுவக்கூட இல்லை உடனே இவங்க என்ன மேடம் ஆச்சுனு சொல்லுறான் ஒருத்தன் இன்னொருத்தன் ஆட்டோனு சொல்லுறான் இன்னொருத்தன் என் பைக்கில் உட்காருங்க டாக்டர்கிட்ட போகலாம்னு சொல்லுறான்.. இன்னொருத்தன் சோடானு சொல்லுறான்..
டேய் தள்ளிவிட்டதே இந்த 3 பொண்ணு தாண்டா ...
விசாரிச்சா லைசன்ஸ் கூட இல்லை அந்த பெண்களுக்கு அட சாமி கத்துகிறாங்களாம் ..நல்ல வேளை தப்பிச்சோம்..
இப்படி இருக்க..
இப்போ ஒரு டிவி நிகழ்ச்சி அனு அளவும் பயம் இல்லைனு பெயர் ... ஜஸ் மேல் உட்காந்து போஸ் குடுத்து ஐஸ் சாப்பிடும் அழகை பார்த்து இருப்பிங்களே
விட்டில் பல்லிக்கு பயம் காணும் என் மணைவி கூட பல்லை பிடிங்கின பாம்பினை கொடுத்து ஒரு போஸ் கொடுக்க சொன்ன கொடுப்பாங்க..
AXN Fear Factor மாதிரி விளம்பரம் பார்த்துட்டு இருந்த நான்
நேத்து தெரியாம ஒரு சில நிமிடம் பார்த்தேன்..
அதுல மேல இருந்து குதிக்க ஒரு பெண் ரெடியா இருக்காங்க அதுவும் செம மேக்கப்போட இதுல பத்து கோணங்களில் சாட் வேற ...
பயம் போக்க இப்படி ஒரு ஐடியாவாம் ... அந்த ஐடியாமணி மட்டும் கிடச்சார் கார்கில் பார்டரில் நிக்கவைச்சிடனும்..
குதிக்கனுமா பயம் இல்லைனு புரியவைப்பாங்களாம்.. அட பாவிகள என்ன நடக்குது .. கீழே விழுந்தவுடன் அட பாவமே என்று நம்ம சொல்ல
பின் குரலில் எப்படினு இன்னொரு முறை பார்ப்போமா ... அப்படினு ஒரு ஸ்லோ மோஷன் வேறை ...
ஒருத்தருக்கு கை போச்சு .. இன்னொருத்தருக்கு கால் எப்பா சாமி உடனே ஆம்புலன்ஸ் ..
என்ன ஆச்சு கை உடைந்த்தாஅடுத்த ரவுண்டு வருவாங்களா அடுத்த வாரம் பார்ப்போம்..
பயம் இல்லாதவர் எவரும் இல்லை ஆனான பட்ட ரவுடியா இருந்தாலும் சிங்கிளா இருந்தா டர் தான்..
அப்படி இருக்க அடுத்த பிரபுதேவா மாதிரி அடுத்த காமராசர் ; அடுத்த திரசானு ஏதாச்சும் இவங்க நடத்தி ஊரு ஊரா சென்று நல்லவர்களை கண்டு பிடித்தால் நல்லது தான்..
அனுஅளவும் பயம் இல்லைனு இப்படி ஒரு சில மொக்க சேலஞ்சஸை கொடுப்பதற்க்கு பதில் எதாச்சும் நல்லதாய் செய்தால் ரைட்டுதான்..
யார் கீழே விழுவதை பார்த்தாலும் பாவம் என்று தான் தோன்றும்
ஆனா நம்மளே விழ வைத்து அதை எப்படி விழுந்தார்னு ஒரு 3 கோணங்களில் காட்டுவது ஹம்பக்.. அதை பார்த்த என்னை என்ன சொல்லி திட்டுவது ;)
Friday, July 31, 2009
Monday, July 27, 2009
மாறும் மடிகள் - மாறும் காதல் - மாறும் ரசிப்பு - மாறும் பெண்கள்
சின்ன வயசுல ( பள்ளிக்கு போகும் முன்)
அவள் மடியில் படுத்துக்கொண்டு
அவள் அழகை ரசித்து ...
அம்மா
நீ தான் உலக அழகி என்றேன்
உன் சிரிப்பே
உலகத்தில் சிறந்தது என்றேன்
பள்ளிப்போகும் வயசுல ( 3ஆம் வகுப்பு)
அவள் மடியில் படுத்துக்கொண்டு
அவள் அழகை ரசித்து ...
தோழி
நீ தான் உலக அழகி என்றேன்
உன் சிரிப்பே
உலகத்தில் சிறந்தது என்றேன்
கல்லூரிக்கும் போகும் வயசுல
அவள் மடியில் படுத்துக்கொண்டு
அவள் அழகை ரசித்து ...
காதலி
நீ தான் உலக அழகி என்றேன்
உன் சிரிப்பே
உலகத்தில் சிறந்தது என்றேன்
கல்யாணம் முடிந்த பின்
அவள் மடியில் படுத்துக்கொண்டு
அவள் அழகை ரசித்து ...
மனைவி
நீ தான் உலக அழகி என்றேன்
உன் சிரிப்பே
உலகத்தில் சிறந்தது என்றேன்
அப்பா ஆனவுடன்
அவள் மடியில் படுத்துக்கொண்டு
அவள் அழகை ரசித்து ...
மகளே
நீ தான் உலக அழகி என்றேன்
உன் சிரிப்பே
உலகத்தில் சிறந்தது என்றேன்
தாத்தா ஆனவுடன்
அவள் மடியில் படுத்துக்கொண்டு
அவள் அழகை ரசித்து ...
பேத்தி
நீ தான் உலக அழகி என்றேன்
உன் சிரிப்பே
உலகத்தில் சிறந்தது என்றேன்
கடைசியில்
அவள் மடியில் படுத்துக்கொண்டு
பூமாதேவியே ....
.....................................................................
டிஸ்கி -
பேத்தி மற்றும் மகள் மடியில் படுத்தா வெயிட் தாங்குமா என்று எல்லாம் மொக்கை கேள்வி வேண்டாம் ;) சின்ன குழந்தைங்க போதுவா 3-4வது வகுப்பு படிக்கும் போது இப்படி மடியில் படுக்க சொல்லி சொல்லுவாங்க..
பெயருக்கு தலை வைப்போம் ..புல் வையிட் வைச்சா கப்பல் கவுந்துடும்யா ;)
Tuesday, July 07, 2009
Happy Life - சந்தோச வாழ்க்கை - அருமையான பதிவு மற்றும் இடைவெளி
இது புகைப்பட பதிவு மிக அருமையான கருத்துகள் மற்றும் படங்கள் ... ஒன்று இரண்டு எனக்கும் ரொம்ப பிடிச்சது ... பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு இப்படி சந்தோச வாழ்க்கைக்கு பதிவு போட்டு திரும்பினா மனைவி கோபமாய் இந்த கம்பூட்டரே கட்டிக்கிட்டு அழுங்க ;) இந்த பிளாக்கை மூடினா சந்தோசம் தானா வரும்... அவ்... நண்பர்களே சிறிது கால இடைவெளிக்காகவும், வேலைக்காவும் , சிறிது ஓய்வுக்கும் நமது சக்கரை கடைக்கு இன்னும் சில திணங்கள்/மாதங்களுக்கு லீவ் . இந்த இடைவெளியில் யாராச்சும் 'ண'க்கு 'ன' போட்டு பின்னூட்டம் போட்டால் அது நான் இல்லைங்கோ. அப்படி கருத்து சொல்லனும் என்று தோன்றினால் நானே வருவேன் என் பெயரில் என்னை பத்தி பதிவு போட்டா தயவு செய்து மெயில் யாரும் அனுப்பாதிங்க பதிவுலகம் பக்கம் வராமல் சந்தோசமாய் சில காலம் இருக்க போகிறேங்கோ |
Labels:
பதிவுலக போதை,
பதிவுலகம்,
லீவ்
| Reactions: |
Thursday, July 02, 2009
சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா
இது நான் பைத்திகாரன் பதிவில் பின்னூட்டமாய் போட்டது ரொம்ப பெரிசா போச்சு அதான் பதிவாய்..
( குறிப்பு ;- இதற்க்கு மிருக சண்டை படம் வேண்டாம் என்று நினைத்தேன் ஆனா என்ன செய்ய நம்ம அவங்கள மாதிரி தான் சில நேரம் சண்டை போடுறோம்)
மத்த படி இந்த புகைப்படம் தாக்குதலுக்கு அல்ல
இவ்வளவு பாலிடிக்ஸ் நடக்குது என்று இப்போ தான் எனக்கு தெரியும் காரணம் நான் பதிவுலகத்துக்கு வந்து 3 மாசம் தான் ஆகிற்று.. நான் சாருவின் பதிவுகளும் சரி ஜெவின் பதிவுகளும் சரி சத்தியமாய் படிச்சதில்லை ....நம்ம சக பதிவ்ர்களின் பதிவுகளை படிப்பதோடு சரி...
சென்ற இடம் எல்லாம் சிறப்பு மாதிரி (நரசிம்.. லக்கி... ஆதிஷா ) உங்கள(பைத்திகாரன்) சுரேஷ் கண்ணன் என்று எல்லாரும் இது பற்றி எழுதி இருந்ததால் என்ன மேட்டர் என்று தொடர் பதிவுகளை படித்துவிட்டு படித்தேன்.
இனி வருவது சாரு, ஜெ மற்றும் ஜெக்கு மட்டும்...
மற்ற படி குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுத்தா நான் பொருப்பு இல்லை
அந்த அமர்நாத் கடிதம் ரொம்ப கேவலமாய் இருந்தது அதை ஒருத்தர் உண்மையில் எழுதி இருந்தாலும் கூட அதை இப்படி ஆன் லைனில் போட்டு இப்படி அசிங்க படுத்தி இருக்க வேண்டாம்..
அதற்க்கு பைத்திகாரனின் முதல் பத்தியும் பதிலுக்கு பதிலாய் இருந்ததும், ஆதிஷாவின் முதல் பத்தியும் எனக்கு தப்பாய் தான் தெரிந்தது..
பைத்தியகாரன், நீங்கள் எழுதியது எனக்கு பலது சரி என்று பட்டது, நிறையா பெயர்கள் அறிமுகமாயிற்று.. நம்ம இந்த லைனுக்கு புதுசு ஆனாலும் சிலது நீங்களும் அரசியல்வாதி ஆகிட்டிங்களே என்று முதல்வன் பானியில் சொல்ல தான் தோனுது...
சாருவோ, ஜெவோ எதுக்கு இப்படி மாத்தி மாத்தி அசிங்க படுத்தி காறி உமிழாத குறை தான் .. நம்ம எல்லாம் சாரி நீங்க எல்லாம் நல்ல எழுத்தாளர்கள் நல்லா எழுதுங்க.
(இங்க தான் அந்த மேலே உள்ள மிருக சண்டை படம் இருந்தது தவறாய் எடுத்துகொண்டால் அதான் மாற்றி விட்டேன்)
எனக்கு மிகவும் பிடித்தவர் தெரிந்த எழுத்தாளர் சுஜாதா.. காரணம்
நீங்க சொன்ன மாதிரி சிறு பத்திரிக்கைகள் , மற்றும் பல புதியவர்க்ளை ஊக்கம் கொடுத்தவர் முக்கியமா அடுத்தவரை திட்டி நான் பார்த்தது இல்லை...
நேரில் ஒரு முறை சந்தித்து பேசி இருக்கிறேன் திருச்சி காரர் அன்பானவர், நல்லா பேசினார்.
சின்ன சின்ன கதைகளை எழுதும் அனைவருமே நல்ல எழுத்தாளர்கள் தான்
எப்பா சாமி எல்லாரும் நல்லா நட்பாய் இருங்களேன் ...
இது பெரிய எழுத்தாளார்களுக்கு
நான் பெரியவ்ன், நீ பெரியவன் என்று ஒரு பயலும் இல்லை
எல்லாம் செத்தா மண் தான்..
எழுதுங்க நாலு பேரு காயபடுத்தாமா சந்தோசமா எழுதுங்க
ஊரு அடிச்சிகிட்டு சட்டையை கிழிச்சிகிட்டா 100 பேரு என்ன 1000 பேரு கூட பார்த்து, நல்லா கைக்கூட தட்டுவான்
இங்க பார் என்னை 1000 பேரு பாக்குறான் என்று எழுத்தாளர்கள் பெருமையா நினைப்பதை தவிர்த்து பேசாமா நல்லா எழுதுங்க
ஒரு நல்ல படைப்பாளி யாரு தெரியுமா... அடுத்தவனை மனிதனாய் மதிக்க தெரிந்தவன் மட்டுமே..
திருந்துங்க எழுத்தாளர்களே..( இப்படி மட்டமா எழுதினா என்னை மாதிரி புதுசு கூட அட்வைஸ் செய்யும்)
எவனும் பெரியவன் இல்லை எல்லாம் சமமான எழுத்தாளர்கள் தான்
எங்களை மாதிரிஆளுங்களுக்கு ரோல் மாடலாய் இருக்கவேண்டியவர்கள் சண்ட போட்டா என்ன சொல்ல முடியும் ..நானும் ஏதாவது ஒரு பக்கம் நின்று கைத்தட்டவோ ஊதவோ முடியாது..
இதை சொல்லுவதால் நான் உத்தமன் இல்லை..இது என்னை ஒரு புனிதனாய் காட்டும் முயற்சியும் இல்லை... ஏனா நானே சொல்லுறேன்... நான் ரொமப நல்லவன் இல்லை..ஆனா இப்படி அடிச்சிக்க மாட்டேன்...
பல பதிவர்கள் நல்ல பதிவுகள் போட்டும் நேரத்தை உங்க ரெண்டு பேரு சண்டையால் இப்படி வீண் அடிக்காத்தீர்கள். ( நாங்க அப்படி தான் அடிச்சிப்போம், நாங்க உங்களை பதிவு போட சொன்னமா என்று கேட்க) என்ன செய்ய எழுத்தை காதலிக்கும் காதலர்களுக்கு நீங்களும் ஹீரோக்களே.. ஆமா நீங்க அடிச்சிகிட்டா அதுக்கும் ஒரு இருபது பதிவு வருது... என் பதிவையும் சேர்த்து தான்..
பார்த்து ஹீரோக்களாகிய நீங்கள் இப்படி அடிச்சி புடிச்சி காமடியர்களாய் மாறிவிடாதீர்கள்
இது ஒரு சக பதிவர் என்ற முறையில் மட்டுமே இநத பதிவு..
யாரும் நம்மளை நாமே அசிங்க படுத்திக்க வேண்டாம்....
யாவரும் மனிதர்களை எவரும் யோக்கியர்கள் இல்லை..
நான் தான் பெரிய ஆளு என்ற உங்கள் கோபத்தை,
உங்கள் படைப்பில் காட்டுங்கள்..
நீங்களும் சரி இப்போது புதுசாய் ஒரு நல்ல கதையை பதிவாய் எழுதும் பதிவரும் சரி எனக்கு இருவரும் ஒன்னு தான்..
இருவரும் எழுத்தாளன் தான் என்னை பொருத்த வரை..
நல்ல விஷியங்களை எழுதும் எவனுமே நல்ல எழுத்தாளன் தான்..
ஸ்ப்பா இவ்வளவு நடந்து எனக்கு இப்போ தான் தெரிந்து இருக்கு ..
( என்னது இந்திரா காந்திய சூட்டாங்களா அவ்....)
நட்பாய் இருப்போம் நல்ல பதிவுகளை படைப்போம்
********
லக்கிக்கும் ஆதிஷாவுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் ...
பொதுவா நம்ம யாரயாவது ஏதாச்சும் மனசு காயப்படுத்துற மாதிரி எழுதிட்டா அவங்க பதிவு பக்கம் போக மாட்டோம், இல்லை பதிவை படிச்சாலும் பின்னூட்டம் போட மாட்டோம்..
ஆனா நான் இவர்களை தெரிந்தோ தெரியாமலோ காயபடுத்தி இருக்கலாம் அந்த எலக்ஷன் டைமில் .. ஆனா ஒரு பதிவை படிச்சு உண்மையா நல்லா இருந்தா, அதுக்கு உடனே கருத்து சொன்ன இவங்களை என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை..
எனக்கு லக்கியும் ஆதிஷாவையும் ரொம்ப பிடித்தற்க்கு இது ஒரு மிக பெரிய காரணம் ஒரு பதிவு நல்லா இருந்தா... உண்மையா நட்பாய் மனசுல ஏதும் வைச்சிகாம கருத்த சொன்ன நண்பர்களுக்கு என்ன கொடுத்தா தகும்..
என் நட்பை கொடுத்தா தகும்..
( அது எவனுக்கும் வேணும் கொஞ்சம் துட்ட கொடுயா ;) என்று சொல்லுவது கேட்கிறது ஹீ ஹீ)
அவர்களுக்கு என் மனமார்ந்த
நன்றிகள் ...
அனைவரும் சிரித்து சந்தோசமாய் இருப்போம்.. நட்புடன் .. சுரேஷ்
Labels:
ஆதிஷா,
சாரு,
சுரேஷ் கண்ணா,
ஜெமோகன்,
நரசிம்,
பதிவுலம்,
பைத்தியகாரன்,
லக்கி
| Reactions: |
Wednesday, July 01, 2009
உரையாடல் சிறுகதை போட்டி மிக பெரிய வெற்றி ... 219 கதைகள் அம்மாடியோவ் !

உரையாடல்-சமூக கலை, இலக்கிய அமைப்பு க்கு நன்றி
நண்பர் பைத்திகாரன் மற்றும் இதற்க்காக உழைத்த நபர்கள், பதிவர்கள், திரட்டிகள் அனைவருக்கும் ஒரு சக பதிவர் என்ற முறையில் நன்றிகள்..
20 கதைகளுக்கு பரிசு, என்பதை விட மிக பெரிய விஷியம் என்னவென்றால்
இந்த போட்டி பல பதியவர்களை சிறுகதை எழுத தூண்டியது.
இந்த போட்டி பல பதியவர்களை சிறுகதை எழுத தூண்டியது.
பரிசு என்பது ஒரு கலைஞனுக்கு இரண்டாம் பட்ச்சம். பாராட்டு தான் மிக பெரிய பரிசு ஆனா நம்ம நண்பர்கள் இதற்க்கு 1500 பரிசும் கொடுக்கிறார்கள்..
ரொம்ப சந்தோசம்.. தான்
219 கதைகளில் 20 கதைகள் தேர்ந்து எடுப்பது, அதுவும் பெயர் பாராமல் கதையின் தரம் பார்த்து எடுப்பது மிக கடினமான வேலை தான்.
எந்த சந்தேகமும் வேண்டாம் கண்டிப்பாய் ஒரு குழு வைத்து நடு நிலமையோடு தேர்ந்து எடுப்பார்கள்..
இந்த 219 கதைகளை படிக்கவே எப்பா சாமி கண்ண கட்டும் ;)
எல்லா கதைகளும் ஏதோ வைகையில் சிறந்த கதைகளே :-)
அந்த இருபதை படிக்க ஆவலாய் இருக்கோம்
நம்ம எல்லாம் எழுத தூண்டிய நண்பர் பைத்திகாரன் அவர்களுக்கு மிக பெரிய ????
ச ச நன்றி சொல்லி அவரை அந்நிய படுத்த விரும்பவில்லை :-)
பாராட்டுகள் சகா !
Labels:
உரையாடல்-சமூக கலை,
பைத்திகாரன்
| Reactions: |
Subscribe to:
Posts (Atom)









































